Published:Updated:

“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்
பிரீமியம் ஸ்டோரி
“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - பயிற்சி முகாம் - 2017விகடன் டீம்

“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - பயிற்சி முகாம் - 2017விகடன் டீம்

Published:Updated:
“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்
பிரீமியம் ஸ்டோரி
“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்
“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்
“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

தீத உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது 2017-18-ம் ஆண்டுக்கான விகடனின் மாணவப் பத்திரிகையாளர் படை. ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பயிற்சி முகாம் முழுக்கவே சர்ப்ரைஸ் கொண்டாட்டங்கள்.

மாணவப் பத்திரிகையாளர்களுக்கான பேட்டி நேரம். எதிர்பாரா என்ட்ரியாக அரங்கத்துக்குள் வந்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

‘`நான் எட்டாவது படிக்கும்போது ஒரு ஜோக் எழுதி விகடனுக்கு அனுப்பினேன். அது விகடன்ல பிரசுரமானது. அடுத்து காலேஜ் படிக்கும்போது நான் எழுதிய ‘வாழும் வரை போராடு’னு என்னோட சிறுகதை விகடன்ல வந்தது. அதுவே எனக்கு விருது வாங்கிய மாதிரி. அதைப் பார்த்துட்டுதான் என் அப்பா, ‘விகடனின் அங்கீகாரம் இவனுக்குக் கிடைக்குது. இவனுக்குள்ள என்னமோ திறமையிருக்கு. இவன் ஜெயிப்பான்’னு நம்பிக்கையா என்னை சினிமாவுக்கு அனுப்பி வெச்சார். அப்படித்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்’’ என்று இன்ட்ரோ கொடுத்தவர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத்தொடங்கினார்.

‘` ‘கத்தி’ படத்தின் கதையை நீங்க வேற ஒருத்தரிடம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்களே... அதற்காக வழக்குகள் எல்லாம்கூட நடந்ததே...’’ 

‘` ‘கத்தி’ கதை ஒண்ணும் புதுக் கதை கிடையாது. ரெண்டு ஹீரோக்கள் ஆள் மாறாட்டம் பண்ற கதையை இதுக்கு முன்னால நாம யாருமே பார்த்ததில்லையா என்ன? நான், ‘Save the cat’னு ஒரு புத்தகம் படிச்சேன். அதில், ‘ஒரு பழைய விஷயத்தைச் சொல்லு, ஆனா புதுசா சொல்லு’னு எழுதியிருந்த  பாயின்ட்டை எடுத்துக்கிட்டேன். அப்படி எடுத்த படம்தான் ‘கத்தி’. விஜய் என்ற மாஸ் ஹீரோவை வெச்சுப் படம் பண்ணும்போது ஒரு சமூகப் பிரச்னையையும் பேசினால் நல்லாயிருக்கும்னு நினைச்சேன். அதுக்கு நான் எடுத்துக்கிட்ட படம் ‘எங்க வீட்டு பிள்ளை’. ஒரு எம்.ஜி.ஆர் அந்தப் பக்கம் போயிடுவார். இன்னொரு எம்.ஜி.ஆர் இந்தப் பக்கம் வந்திடுவார். இப்படிப் பழைய படத்தைக் கொஞ்சம் புதுசா எடுத்தேன். உடனே பழைய கதை எழுதி வெச்சிருந்த சிலர் ‘என் கதையை எடுத்துட்டான்... என் கதையை எடுத்துட்டான்’னு அபத்தமா குற்றச்சாட்டு வெச்சாங்க. அதில் துளியும் உண்மை இல்லை. நீதிமன்றத்திலும் அதை நிரூபித்து வழக்கில் வெற்றிபெற்றிருக்கிறேன்.’’

“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

‘’பெண்களைக் காட்சிப்பொருளாகவே சினிமாவில் காட்டுவதை ஓர் இயக்குநரா எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘’பெண்களை வெறும் காட்சிப்பொருளா சினிமாவில் காட்டுவது தவிர்க்கவே முடியாததாகத்தான் இருக்கு. என்னைப் பொருத்தவரை அப்படிக் காண்பிக்கக் கூடாதுங்கிறது என்பதைத் தார்மீகக் கடமையா நினைக்கிறேன். ஒரு தப்பான ஆளை ஹீரோவா காட்டவேணாம்ங்கிறது என்னுடைய வேண்டுகோள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். சிகரெட் பிடிக்க மாட்டார் என்பதால் அன்றைய தலைமுறையில் நிறைய பேர் சிகரெட் பிடிக்காம இருந்தாங்க, அதுதான் உண்மை. அதே மாதிரி இப்ப ஒரு ஹீரோ குடிச்சிட்டு, ஸ்மோக் பண்ணிட்டு ஒரு பொண்ணை லவ் பண்ற மாதிரிக் காட்டினால் அதன் தாக்கம் நிச்சயமா ரசிகர்களிடமும் அதைப் பார்க்கும் மக்களிடமும் இருக்கும். பெண்ணைத் திட்டி வசனம் பேசுனா, பாட்டு எழுதுனா மக்கள் கைதட்டுறாங்கனு தெரிஞ்சனாலதான் திரும்பத் திரும்ப பண்றாங்க. அந்த மனநிலையில் இருந்து கலைஞர்கள் வெளியே வரணும்கிறது என் கருத்து.’’

 ‘` ‘ஸ்பைடர்’ படத்துக்கு அப்புறம் யார்கூட படம் பண்ணப்போறீங்க? அதுல என்ன மெசேஜை எதிர்பார்க்கலாம்?’’

‘`இதை பிரஸ்மீட் வெச்சு சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, இதுவும் பிரஸ்மீட்தானே. நானும் விஜய் சாரும் மூணாவது முறையா இணைகிறோம். அதுல என்ன மெசேஜ் சொல்லப்போறேன்னு இன்னும் விஜய் சார்கிட்டயே சொல்லலை. பொதுவா மெசேஜ் சொல்லணும்கிறதுக்காக நான் படம் எடுக்க மாட்டேன். அந்தக் கதைக்குத் தேவைப்படுற மெசேஜை உள்ளே சேர்க்கிறதுதான் வழக்கம்.”

‘`உங்க படத்துல நீங்க சொல்ற கருத்துகள் நிறைய பேரைப்போய் ரீச் ஆகுது. அப்போ நீங்க ஏன் சாதி ஒழிப்பை மையமா வெச்சு ஒரு படம் பண்ணக் கூடாது?’’

‘`நீங்க சொல்றது சரிதான். சாதி ஒழிப்பைப் பற்றிப் படத்துல சொல்றப்போ அதுக்கான தாக்கம் அதிகமா இருக்கும். ஆனா, இப்போ சாதாரண படங்களையே தங்களோட விளம்பரத் துக்காக நிறைய சாதிச் சங்கங்கள் எதிர்க்கிறாங்க. எனக்கும் முன்னால அப்படி மிரட்டல்கள் எல்லாம் வந்திருக்கு. அப்படிப்பட்ட நிலைமையில சாதி  ஒழிப்பைப் பற்றிப் படம் எடுத்தா, முதல்ல அதுக்கு தயாரிப்பாளர்கள் பயமில்லாம ஓகே சொல்லணும். சென்சிடிவ் வான விஷயங்கிறதால அரசோட ஒத்துழைப்பும் தேவைப்படும். இதெல்லாம் கிடைச்சா கண்டிப்பா அப்படி ஒரு படம் பண்ணுவேன்.’’

‘` `ரமணா’ படத்துல பில்டிங் இடிஞ்சு விழறதுதான் மையப்புள்ளி. 13 வருஷம் கழிச்சு நிஜமாவே மவுலிவாக்கத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. இந்த முன்னோக்குப் பார்வை எப்படி வந்தது?’’

‘`அது சின்ன அப்சர்வேஷன்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டா சளி பிடிக்கும்னு தெரியாதா என்ன? ஊழலைத்தான் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு வர்றோமே. என் அப்பா இறந்தப்போ டெத் சர்டிஃபிகேட் வாங்கவே லஞ்சம் தர வேண்டியதா இருந்தது. டெத் சர்டிஃபிகேட்டுக்கே இந்த நிலைமைனா அப்போ பில்டிங்லாம் லஞ்சம் கொடுக்காம, ஊழல் பண்ணாம கட்ட முடியுமா என்ன? கட்டும் போதே இடிந்ததால், உயிரிழப் புகள் நூறுக்குள் இருந்தன. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஆட்கள் குடிவந்ததுக்குப் பிறகு இப்படி ஓர் அசம்பாவிதம் நடந்திருந்தால், ஆயிரக்கணக்கில் உயிர்கள் பலியாகியிருக்கும்னு நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு’’ என்றார் முருகதாஸ்.

‘இப்போ இவங்கதான் - ட்ரெண்டிங் ஸ்டார்ஸ்’ என்ற தலைப்பில் பேச வந்தார்கள் இன்றைய இளசுகளின் ஃபேவரிட் இளைஞர்கள்.

முதலில் மைக் பிடித்தார் ‘சரவணன் மீனாட்சி 2.0’ ஹீரோ ரியோ. ‘`உங்களுக்கு நான் சொல்ற அட்வைஸ் ஒண்ணுதான். நீங்க எதையும் புதுசா க்ரியேட் பண்ணாதீங்க. இருக்கிறதை இருக்கிற மாதிரி சொல்லுங்க. அதுதான் ஊடக தர்மம்’’ என சீரியஸாக ஆரம்பித்தவர், எப்படி ஆங்கர் ஆனார் என்பதைத் தன் நக்கல் ஸ்டைலில் பகிர்ந்துகொண்டார்.

‘எரும சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் பேசினார். ‘`என் ஊரு கோயம்புத்தூர். படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வர வீட்டுல காசு தரலை. சரி, சென்னை போகத்தான் முடியலை. சென்னையில இருக்கிறவங்களை திரும்பிப் பார்க்க வைக்கலாம்னு நண்பர்களா சேர்ந்து ஒரு   யூடியூப்  சேனல் ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். அதுக்குப் பேரு  திட்டுற வார்த்தையா இருக்கணும். ஆனா, வல்கரா இருக்கக் கூடாது. அப்படி ரொம்ப யோசிச்சு வெச்ச பேருதான் ‘எரும சாணி’. உங்க முயற்சியை எந்த வயசுலேயும் எங்க இருந்து வேணும்னாலும் தொடங்கலாம். அதை நீங்க எப்படிப் பயன்படுத்திக்கிட்டு அடுத்த கட்டத்துக்குப் போறீங்க என்பதுதான் மேட்டர்’’ என்றதும் மாணவ நிருபர்களிடமிருந்து வந்த கைத்தட்டலும், ‘அட, ஆமாம்ல’ என்றது.

“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

‘`சொந்தங்களே... பந்தங்களே... `` என ஆரவாரத்தோடு தொடங்கினார்கள் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ கோபி - சுதாகர். ‘`  `நீங்க எப்பத்தான்டா நல்ல ஸ்க்ரிப்ட் எழுதுவீங்க’னு எங்களைக் கேட்பாங்க. உங்களுக்கெல்லாம் நல்லா எழுத வரும்ங்கிறதைப் பார்க்க லேசா பொறாமையாத்தான் இருக்கு. நாங்க ரெண்டு பேருமே க்ளாஸ்மேட்ஸ். இன்ஜினீயரிங் படிப்பு ஏறலை. சினிமாத் துறைக்குப் போக ஆசைப்பட்டோம். இப்போ எல்லோரும் டி.வி-யில இருந்துதான் சினிமாவுக்குப் போறாங்க. அதனால டி.வி-யில சின்னதா ஷோ பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம் யூடியூப்புக்கு வந்தோம். ஒருத்தர் மேல உங்களுக்கு விமர்சனம் இருக்குனா அதைச் சம்பந்தப்பட்டவங்ளே ரசிக்கிற மாதிரி, புண்படாத மாதிரி சொல்லணும். அதுதான் எஃபெக்டிவ்வான வழினு தோணுது. ரசிக்கிற மாதிரி சொல்றதையும், புண்படுத்துற மாதிரி சொல்றதையும் ஒரு மெல்லிசான கோடுதான் பிரிக்குது. அந்தக் கோட்டைத் தாண்டிடாம நீங்க கவனமா இருக்கணும். இப்போ ஜெயில்ல இருந்து ஷாப்பிங் போற மேட்டர் ஒண்ணு சிக்கியிருக்கு. அதைப் பண்ணலாம்னு ப்ளான்’’ என்று இந்த காமெடிக் கூட்டணிப் பேசப்பேச அரங்கில் அப்ளாஸ் மழை.

‘`ஃப்ரெண்டு... பேச வந்திருக்காப்புல...’’ என தனக்குத் தானே இன்ட்ரோ கொடுத்துப் பேச வந்தார் டேனியல் ‘`நான் கத்துகிட்ட முக்கியமான பாடம், ‘நம்மளை நாமளே ரசிக்க ஆரம்பிச்சா, மத்தவங்களும் ரசிக்க ஆரம்பிச்சுடு வாங்க’ என்பதுதான். ரேடியோ ஜாக்கி, வி.ஜே, டைரக்‌ஷன்னு எல்லா வேலைகளைப் பற்றியும் கத்துக் கிட்டேன். எடுத்தவுடனே பெரிய அடியா எடுத்து வெச்சு சறுக்குறதுக்குப் பதில் சின்னச் சின்ன அடியா கவனமா எடுத்து வைக்கலாம்னு தோணுச்சு. அதைத்தான் இப்போ வரை பண்ணிட்டுருக்கேன். மக்கள் உங்களை அங்கீகரிக்கிறதுதான் பெரிய சாதனை’’ என்ற மோட்டி வேஷனோடு முடித்தார்.

“விஜய்யுடன் ஹாட்ரிக்!” - முருகதாஸ் சர்ப்ரைஸ்

‘நெருப்புடா... ‘ என ‘தெர்ர்ர்றி’க்க விட்ட அருண்ராஜா காமராஜ் ‘`இப்போலாம் கேள்வி கேட்டாலே வருமான வரி சோதனை நடக்குது.அப்படி இருக்கிற சூழல்ல கேள்வி கேட்கிற இடத்துல இருக்கிற உங்களுக்கு வாழ்த்துகள். நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு கேள்வி களை சிறப்பா கேட்கிறீங்களோ அந்த அளவுக்குத் தமிழகம் சிறப்பா இருக்கும்’ என டாபிகல் டச்சோடு பேசியவர் தன் கரகர கம்பீரக் குரலில் ‘நெருப்புடா’ பாடவும் தவறவில்லை.