Published:Updated:

மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

மகாத்மாவின் குரு யார் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: மு.நியாஸ் அகமது, க.பாலாஜி

மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: மு.நியாஸ் அகமது, க.பாலாஜி

Published:Updated:
மகாத்மாவின் குரு யார் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

காத்மா காந்தி, ராய்ச்சந்திர பாய் பற்றி தன் சுயசரிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார், ‘`அதற்குப் பிறகு, மதத் தலைவர்கள் பலரையும் மத குருக்களையும் நான் சந்தித்திருக்கிறேன். பல மதங்களின் தலைவர்களைச் சந்திக்க முயன்றேன். ராய்ச்சந்திரரைப்போல அவர்களில் யாருமே என் மனதைக் கவரவில்லை என்பதை நான் சொல்ல வேண்டும்.’’ யார் அந்த ராய்ச்சந்திர பாய் என்று அறிய ஆவலாக இருக்கிறதா?

மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

1891-ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பும்போது, மும்பையில் ராய்ச்சந்திரரைச் சந்திக்கிறார் மகாத்மா காந்தி. `ராய்ச்சந்திரர் (எ) ராஜ்சந்திரர் ஒரு கவி. `சதாவதானி’ (100 விஷயங்களை ஒரே சமயத்தில் கவனித்து பதில் அளிக்கும் ஆற்றல் பெற்றவர்) என்பதை அறிகிறார். இதனால் எல்லாம் காந்தியைக் கவர்ந்துவிடவில்லை ராய்ச்சந்திரர். `அவருக்குள் இருக்கும் ஆன்மிகத் தேடலே என்னை மயக்கியது’ என்கிறார் மகாத்மா. 

ஸ்ரீமத் ராய்ச்சந்திரர் பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், குஜராத், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திர மிஷன் சார்பாக `யுகபுருஷ் - மகாத்மாவின் மகாத்மா’ என்ற நாடகம், ஜூலை மாதம் 29-ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் நிகழ இருக்கிறது. இதுவரை 249 நகரங்களில், பல்வேறு மொழிகளில் 715 முறை மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், தமிழில் இதுதான் முதன்முறை. பொதுமக்களுக்கு இலவச அனுமதியுடன் நடத்தப்படும் இந்த நாடகம், சிறந்த நாடகத்துக்கான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளது. இந்த நாடகத்தின் இயக்குநர் பாம்பே ஞானத்தைச் சந்தித்தேன்.

மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

``33 வருடங்கள் இந்த உலகில் இருந்து, ஆன்மிகக் கருத்துகள் பலவற்றை எடுத்துச் சொல்லி, ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தவர் ராஜ்சந்திரர். பல்வேறு ஆன்மிக நாடகங்களை மேடையேற்றிய அனுபவத்தாலோ என்னவோ, இந்த நாடகம் நடத்தும் மிகப்பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. ஸ்க்ரிப்ட்டே மிக நேர்த்தியாகவும், காட்சி மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அவ்வளவு தெளிவாகவும் இருந்தன. நாடக உரையாடல்களைப் படிக்கும்போது எனக்கே மிக பிரமிப்பாக இருந்தது. நாடகக் குழுவினரின் முழு அர்ப்பணிப்பும் உற்சாகமும்தான் இந்த நாடகம் குறைந்த நேரத்தில் நேர்த்தியாக உருவாகக் காரணம். ராஜ்சந்திரரின் வாழ்க்கையை வார்த்தைகளால் விளக்குவதைவிட, அவரின் உணர்வுகளை உள்வாங்கி அதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் கலைஞர்கள்தான் இந்த நாடகத்தின் பலம்.’’

மகாத்மாவின் குரு யார் தெரியுமா?

``எந்தக் காட்சி உங்களுக்குச் சவாலாக இருந்தது?”

``ஸ்ரீமத் ராஜ்சந்திரர் ஒரு சதாவதானி. இந்தத் திறமையை மகாத்மா பார்ப்பதுபோல் நாடகத்தில் ஒரு காட்சி.  சீட்டு விளையாட்டு, செஸ் விளையாட்டு,  ஒருபுறம் புத்தகம் படிக்கப் படுவதைக் கவனிப்பது... எனப் பலவிதமான செயல்பாடுகளையும் ஒரே சமயத்தில் கிரகித்து, பிறகு ஒவ்வொன்றுக்குமான சரியான பதிலைச் சொல்வார் ராஜ்சந்திரர். அந்த நிகழ்வை ஒருங்கிணைப்பதும், பார்வையாளர்களுக்குப் புரியும்வண்ணம் மேடையில் காட்சிப்படுத்துவதும் சவாலாக இருந்தது. விளக்குகள் அணைக்கப் படாமலேயே காட்சிகள் மாறுவதுதான் இந்த நாடகத்தின் தொழில்நுட்பரீதியிலான சிறப்பு. ஒரு கதாபாத்திரம், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில்  நடித்துக்கொண்டிருக்கும். உதாரணமாக,  மூன்று காலகட்டத்தின் காந்தியும் மேடையில் இருப்பார்கள். வழக்கமாக பின்னணிக் குரலில்தான் இதுபோன்ற காட்சிகளை விளக்குவார்கள். இந்த நாடகத்தில் அப்படியில்லாமல், நாடகத்தின் போக்கிலேயே அனைத்தையும் தெளிவாகப் புரியும்படி அமைத்திருக்கிறோம். இப்படி வழக்கமான நாடகத்தன்மை இல்லாமல் தற்போதைய தொழில்நுட்பங்களைத் துணைகொண்டு செய்துள்ள ஒவ்வொரு காட்சி அமைப்பும் சவால்தான்.”