Published:Updated:

“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”

“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”

பரிசல் கிருஷ்ணா, படம்: மீ.நிவேதன்

“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”

பரிசல் கிருஷ்ணா, படம்: மீ.நிவேதன்

Published:Updated:
“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”

ரபரவென  `சீஸன் டூ’-வுக்குத் தயாராகிவிட்டது, தமிழ்நாடு ப்ரீமியர் லீக். கடந்த சீஸனில் தூத்துக்குடி அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், ஐ.பி.எல்-லில் புனே அணியில் விளையாடினார். திண்டுக்கல் அணியின் நடராஜன், பஞ்சாப் அணிக்காக பந்துவீசினார். இந்த முன்னேற்றம், டி.என்.பி.எல்-லின் எல்லா வீரர்களையும் உற்சாகமாக்கி இருக்கிறது.  இங்கே சாதித்தால் அடுத்த லெவலுக்கு செல்லமுடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடைநீங்கி மீண்டும் ஐபிஎல்லுக்கு வர இருக்கிறது. பரபரப்பான சூழலில் இந்திய அணியின் சுழல்புயல் அஷ்வினைச் சந்தித்தேன்.

``சி.எஸ்.கே மறுபடியும் களம் இறங்குதே...”

``ரெண்டு வருஷ இடைவெளி, சி.எஸ்.கே-வோட பலத்தை அதிகரிச்சிருக்குன்னு நினைக்கிறேன். சென்னை, தமிழ்நாடு, இந்தியா எல்லாம் தாண்டி உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் சி.எஸ்.கே-வின் ‘கம்-பேக்’கை எதிர்பார்த்திருக்காங்க. நிச்சயம் நல்ல ஒரு கம்பேக்கா இருக்கும்னு நம்புறேன்.”

“என்கூட வடிவேலும், சந்தானமும் இருக்கணும்!”

``வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டிகள்ல, உங்ககிட்ட வேற மாதிரி பெளலிங் ஆக்‌ஷனைப் பார்த்தோமே... அது தொடருமா?”

``அநேகமா நான் பெளலிங் பண்ண ஆரம்பிச்சு இது 10-வது பெளலிங் ஆக்‌ஷன்னு நினைக்கிறேன். ஒண்ணு ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் இது எடுபட்டிருக்கா... இல்லையானு தெரிஞ்சுக்கவே முடியும்.”

``கேப்டன் ஆன பிறகு, களத்துல விராட் கோஹ்லி செம ஆக்ரோஷமா இருக்கார். டிரெஸ்ஸிங் ரூம்ல எப்படி?”

``அவருக்கு ஜெயிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். கேப்டனா இல்லாதப்ப டீப் மிட் விக்கெட்ல இருந்து வெளிப்படுத்துற அதே உணர்ச்சிகளை, இப்ப ஷார்ட் மிட் விக்கெட்ல இருந்து வெளிப்படுத்துறார். அவ்வளவுதான். மத்தபடி டீமுக்காக எப்பவுமே முன்ன நிக்கிறவர் அவர்.”

``தமிழ்நாடு கிரிக்கெட் மைதானங்களைப் பொறுத்தவரைக்கும் என்ன மாற்றம் வரணும்னு எதிர்பார்க்கிறீங்க?”

``தமிழ்நாட்டைப் பொருத்தவரை வெயில் அதிகம். பெர்சனலா நானே ஒரு அகாடமி ரன் பண்றதால், அந்தக் கஷ்டம் எனக்கும் தெரியும். ஆனா, மற்ற மாநிலங்களைவிட இங்கே பல நிறுவனங்கள் செலவு செய்து, கிரவுண்டை மெயின்டெயின் பண்றாங்க. இந்த மாதிரி போட்டிகள் நடத்துறது, நிச்சயம் பல கிரவுண்டுகளோட தன்மையை மேம்படுத்தும்.”

``உங்க கேரியர்ல இப்போ எவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?”

``அப்படி ஒரு கணக்கா சொல்றது சிரமம். ஆனா, நல்ல தூரம் பயணிச்சிருக்கேன்னு நம்புறேன். அதை ஆசிர்வாதமா நினைக்கிறேன். ஐ’ம் ப்ளஸ்ட்.”

``அனுபவ பெளலராக, இளைஞர்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?”

``இந்த ஃபார்மெட், பிட்ச், பேட் எல்லாமே ஸ்பின்னர்ஸுக்கு ரொம்பக் கஷ்டம். ஸ்பின்னர்ஸ் மட்டுமல்ல, பெளலர்களுக்கே கஷ்டமாத்தான் இருக்கும். இவங்க போடுற பால் அடி வாங்கினாலும், மறுபடி அடுத்த பாலை வெறியோடு, தைரியமா போடணும். அந்தத் துணிச்சல் ரொம்ப முக்கியம்.”

``நீங்க தமிழ் சினிமா ரசிகராச்சே...”

``ஆமாங்க. படம் ரொம்பப் பார்ப்பேன். அதுவும் தியேட்டர்ல போய்ப் பார்க்கிறதுனா அவ்ளோ பிடிக்கும். தொடர்ச்சியான மேட்ச்களால் ஒரு வருஷமா படமே பார்க்க முடியலை. ரொம்பவே மிஸ் பண்றேன்.”

`` `பிக் பாஸ்’ பார்க்கிறீங்களா?”

``எங்க ப்ரோ... டைமே இல்லை. ஆனா, சோஷியல் நெட்வொர்க்ல நிறைய மீம்ஸ் பார்த்தேன். அதான் ட்ரோல் பண்ணித் தள்றாங்களே.”

``நீங்க ``பிக் பாஸ்’ வீட்ல இருக்கிறதா இருந்தா.. கூட யார் இருந்தா நல்லா இருக்கும்?”

``வடிவேல், சந்தானம் ரெண்டு பேரும் இருந்தா, சூப்பரா இருக்கும். ஆனா, ரெண்டு பேருமே பிஸியா இருப்பாங்கள்ல?’’