#சினிமா
இது ஒரு கற்பனை, ஒரு கனவு, நிஜம், சமூகத்தின் பிரதிபலிப்பு, மனுஷனோட ஓர் அங்கம், கலாசாரத்தோட ஒரு பதிவு, வாழ்க்கையோட ஓர் அடையாளம், கொண்டாட்டம். மொத்தத்துல எல்லாமே சினிமாதான்.
#முயன்று முடியாதது
புகைப்பிடிப்பதை விடணும்னு முயற்சிபண்ணிட்டே இருக்கேன். ஆனா முடியலை. இது என் உடம்பை தொடர்ந்து வீணடிக்குது.

#அந்தஒருநாள்
2000, நவம்பர் 6-ம் தேதி வேலைக்காக துபாய்க்குப் போனேன். நிறைய ஆசைகளுடனும் கனவுகளுடனும் இருந்த எனக்கு, நினைச்ச மாதிரி எதுவுமே அங்கே நடக்கலை. ஏமாந்துபோனேன். அந்த ஏமாற்றமும் தோல்வியும்தான் என்னை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்தேன். அடுத்த ஸ்டெப் எடுத்து வெச்சேன். இப்ப உங்க முன்னாடி இருக்கேன்.
#வெறுக்கவேமுடியாதநபர்
எங்க அம்மா சரஸ்வதிதான்
#பிடித்தஆளுமை
எங்க அப்பா காளிமுத்து.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

#பழக்கம்
எங்கே போனாலும் என் ரசிகர்கள் என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிறாங்க. அந்த வழக்கம், எனக்கும் பழக்கமாகிடுச்சு.
#பெரியமாற்றம்:
நான் ரொம்பவே கூச்சப்படுவேன். காலேஜ் படிக்கும்போது பொண்ணுங்ககூட ஒண்ணு ரெண்டு வார்த்தைகளைத் தவிர, பெருசா பேசினதே இல்லை. ஆனா, இப்ப என்கிட்ட இருந்த கூச்சம் எல்லாம் போயிடுச்சு.
#தவறவிடக்கூடாதது:
நம்மீது செலுத்தப்படும் பேரன்பை என்னைக்கும் தவறவிடக் கூடாது. அன்புதான் ஆரம்பமும் முடிவும்.
#நடிச்ச முதல்காட்சி
`புதுப்பேட்டை’ படத்துல தனுஷ்க்கு பின்னாடி நடிச்சது.

#படிப்பினை
எனக்கு எதுவுமே வராதுனு நினைச்சுட்டிருந்தேன். ஆனா, எனக்கு லாஜிக்கா யோசிக்கவரும்னு நினைத்த தருணங்கள்தான் என் வாழ்க்கைக்கான படிப்பினை. அதுதான் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்திருக்கு.
#மரணம்:
நான் இறந்த பிறகும், பத்து நிமிஷம் வாழணும்னு ஆசைப்படுறேன். என்னை நோக்கிவரும் பேரன்பான முகங்களை நான் பார்க்கணும்.
#வெற்றி
மனசு... முதல்ல ஒரு வெற்றியை எதிர்பார்க்குது. அதை அடைஞ்சா, உடனே அடுத்து வெற்றியை எதிர்பார்க்குது. `வெற்றி’ ஒரு நாய் மாதிரி வாய் வெச்சுக்கிட்டே போகுது. அதனால, எது வெற்றினு சரியா சொல்ல முடியலை.
#நன்றி
பிரபஞ்சத்துக்கு. மனுஷனோட ஆசையிலேயும் கனவுலேயும் பிரபஞ்சம் கலந்திருக்குனு நான் நம்புறேன். நீங்க ஏதாவது இந்தப் பிரபஞ்சத்துக் கிட்ட கேட்டீங்கன்னா, மலையில் எதிரொலிப்பது மாதிரி உங்களுக்குள்ள அது எதிரொலிக்கும்.

#மறக்கமுடியாதவரி
ஷேக்ஸ்பியர் சொன்ன, `உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாம ஒவ்வொருத்தரும் ஒரு கதாபாத்திரம்’ இதைப் புரிஞ்சுக்கிட்டா, வாழ்க்கை ஈஸியாகிடும்.
#கடைசிபன்ச்
எதிலும் அவசரப்படக் கூடாது. ரொம்ப வேகமா முன்னேறி வாழ்க்கையில் அடையப்போறது எதுவும் இல்லை.