Published:Updated:

ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

துளசிதாஸ்...  கிரேட் பாம்பே சர்க்கஸில் 57 ஆண்டுகால ஜோக்கர். துளசிதாஸுக்கு இப்போது வயது 71. ஆனால், ஐந்து வயது சிறுவனைப்போல துள்ளிக்குதித்து ஓடி ஆடுகிறார். எக்கச்சக்கமான சுவாரஸ்யங்கள் கொட்டிக்கிடக்கும் துளசிதாஸிடம் பேசினேன்.

ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

``எனக்குச் சொந்த ஊரு பீகார் மாநிலம் சாப்ரா. நான் இந்த பாம்பே சர்க்கஸ்ல காலடி எடுத்து வைக்கும்போது எனக்கு வயசு 13.  அப்போ நான் ஆறாவது படிச்சிக்கிட்டு இருந்தேன். எல்லோரையும்போலத்தான் நானும் எங்க அண்ணன்கூட சர்க்கஸை வேடிக்கைப் பார்க்கப்போனேன். சர்க்கஸ் ஆரம்பிச்சதுமே என்னென்னவோ சாகசங்களைச் செய்தார்கள். மக்கள் ஆச்சர்யமாக வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நானும்தான்.  கொஞ்ச நேரத்துக்குப் பிறகுதான், ஜோக்கர்ஸ் வந்தாங்க. ஜோக்கர்ஸைப் பார்த்ததுமே எல்லோர் முகத்திலும் ஆட்டோமேட்டிக்கா சிரிப்பு வழிந்தது.  குழந்தைகளெல்லாம் குதூகலமானார்கள்.  எனக்கு ரொம்பவும் பிடிச்சிப்போய்டுச்சி. அப்பவே `வாழ்ந்தா ஜோக்கராத்தான் வாழணும்’னு முடிவு பண்ணிட்டேன்.

ஏன்னா... நான் ரொம்பக் குள்ளம். குள்ளமா இருந்தாலும், அதைக் குறையா நினைக்காம  ரசிக்கிற மக்களும் இருக்காங்கனு நான் சர்க்கஸ்லதான் தெரிஞ்சுக்கிட்டேன்.  வீட்டுக்குப் போனதும் நான் சர்க்கஸ்ல ஜோக்கராகப் போறேன்னு சொன்னேன். அம்மா, அப்பால்லாம் ஒத்துக்கவே இல்லை. நான் என் முடிவுல ரொம்பவும் உறுதியா இருந்தேன்.வேற வழியில்லாம சர்க்கஸுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் மேனேஜரைப் பார்த்துப் பேசினாங்க. என்னைப் பார்த்ததுமே மேனேஜருக்கும் பிடிச்சிருச்சு. என்னைச் சேர்த்துக்கிட்டார்’’ தன்னுடைய சர்க்கஸ் என்ட்ரியை நேற்று நடந்ததைப்போல அவ்வளவு ஆர்வத்துடன் விவரிக்கிறார் துளசிதாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

``மக்கள்  கூட்டம்  நிறைஞ்சிருக்கும் இந்தக் கூடாரத்துக்குள்ளேயே வாழ்ற வாழ்க்கை எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போயிடுச்சு. எல்லோரும் என்னை ஜோக்கரா பார்த்துக் கைத்தட்டினாலும் கூட என்னை நான் ஹீரோ மாதிரிதான் நினைச்சுப்பேன். வீட்டு நினைப்பெல்லாம் சுத்தமா இல்லாமப் போச்சு. நான்  சர்க்கஸுக்கு வந்ததிலிருந்து 13 வருஷம் கழிச்சுதான் முதன்முதலா என் வீட்டிற்கே போனேன். அதுவும்,  என் அம்மாவோட சாவுக்கு. அம்மா இறந்தபோது லேசான வருத்தம். ஆனாலும், சர்க்கஸ் அதையெல்லாம் துடைச்சுப் போட்ருச்சி. என் மகிழ்ச்சி, என் வீடு, என் சொந்தம், என் உலகம் எல்லாமே சர்க்கஸ்தான். நாலைஞ்சு இந்திப் படங்கள்ல நடிச்சிருக்கேன். தமிழ்ல  `ஏழாம் அறிவு’ல கூட வருவேன். எனக்கு சினிமாவுல பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை.  சர்க்கஸைத் தவிர, நான் வேற எதையும் யோசிச்சதே இல்லை. 13 வயசுல நான் சர்க்கஸை எப்படிப் பார்த்தேனோ, அதில் ஒரு துளிகூட இப்பவும் குறையலை.

திருமணம் பண்ணிக்கணும்கிற ஆசையெல்லாம் வரவேயில்லை.  திருமணம் பண்ணிக்கிட்டா, அவங்களைக் காப்பாத்தணும். நான் அவங்களையும் அவங்க என்னையும் சார்ந்திருக்கணும்.  அப்போ என்னோட சர்க்கஸ் எனக்கு இரண்டாம்பட்சமாகிடும். காசுக்காக வேலை பார்க்க வேண்டியிருக்கும். அதனால,  அந்த யோசனையையே விட்டுட்டேன். நான் சேரும்போது எனக்கு ஒரு ரூபாய் சம்பளம், இப்போ 15,000. எனக்கெதுக்கு அதுக்குமேல காசு. இப்பல்லாம் சர்க்கஸ் பார்க்க வர்றவங்க கூட்டம் ரொம்பவும் குறைஞ்சிடுச்சு. எல்லோர் கைக்கும் செல்போன் வந்துடுச்சு. ஒவ்வொரு காலத்திலும் பொழுதுபோக்கு மாறிக்கிட்டேதான் இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படலை. இந்தக் கூடாரத்துக்குள்ள ஓர் ஆள் உட்காந்திருந்தால்கூட அவருக்காக நான் பெர்ஃபார்ம் பண்ணுவேன். ஏன்னா, எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இது மட்டும்தான் பிடிச்சிருக்கு. சாகும்வரை சர்க்கஸ்தான். இந்தக் கூடாரத்துக்குள்ளேயே நான் செத்துப்போகணும்’’ என்று சொல்லும்  துளசிதாஸ் குரலில் துளியும் சோகம் இல்லை.

ஜோக்கரும் நானே... ஹீரோவும் நானே!

``2008-ல் எனக்கு கிட்னி ஆபரேஷன் நடந்துச்சு. ஒன்பது மாசம் வீட்ல இருக்க வேண்டிய சூழல். சர்க்கஸைவிட்டுப் பிரிஞ்சிருந்ததை என்னால தாங்கிக்கவே முடியலை. உலகமே இருண்ட மாதிரி ஆகிடுச்சி. உடம்பு சரியாகறதுக்குள்ள ஓடி வந்துட்டேன். `நீங்க ஏன் வந்தீங்க... உடம்பைப் பார்த்துக்கிட்டு வர வேண்டியதுதானே? ஏதாவது ஆகிடப்போகுது’னு என்மேல் உள்ள அக்கறையில திட்டினார் இப்போதையே மேனேஜர். `அங்க இருந்தாதான் சார் நான் செத்து ருவேன்’னு சொன்னேன். என்னை அப்படியே  ஒரு  குழந்தையைப் போல வாரி அணைச்சுக்கிட்டார்.

என் இப்போதையே மேனேஜர் யார் தெரியுமா? நான் 13 வயதில் இந்த சர்க்கஸுக்குள் நுழையும்போது இருந்தாரே ஒரு மேனேஜர். அவரின் குழந்தைதான் இப்போ மேனேஜர். அப்போது  அவரை நான் குழந்தையாகப் பார்த்தேன். இப்போது அவர் என்னைக் குழந்தையைப் போல பார்த்துக்கிறார்’’ என்றபடி துள்ளிக்குதித்துக் கூடாரத்துக்குள் ஓடுகிறார் துளசிதாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism