Published:Updated:

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?
பிரீமியம் ஸ்டோரி
நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

மு.நியாஸ் அகமது - படங்கள்: ஜெ.வேங்கடராஜ் - கே.ஜெரோம்ஓவியங்கள்: ஹாசிப்கான் - பிரேம் டாவின்ஸி

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

மு.நியாஸ் அகமது - படங்கள்: ஜெ.வேங்கடராஜ் - கே.ஜெரோம்ஓவியங்கள்: ஹாசிப்கான் - பிரேம் டாவின்ஸி

Published:Updated:
நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?
பிரீமியம் ஸ்டோரி
நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

ண்முகம், மூட்டைத் தூக்கும் தொழிலாளி. மகளை மருத்துவர் ஆக்குவதுதான் கனவு. மகள் அனிதாவை அல்லல்பட்டுப் படிக்க வைத்தார்.  ப்ளஸ் டூ தேர்வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 1176. மருத்துவப்படிப்பு கிட்டத்தட்டக் கையெட்டும் தூரத்திற்கு வந்துவிட்டதாக நினைத்தார். ஆனால், நடுவில் தடையாக வந்து நின்றது நீட்!   

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

நீட் தேர்வுக்கான கோச்சிங் கிளாஸில் சேருவதற்கு அப்பாவிடம் பணம் கேட்டார் அனிதா. கேட்ட தொகை சண்முகத்தின் ஒரு வருட வருமானம். அதனால், கனத்த இதயத்துடன் மறுத்துவிட்டார். இருந்தாலும், அனிதா தானாகவே முட்டி மோதிப் படித்து நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் 86. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவராக இருந்தாலும், மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை. காரணம் நீட் தேர்வு முறை!

இது அனிதாவின் கதை மட்டும் அல்ல. மருத்துவக் கனவில் இருந்த பலருடைய கதையும் இதுதான். ஒவ்வோர் ஆண்டும், மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை நடக்கும்போது செய்தித்தாள்களில் படித்திருப்போம். ‘ரிக்‌ஷாக்காரரின் மகன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். துப்புரவுத் தொழிலாளியின் மகள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்’ என்பது மாதிரி. இனி, அத்தகைய  ஊக்கமூட்டும் செய்திகள் வருமா என்று தெரியவில்லை. ஏழ்மையின் பிடியிலிருந்து  தப்ப, கல்வியில் கவனம் செலுத்தித் தீவிரமாக உழைத்த பலரின் கனவை ஒட்டுமொத்தமாகச் சிதைத்திருக்கிறது இந்த ‘நீட்’.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

``ரிக்‌ஷாக்காரரின் மகனும், துப்புரவுத் தொழிலாளியின் மகளும் ஏன் மருத்துவராக வேண்டும்? என்று கேட்பதுபோல இருக்கிறது நீட் தேர்வு. நாங்கள் இந்தச் சாதிய அடுக்குமுறையில் கீழ் நிலையில் இருப்பவர்கள். கல்வியால் மட்டும்தான் எழ முடியும். நீங்களெல்லாம் எழவே கூடாது என்கிறது இந்த நீட் தேர்வு” - இது அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்தின் கோபமான குரல்.

துரோகம் இழைத்த மாநில அரசு!

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதாவின் கனவை மட்டும் நீட் தேர்வு சிதைக்கவில்லை. மருத்துவரின் மகளான ஐஸ்வர்யாவின் கனவையும் சிதைத்திருக்கிறது. ஐஸ்வர்யா ப்ளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1,147. நீட் தேர்வில் 207. இப்போது அவராலும் தன் கனவான மருத்துவப் படிப்பில் சேர முடியாது. ஐஸ்வர்யாவின் அப்பா  ராஜேஷிடம் பேசினோம். “நீட் தேர்வெல்லாம் நடக்காது என்று எவ்வளவு நம்பிக்கை தந்தது மாநில அரசு. அந்த நம்பிக்கையில்தானே நாங்கள் இருந்தோம். இப்போது அந்த நம்பிக்கை அனைத்தையும் சுக்குநூறாக்கி வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறது. தன்னுடைய தவறை மறைக்க நீதிமன்றத்தைக் கைகாட்டிவிட்டு மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வேடிக்கை பார்க்கிறது அரசு. சென்ற ஆண்டு,  நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்குக் காரணமாகத் தமிழக மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டம் குறிப்பிடப்பட்டது. தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் இன்னும் மாற்றப்படாதபட்சத்தில், நம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பதன் அரசியல் என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார்.      

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

கட்டணக் கொள்ளை தடுக்கப்படுமா?

நீட் தேர்வால், கட்டணக் கொள்ளை முறைப்படுத்தப்படும் என்கிற பொதுவான பார்வை முன்வைக்கப்படுகிறது. அதன் சாதகமான அம்சமாகச் சொல்லப்படுகிற விஷயம் அதுதான். ஆனால், நம்மிடம் பேசிய மருத்துவர் எழிலன், அதன் இன்னொரு பக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். “எந்த ஏழை மாணவனும் தனியார் கல்லூரியில் மருத்துவம் படிப்பதில்லை. அவன் தேர்ந்தெடுப்பது அரசுக் கல்லூரியைத்தான். அதனால்தான், தமிழக அரசின் கல்லூரிகளுக்கும், தனியார் கல்லூரிகளில் அரசின் இருக்கைக்கும் நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு வேண்டும் என்கிறோம். அதை மறுப்பது சமூகநீதிமீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் அன்றி வேறல்ல. இதை வேறு எப்படியும் புரிந்து கொள்ளமுடியாது” என்றார்.

அவரே மேலும், “தனியார் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. அதை முறைப்படுத்தத்தான் இந்தத் தேர்வு என்கிறார்கள். சரி... இந்தக் கல்லூரிகளுக்கெல்லாம் அனுமதி கொடுத்தது யார், மத்திய அரசுதானே? இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, கொள்ளையடிக்கும் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்யத் திராணியற்ற அரசு, ஏதேதோ சப்பைக்கட்டுக் கட்டி நீட் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறது.      

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

இவர்கள் சொல்வதுபோல தனியார் கல்லூரிகளின் கட்டணத்தையாவது இந்தத் தேர்வு முறைப்படுத்தியிருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் கட்டணத்தை நான்கு மடங்கு
உயர்த்திவிட்டன. அதாவது இதுவரை திருட்டுத்தனமாக வாங்கப்பட்டக் கட்டணத்தை சட்டப்பூர்வமானதாக ஆக்கத்தான் இந்தத் தேர்வு உதவியிருக்கிறது” என்கிறார் எழிலன் காட்டமாக.

சைலன்ட் மோடில் தமிழக அரசு!

85 சதவிகித ஒதுக்கீடு அளிக்கும் வகையில், கொண்டுவரப்பட்ட அரசாணை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “இது மாநில அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. “கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவச் சேர்க்கை தொடர்பான இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, சட்ட வடிவம் கோரி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேல் ஆகியும், அது என்ன ஆனது என்று தெரியவில்லை. தமிழக அரசு, அதற்கு அழுத்தம் கொடுத்து அந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தால்,  தமிழக மாணவர்களுக்கு  இந்த நிலை ஏற்பட்டிருக்காது. குறைந்தபட்சம் நீட் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என்று சொல்லும் பாராளுமன்றத்தின் 92-வது அறிக்கையையாவது தமிழக அரசு நீதிமன்றத்தில் முன்வைத்திருக்க வேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை. தமிழக அரசு, மத்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு வேண்டுமென்றே இப்படிச் செயல்படுவதாகத்தான் தோன்றுகிறது” என்கிறார். 

மேலும் “தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது குறித்து விவாதித்த நாடாளுமன்ற நிலைக்குழு (சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை), தனது அறிக்கையில், பொது மருத்துவ நுழைவுத்தேர்வு ஒன்றைப் பரிந்துரைத்தது. அதே நேரம், இத்தேர்வை ஏற்காத மாநில அரசுகளுக்கு இத்தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். அப்படி விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள், சில ஆண்டுகளுக்குப் பின் இத்தேர்வை ஏற்க முன்வந்தால், அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அதாவது, கூட்டாட்சித் தத்துவத்தின்படி பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியில், மாநில அரசுக்குத்தான்  உரிமை இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், நீட் தேர்வைத் திணிப்பது கூட்டாட்சியை முன்மொழியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது” என்கிறார் பிரின்ஸ்.    

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

சுகாதார நிலையங்கள் இல்லாமல் போகும்!

டெல்லிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்விப் புலத் தலைவரான பேராசிரியர் அனில் சட்கோபால், `‘நீட் தேர்வுக்குப் பின்னால், சர்வதேச வணிக அரசியல் இருக்கிறது’’ என்கிறார். “உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில் ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்கு தடையில்லாமல், அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொதுச் சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில், மாணவர்கள் சில காலம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முற்றாக அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

ஐஸ்வர்யாவும், அனிதாவும் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பிற மாணவர்களும் தங்கள் ரத்தத்தால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அடுத்தகட்டப் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறார்கள். தமிழ் மாணவர்களின் பிரச்னையில், உரிய கவனம் செலுத்தாமல், அவர்களை வீதியில் நிறுத்திவிட்டு, ‘இப்போது மாணவர்களும், பெண்களும் போராடுவது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்கிறார் நம் முதல்வர்.

சமூக நீதி முதல் சர்வதேச சதி வரை நீட் விவகாரத்தில் சொல்லப்படுகிறது. மருத்துவம் குறித்த கனவில் இருந்த ஏழை எளிய மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி நிற்கிறது. ‘`நீட் தேர்வு சமூக நீதிக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது; மாநில உரிமைகளைப் பறிப்பது. இதனால், நான் அதை எதிர்க்கிறேன்’’ என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தீவிரமாக நீட் தேர்வை எதிர்த்தார்.

அவர் வழியில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று சொல்லும் தமிழக அரசு இப்போது என்ன செய்யப் போகிறது?

நீட் என்னும் அநீதி! - என்னவாகும் மாணவர்களின் எதிர்காலம்?

``நீட் தேர்வு, மாநில அரசுகளின் கீழ்வரும் கல்லூரிகளுக்கு மட்டும்தான். மத்தியக் கல்வி நிலையங்களான எய்ம்ஸ், ஜிப்மர், சண்டிகர் முதுகலை ஆய்வுக் கல்வி நிறுவனம் ஆகிய கல்லூரிகளில் சேர எல்லாம் நீட் தேர்வு கிடையாது. அதாவது, மருத்துவப் படிப்பில் மாநில அரசின் உரிமையை பறிக்க மட்டும்தான் நீட் தேர்வு” - மருத்துவர் எழிலன்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism