Published:Updated:

அபாயங்களும் அதிசயங்களும்!

அபாயங்களும் அதிசயங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
அபாயங்களும் அதிசயங்களும்!

மருதன்

அபாயங்களும் அதிசயங்களும்!

மருதன்

Published:Updated:
அபாயங்களும் அதிசயங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
அபாயங்களும் அதிசயங்களும்!

கொல்லப்படும்போது அல்ல, ஒரு பயங்கரவாதியின் கனவு தோற்கடிக்கப்படும் போதுதான் ஜனநாயகம் வெற்றிபெற ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி, குஜராத்தைச் சேர்ந்த ஏழு அமர்நாத் யாத்ரீகர்களைப் பயங்கரவாதிகள் சிலர் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாகில் வைத்துச் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் பெண்கள். 32 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பற்றி எரிந்துகொண்டிருக்கும் காஷ்மீரில் இந்து யாத்ரீகர்கள் சிலர்  இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டால், அந்தப் பள்ளத்தாக்கு மட்டுமா வெடித்துச் சிதறும்? இந்தியா முழுவதும் அல்லவா அதிர்ந்து குலுங்கும்! வகுப்புவாதத்தையும் வன்முறையையும் சித்தாந்தமாகத் தரித்துக்கொள்ளும் ஒரு பயங்கரவாதிக்கு இதைவிட மேலான கனவொன்று இருக்கமுடியுமா?

அபாயங்களும் அதிசயங்களும்!

மிகச் சரியாக இந்தக் கனவின்மீதுதான் இந்துக்களும், முஸ்லிம்களும், காஷ்மீரிகளும் கரம்கோத்துத் தாக்குதல் தொடுத்து வென்றிருக்கிறார்கள். பிளவுகளை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு செயல்திட்டம் அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை எற்படுத்தியிருக்கிறது. அரிதாகவே இத்தகைய அதிசயங்கள் இங்கே நிகழ்கின்றன. ஆனால், அமர்நாத்துக்கு அதிசயங்கள் புதிதல்ல என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெண்பனியும் செங்குருதியும்

கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது அமர்நாத் குகை. ஒவ்வோராண்டும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் அமர்நாத் குகைக்கு யாத்திரை செல்வது வழக்கம். தெற்கு காஷ்மீரில் அடர்த்தியான இமயமலைப் பகுதிகளுக்கு உள்ளே அமைந்திருக்கும் அமர்நாத் குகையில் சிவனின் உருவம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பனி வடிவத்தில் காட்சியளிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த அதிசயத்தைத் தரிசிக்க ஒருவர் ஸ்ரீநகர் அல்லது பெஹல்காமில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியாகவேண்டும். பெஹல்காமிலிருந்து வந்தால், 46 கி.மீ. அல்லது, ஸ்ரீநகரிலிருந்து சோனாமார்க் வழியாகப் பால்தாக் என்னும் மலைப்பிரதேசத்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து மலைப்பகுதி வழியே 16 கி.மீ தொலைவில் அமர்நாத் குகையை சென்றடைந்துவிடலாம். எந்த வழியில் செல்வதானாலும் நடைதான், அல்லது குட்டையான குதிரையிலோ டோலியிலோ ஏறியாக வேண்டும்.

குகையை நிர்வகிக்கும் வாரியத்தில் இந்துக்களோடு சேர்த்து முஸ்லிமான பூடா மாலிக்கின் சந்ததியினரும் வழிவழியாக இடம்பெற்று வருகின்றனர். மற்றொரு பக்கம், இதே அமர்நாத் குகையைப் பயன்படுத்தி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் வழிவழியாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இயற்கையும்கூட தன் பங்குக்கு யாத்திரையை முடக்கப் பார்த்தது. 1996-ம் ஆண்டு பனிப்பொழிவும் நிலச்சரிவும் கிட்டத்தட்ட 250 பேரைக் கொன்றொழித்தது.

இந்து யாத்ரீகர்கள் மீதான முதல் வன்முறைத் தாக்குதல் 2000-ம் ஆண்டு நடைபெற்றது. பெஹல்காமில் நடந்த இந்தக் கொலைவெறித் தாக்குதலில் 17 யாத்ரீகர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு, காஷ்மீர் முதல் குஜராத்வரை பல்வேறு வன்முறைச் சம்பவங்களும், கலகங்களும், வகுப்புவாத மோதல்களும் நடைபெற்றபோதும் அமர்நாத் யாத்திரை ஏறக்குறைய எந்தவிதத் தடையுமின்றி தொடர்ந்துகொண்டிருந்தது. அமர்நாத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் வேற்று கிரகத்துச் செய்திகள். ஆனால், இப்போதோ இந்தியாவையே பதைபதைக்கச் செய்யும் தலைப்புச் செய்தியாக அமர்நாத் மாறியிருக்கிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பனி நிலத்தின்மீது சூடான ரத்தத் துளிகள் பீய்ச்சியடிக்கப்பட்டிருக்கின்றன.

அபாயங்களும் அதிசயங்களும்!

அன்பின் பள்ளத்தாக்கு

குண்டு துளைத்த பேருந்தை ஓட்டிச்சென்ற சலிம் ஷாயிக்கின் அசாதாரணமான  சாகசத்தை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். ஐம்பது பேரின் உயிரைக் காப்பாற்றிய பெருமிதம் அவரிடம் தென்பட்டாலும்,  ஏழு பேரைப் பறிகொடுத்த துயரமும் அவரிடம் தொக்கி நிற்கிறது. ‘எப்படியாவது எல்லோரையும் காப்பாற்றிவிடவேண்டும் என்றுதான் துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியிலும் வேகவேகமாக வண்டியை ஓட்டிவந்தேன். ஆனால், நான் நினைத்ததைப்போல் எல்லோரையும் காப்பாற்ற முடியவில்லை என்பது வேதனையளிக்கிறது. நன்றாகப் பேசிப் பழகிய அவர்களுடைய முகங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்துபோகின்றன. அவர்கள் எல்லோரையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன்.’ என்கிறார்.

அன்று என்ன நடந்தது என்பதையும் அவர் விவரிக்கிறார். ‘அனந்த்நாகை நாங்கள் சென்றடைந்தபோது மணி எட்டு. பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். எங்கள் வண்டிக்கு அருகில் இருளைக் கிழித்துக்கொண்டு சத்தமான ஓலங்கள் கேட்டன. துப்பாக்கிக் குண்டுகள் எங்களை நோக்கிப் பாய்ந்துவருகின்றன என்பதையே நான் உணரவில்லை. யாரோ பட்டாசு வெடித்துப் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்டியின் கண்ணாடி உடைந்ததும், சட்டென்று உண்மை உணர்ந்து குனிந்துகொண்டேன். ஆனால், அப்போதும் வண்டி ஓட்டுவதை நிறுத்தவில்லை. வேகம், வேகம் என்றுதான் மனம் துடித்தது. எனக்கு அடிபட்டிருக்கிறதா என்றுகூடப் பார்க்கவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருந்தேன். 3 கி.மீ-க்குப் பிறகு ஒரு ராணுவ முகாமைப் பார்த்தபிறகுதான் மூச்சே வந்தது.’ என்கிறார்.

காஷ்மீர் என்பது பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும், கல்லெறிபவர்களும் திரண்டிருக்கும் முகமற்ற பிரதேசம் அல்ல; அங்கு  சலிம் ஷாயிக்குகள் உயிரூட்டத்துடன் நிறைந்திருக்கிறார்கள் என்பதைத் தேசம் உணர்ந்துகொண்ட தருணம் முக்கியமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism