Published:Updated:

ரீல் இல்லை... ரியாலிட்டி!

ரீல் இல்லை... ரியாலிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ரீல் இல்லை... ரியாலிட்டி!

நித்திஷ்

ரீல் இல்லை... ரியாலிட்டி!

நித்திஷ்

Published:Updated:
ரீல் இல்லை... ரியாலிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ரீல் இல்லை... ரியாலிட்டி!

‘பாட்டுப் பாடுவது, பாடலுக்கு ஆடுவது’ எனப் பல ஆண்டுகளாக ஒரு வட்டத்துக்குள் சிக்கியிருந்த தமிழகக் குடும்பங்கள் பிக் பாஸ் வழியே அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறார்கள். ‘ஏன் இந்தப் பொண்ணு இப்படி நடிக்குது?’ ‘ஐயோ அந்தப் பொண்ணை எல்லோரும் டார்கெட் பண்ணுறாங்க’ என உள்துறை விவகாரங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்கள். இப்படியான விவகாரங்கள் நமக்குத்தான் புதுசு. வெளிநாடுகளில் எல்லாம் ‘அதுக்கும் மேல’ ரகத்தில் ரியாலிட்டி ஷோக்கள் சக்கைப்போடு போடுகின்றன. அப்படி டி.ஆர்.பி-யை டி.ஆர் கணக்காக ஆட்டம் போட வைத்த சில உலக ரியாலிட்டி ஷோக்கள் பற்றிய எஸ்.டி.டி இங்கே!

ரீல் இல்லை... ரியாலிட்டி!

ஒரு கன்னிப்பையனும் 30 களவாணிகளும்

`The bachelor’ அடல்ட்ஸ் ஒன்லி டைப் ரியாலிட்டி ஷோ இது. டைட்டிலைப்போலவே ஒரு எலிஜிபிள் பேச்சுலர் இருப்பார். அவரை இம்ப்ரஸ் செய்ய 30 பெண்கள் போட்டி போடுவார்கள். கிட்டத்தட்ட இதிகாசங்களில் வரும் சுயம்வரம் கான்செப்ட்தான். நிறைய போட்டிகள், தன்னுடனான கெமிஸ்ட்ரி, சக போட்டி யாளர்களுடன் நடந்து கொள்ளும் முறை போன்றவற்றை வைத்து சிறந்த பெண்ணைத் தேர்ந்தெடுப்பார் அந்த பேச்சுலர். டேட்டிங்கில் ஏகப்பட்ட வழி முறைகளை இளசுகளுக்கு அறிமுகப் படுத்தியிருந்தாலும் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும் உள்ளானது இந்த ஷோ!

ரீல் இல்லை... ரியாலிட்டி!

நான் தனியாள் இல்ல...

`ALONE’ - மேன் வெர்சஸ் வைல்டின் அப்டேட்டட் வெர்ஷன் இந்த ரியாலிட்டி ஷோ! உடல் வலு, மன உறுதி கொண்ட போட்டி யாளர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒரு காட்டுக்குள் இறக்கிவிடுவார்கள். ஒருவர் இன்னொருவரைச் சந்திக்க முடியாதபடி திட்டம் வகுக்கப் பட்டிருக்கும். சீதோஷ்ண நிலைகள், வன விலங்குகளின் இடையூறு ஆகியவற்றைத் தாண்டி உணவு, உறைவிடம் கண்டுபிடித்துப் பிழைத் திருக்க வேண்டும். தாங்கள் படும் பாட்டை அவர்களே கேமராவில் ரெக்கார்டும் செய்ய வேண்டும். அதிக நாள்கள் அப்படி அந்த அத்து வானக் காட்டுக்குள் வாழ்பவரே வெற்றியாளர். சில சமயங்களில்  ஓர் ஆண்டுவரைகூட அவர்கள் அப்படி வாழ வேண்டியிருக்கும்!

ரீல் இல்லை... ரியாலிட்டி!

கு.த. நம்பர்-1

`THE REAL HOUSEWIVES’ - சின்னத்திரையில் ஹிட்டடிக்க இல்லத்தரசிகளைத்தானே குறிவைக்க வேண்டும். நம் ஊரில் சீரியல்கள் அதைச் செய்ய, அமெரிக்காவில் இந்த ரியாலிட்டி ஷோ அதை வேறு மாதிரி செய்கிறது. அப்பர் க்ளாஸ்,  அப்பர்  மிடில்  க்ளாஸ்  குடும்பத்தலைவிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கை முறையை நெருக்கமாகப் பதிவு செய்வதுதான் இந்த ஷோ. அமெரிக்காவில் சக்கைப்போடு போடுகிறது. இது தவிர ஆஸ்திரேலியா, க்ரீஸ் போன்ற நாடுகளிலும் இதன் ரீமேக் வெர்ஷன் ஒளிபரப்பாகிறது.

ரீல் இல்லை... ரியாலிட்டி!

திறமைக்கு மரியாதை

உலக அளவில் கொண்டாடப்பட்ட டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சி `GOT  TALENT’. இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் கொவலின் மூளையில் உதித்த ஐடியா. இசை, நடனம், மேஜிக், மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் என எந்தத் துறையில் வேண்டுமானாலும் நீங்கள் கில்லியாக இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் ஷோ, நடுவர்களை இம்ப்ரஸ் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் அடுத்த ரவுண்டுக்குத் தேர்வாவீர்கள். அங்கிருந்து உங்களைக் காப்பாற்ற வேண்டியது மக்களின் பொறுப்பு. யாருக்கு அதிக  வாக்குகள்  விழுகிறதோ, அவரே மில்லியன் டாலர் வின்னர். ஷோ அநியாய வரவேற்பைப் பெற்றதால், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரீமேக்கானது. இந்திக்கு வந்துவிட்டாலும், தமிழில் வெவ்வேறு பெயர்களில் சுமாராகத் தயாரிக்கப்பட்டு தோல்வியடைந்த ஷோ இது!

ரீல் இல்லை... ரியாலிட்டி!

பாஸுக்கெல்லாம் பாஸு

BIG BROTHER... இன்று இந்தக் கட்டுரையை எழுதவும், நீங்கள் படிக்கவும் காரணம் இந்த ஷோ தான். யெஸ்... பிக் பாஸின் டாடி இந்த பிக் பிரதர். நெதர்லாந்தைச் சேர்ந்த ஜான் டி மோல் என்பவரின் ஐடியாதான் இந்த பிக் பிரதர்.

1999-ல் இருந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இதுவரை உலகம் முழுக்க 387 சீசன்களைக் கடந்துள்ளது. இணையம் பிரபலமாகாத அந்தக் காலகட்டத்தில் போன் செய்து தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டுப் போட்டுக் காப்பாற்ற வேண்டும். என்னதான் சோஷியல் எக்ஸ்பரிமென்ட், சைக்காலஜிகல் ட்ரீட்மென்ட் என கலர் வளையங்கள் மாட்டப்பட்டாலும், உலகம் முழுக்க அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் ரியாலிட்டி ஷோ இதுதான்!

ரீல் இல்லை... ரியாலிட்டி!

உலகம் சுற்றும் வாலிபர்கள்

 மொழி, நாடு பாரபட்சமில்லாமல் அனைவரும் பங்கேற்க ஏங்கும் ஷோ `The Amazing race’. இதில் உங்கள் பார்ட்னரோடு கலந்துகொள்ள வேண்டும். அவர் உங்கள் குடும்ப உறுப்பினராக, நண்பராக, லவ்வராக, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அளவுகடந்த நம்பிக்கை இருவருக்குள்ளும் முக்கியம். உலகம் முழுக்கச் சுற்றி ஏகப்பட்ட டாஸ்க்குகளைச் செய்ய வேண்டும். சராசரியாக 12 அணிகள் கலந்துகொள்ளும். ஒவ்வொன்றாக எலிமினேட் ஆகி இறுதியில் பட்டம் வெல்லும் அணிக்கு 10 லட்சம் டாலர் பரிசு. உலகம் முழுக்கச் சுற்றலாம், எக்கச்சக்கப் பரிசுகள் என்பதால் வரவேற்பும் அபாரம். இந்தியாவுக்கென ஸ்பெஷல் வெர்ஷன் இல்லாவிட்டாலும் சர்வதேச வெர்ஷனில் நம் ஊர்க்காரர்களை நிறையவே பார்க்கலாம்.

ரீல் இல்லை... ரியாலிட்டி!

நெவர்... எவர்... கிவ்அப்

பிக் பாஸுக்கெல்லாம் முன்னால் வந்த சூப்பர் சீரிஸ் `The Survivor’. முன்பின் அறிமுகமில்லாத சிலரை ஒரு தனித்தீவில் இறக்கிவிட்டுவிடுவார்கள். மழை, புயல், எல்லாவற்றையும் அவர்களே சமாளித்துக்கொள்ள வேண்டும். சுற்றிலும் கடல், தொடர்புகொள்ள யாரும் கிடையாது. அந்தக் குழுவில் இருப்பவர்களை இரண்டாகப் பிரித்து நிறைய போட்டிகள் வைப்பார்கள். தோற்கும் குழுவில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வெளியேற்ற வேண்டும். துரோகம், சோகம், அதிர்ச்சி என மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை அப்படியே கேமரா கண்கள் நோட் செய்வதால், ஷோவிற்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பு. 34 சீசன்கள், 512 எபிஸோடுகள் என விரட்டி விரட்டி அடிக்கிறது இந்த சர்வைவர்!

ரீல் இல்லை... ரியாலிட்டி!

சமைக்க விடலாமா?

`Master chef’ ரியாலிட்டி ஷோக்களின் சூப்பர் சீனியர் இந்தச் சமையல் போட்டி. 1991-ல் இருந்து ஒளிபரப்பாகிறது. சமையலுக்காகவே பிரத்யேக ரியாலிட்டி ஷோ என்ற கான்செப்ட்டே எல்லாரையும் டி.வி முன்னால் அமர்த்தியது. உலகின் முன்னணி சமையல் கலைஞர்கள் தங்களுக்குள் ‘யார் பெஸ்ட்?’ எனப் போட்டி போடுவார்கள். குறித்த நேரத்துக்குள் கொடுத்த மூலப்பொருள்களை வைத்து யார் சூப்பராக சமைக்கிறார்கள் என்பதைக் கண்களில் சமையல் எண்ணெய் ஊற்றியதுபோல் கவனிப்பார்கள் நடுவர்கள். இதேபோல ‘செலிபிரிட்டிகளுக்குள் சிறந்த குக் யார்?’, ‘சாமானியர்களுக்குள் சிறந்த குக் யார்?’ என ஏகப்பட்ட வெர்ஷன்கள் வெளியாகின. இந்த ஷோவும் ஏகப்பட்ட நாடுகளில் ரீமேக்கப்பட்டிருந்தாலும் ஆஸ்திரேலிய வெர்ஷனுக்கு ஒரிஜினலை மிஞ்சிய வரவேற்பு கிடைத்தது!