Published:Updated:

கனவாகும் மருத்துவக் கல்வி

கனவாகும் மருத்துவக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கனவாகும் மருத்துவக் கல்வி

கனவாகும் மருத்துவக் கல்வி

கனவாகும் மருத்துவக் கல்வி

கனவாகும் மருத்துவக் கல்வி

Published:Updated:
கனவாகும் மருத்துவக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கனவாகும் மருத்துவக் கல்வி

மிழக மாணவர்களின் கனவுகளைச் சிதைத்துவிட்டார்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துக் கல்லூரிக்குள் நுழையும் பருவம்தான் ஒரு மாணவன் தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் நேரம். அந்தச் சூழ்நிலையையே கலங்கவைத்துவிட்டார்கள். ‘நீட்’ தேர்வு மிகப்பெரிய எமனாக வந்து இறங்கியிருப்பதாக இந்த மாணவர்கள் கொதிக்கிறார்கள்.

கனவாகும் மருத்துவக் கல்வி



இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தேர்வு நடத்தி, ஒரே மாதிரியாகத் திருத்தி, மருத்துவக் கல்லூரிகள் அனைத்துக்கும் மாணவர்களை அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் பங்கீடு செய்வதுதான் நீட் தேர்வு. மேலோட்டமாகப் பார்த்தால், இது நியாயம்தானே என்று தோன்றும். ஆனால், ஒரே மாதிரியான பாடப்புத்தகங்கள், கல்விமுறைகள் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான தேர்வு மட்டும் எப்படிப் பொருந்தும் என்பதுதானே சரியான கேள்வியாக இருக்க முடியும்?

இந்தியா முழுக்க மருத்துவ மாணவர்களைத் தேர்வு செய்ய நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தான். 95 சதவிகிதம் பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஆக, தமிழகத்தைப் பொறுத்தவரை 95 சதவிகிதம் பேரைப் பழிவாங்கும் தேர்வுதான் நீட் தேர்வு. இதற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றம் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பியது. அவற்றை ஏற்கிறோமா, மறுக்கிறோமா என்று மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை.

மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவிகிதம் சீட்டுகளை, தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஓர் உத்தரவு போட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால், மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. என்ன மாதிரியான கேள்விகள் இருக்கும், எதை நீங்கள் படிக்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லாமல், 85 ஆயிரம் மாணவர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது?

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தின்மீது உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க-வின் ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு அவசியமாக இருந்த நிலையில், இதை அ.தி.மு.க. அரசு உறுதியாக இருந்து சாதித்திருக்க வேண்டும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றாமல், தனக்குள்ள எம்.பி-க்களின் பலத்தை ஒன்று திரட்டி, 85  சதவிகித இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இல்லையென்றால், தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு கானல் நீராகிவிடும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism