Published:Updated:

அரசுகளின் அநீதி!

அரசுகளின் அநீதி!
பிரீமியம் ஸ்டோரி
அரசுகளின் அநீதி!

அரசுகளின் அநீதி!

அரசுகளின் அநீதி!

அரசுகளின் அநீதி!

Published:Updated:
அரசுகளின் அநீதி!
பிரீமியம் ஸ்டோரி
அரசுகளின் அநீதி!

மூன்று பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, நம் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆட்சி அதிகாரம் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

அரசுகளின் அநீதி!



முதலாமவர் உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரி ஷ்ரெஸ்தா. சென்ற மாதம், வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார் அவர். ஹெல்மெட்டும் இல்லாமல் லைசென்ஸ், ஆர்.சி, இன்ஷூரன்ஸ் என்று எந்த ஆவணங்களும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தியதுதான் அவர் செய்த ‘தவறு’. நிறுத்தப்பட்டவர் உள்ளூர் பா.ஜ.க பிரமுகர். தான் தடுத்து நிறுத்தியவர் அரசியல் செல்வாக்குமிக்கவர் என்று தெரிந்தும் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தார். அதற்கு ஷ்ரெஸ்தாவுக்குக் கிடைத்த பரிசு, நேபாள எல்லைக்கு இடமாற்றம். மாற்றியது, அரசியலில் நேர்மையை அடிக்கடி வலியுறுத்தும் பா.ஜ.க அரசு.

இரண்டாமவர் கர்நாடக சிறைத்துறை அதிகாரி ரூபா. பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று அங்கு நடந்த ஊழல்களை அதிரடியாக அம்பலப்படுத்தினார். சசிகலா, தெல்கி என்னும் இரண்டு குற்றவாளிகள் பணத்தை விட்டெறிந்து சிறையையே தங்கள் சொகுசு விடுதியாக மாற்றிக்கொண்டதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். ரூபாவுக்கும் கிடைத்த பரிசு இடமாற்றம்தான். இதுவரை 31 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த முறை ரூபாவின் நேர்மைக்கு இடமாற்றம் என்னும் ‘பரிசை’ அளித்தது கர்நாடக காங்கிரஸ் அரசு.

மூன்றாவது பெண் தமிழகத்தில் வளர்மதி. அவர் செய்த ‘குற்றம்’ கல்லூரி வாசலில் அதிபயங்கரமான ஆயுதங்களை விநியோகித்தது. அந்த ‘அதிபயங்கரமான’ ஆயுதம் துண்டறிக்கைகள்தான். கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாகத் துண்டறிக்கை கொடுத்ததாலேயே கைது செய்யப்பட்ட வளர்மதியின் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்திருக்கிறது. ‘துண்டறிக்கைக் கொடுப்பதே குற்றமா?’ என்று கேட்டால், ‘மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்களைப் போராடத் தூண்டினார்’ என்று குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘துண்டறிக்கைக் கொடுத்தது மட்டும் குற்றமல்ல; அரசுக்கு எதிராகப் போராடுவது அதைவிடக் குற்றம்’ என்பது எடப்பாடி பழனிசாமியின் வாதம். மாணவர் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்து முதல்வரான அண்ணாவின் பெயரால் அமைந்த கட்சியைச் சேர்ந்த முதல்வர் இப்படிச் சொல்வது காலத்தின் கோலம்தான்.

‘மன் கி பாத் - மனதிலிருந்து பேசுகிறேன்’ என்று முழங்குபவரின் கட்சி நடத்தும் அரசு மனசாட்சிக்கு உண்மையாக நடந்துகொள்ளும் அதிகாரியைத் தண்டிக்கிறது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக வழக்கு நடத்திக் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்திய அதே கர்நாடக காங்கிரஸ் அரசு, சிறையிலும் ஊழல் செய்யும் சசிகலாவுக்குச் சாமரம் வீசுபவர்களைக் காப்பாற்றுகிறது. ‘மக்களால் நாங்கள்; மக்களுக்காகவே நாங்கள்’ என்று சொல்லும் தமிழக அரசோ மக்களுக்காகப் போராடுபவர்களைச் சிறைக்கு அனுப்புகிறது.

‘எல்லா கட்சிகளும் ஒன்றுதான்; எல்லா காட்சிகளும் ஒன்றுதான்; எல்லா ஆட்சிகளும் ஒன்றுதான்’ என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அதிகார மமதையில் ஆட்டம்போடும் யாராக இருந்தாலும் தீர்ப்புக்காக மக்களை நோக்கித் தேடிவரும் நாள் விரைவில் என்பதை உணர வேண்டும்.