ரு பிரச்னை தீவிரமாகும்போது, சில ஊர்களை `தமிழகத்தின் பதற்றமான பகுதிகள்’ என அடையாளப்படுத்துவார்கள். நெருக்கடிக் காலங்களில் காவல்துறை அங்கு கூடுதல் கவனம் செலுத்துவது உண்டு. அதுபோலவே, நம் உடலிலும் அப்படி சில ஏரியாக்கள் உள்ளன. தினமும் குளிக்கும்போது அந்தப் பகுதிகளுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வணக்கம் போட்டுவைப்பது நல்லது.    

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15

நகக்கண்கள்

சின்ன விஷயம்தான். ஆனால், சிக்கலான விஷயம். தினமும் எத்தனையோ அசுத்தமான பொருள்களைத் தொடுகிறோம். அதிலிருக்கும் அழுக்குகள் நகத்துக்கு அடியில்தான் இறக்குமதி ஆகின்றன. அவற்றை வெளியில் இழுத்து ஒழிக்கவேண்டியது நம் வேலை. நகத்தை வெட்டுவதைவிட நகத்தின் கீழ் இருக்கும் அழுக்கை நீக்கவேண்டியது அவசியமான ஒன்று.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15

தொப்புள்

வீட்டை ஒன்றிரண்டு நாள்கள் கூட்டாமல் விட்டுப் பாருங்கள். உதிரும் முடிகளும், குப்பைகளும் அறையில் ஏதாவது ஓரிடத்தில் ஒன்றாகச் சுருண்டு கிடக்கும். நம் உடலில் அந்தப் பகுதி தொப்புள்தான். குளிக்கும்போது பெரும்பாலும் நாம் கண்டுக்கொள்ளாமல்விடும் ஓர் ஏரியாவும், இந்தியர்களின் உடலில் அசுத்தமான பகுதியும் இதுதான். `லோ ஹிப்’ போடும் பழக்கம் இல்லாதவர்களும் சுத்தமாக வைத்திருக்கவேண்டிய ஒன்று தொப்புள்.

முன்னங்கை

நம்பமுடியாத இன்னொரு விஷயம் இது. `மணிக்கட்டுக்கும் முழங்கை மூட்டுக்கும் இடையில் இருக்கும் பகுதியில்தான் அதிகக் கிருமிகள் வாழும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். குளிக்கும்போது இந்தப் பகுதி மிகவும் அலட்சியமாகக் கையாளப்படுவதே இதற்குக் காரணம்.    

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15

வாய்

துர்நாற்றம் வராதவரை வாய் சுத்தமாக இருப்பதாகவே நாம் நம்புகிறோம். வாயில் மட்டும் 615 வகையான பாக்டீரியாக்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அடுத்தமுறை, என்ன சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க மறக்காதீர்கள்.

பெரும்பாலும் ஹைஜீன் என்றாலே நம் உடலில் உருவாகும் விஷயங்களைப் பற்றி மட்டுமே கவனம்கொள்கிறோம். உண்மையில், வெளியில் இருந்து நம்மைச்சேரும் அழுக்குகள்தான் அதிகம். வியர்வை, வாய் துர்நாற்றம் போன்றவற்றைவிட கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும், தொட வேண்டியிருக்கும் பல விஷயங்கள்தான் அதிகம் அசுத்தமான பொருள்களாக இருக்கும்.

ரூபாய்த்தாள், கைப்பேசிகள், ரிமோட், கதவின் கைப்பிடிகள்... என அதிகமானோரால் பயன் படுத்தப்படும், அதே சமயம் சுத்தப்படுத்தப்படாத ஏரியாக்கள் பல உள்ளன. தொடர்ச்சியான கவனம் மட்டுமே நம்மைச் சுத்தமாக வைத்திருக்கும்.   

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15

ஒருவரின் குணம் என்பது அவருடன் பழகிய பின்னரே தெரியவரும். உங்கள் அலுவலகத்தில் மூர்க்ககுணம்கொண்ட அனைவரையும் உங்களுக்குத் தெரியுமா? எதையும் லேசில் எடுத்துக்கொள்ளும் நபர் யார்? நம்முடன் பழகியவர்களை வைத்துதான் இந்தப் பட்டியலைத் தயாரிக்க முடியும். ஆனால், யாருக்கு வியர்வை நாற்றப் பிரச்னை உண்டு, யார் நகம் கடிப்பார், யாருடைய உடைகள் அழுக்காக இருக்கும் எனப் பட்டியலிட்டால், முன்பின்  அறிமுகம் இல்லாதவர்கள்கூட இடம்பிடிப்பார்கள். வீடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் ஒருவர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். அது இல்லாத எவர் ஒருவரும் ‘கம்ப்ளீட் மனிதர்’ ஆகவே முடியாது.

இந்தத் தொடரின் நோக்கம் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றிய சின்ன அறிமுகம் தருவதுதான். உண்மையில், ஒவ்வொரு அத்தியாயமும் பல நூறு பக்கங்கள் எழுதும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், பெர்சனல் ஹைஜீன் என்பது தகவல்கள் மூலமோ அறிவுரையாலோ கைக்கூடுவது அல்ல. அது அவரவர் தன்மேல் கொண்டிருக்கும் அக்கறையால் அடையக்கூடியது. உங்கள்மேல் உங்களைவிட வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும் பாஸ்?

- முடிந்தது   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism