Published:Updated:

நானே கேள்வி.... நானே பதில்!

வாசிப்பதற்கே வாழ்ந்தவர்கள்!

நானே கேள்வி.... நானே பதில்!

வாசிப்பதற்கே வாழ்ந்தவர்கள்!

Published:Updated:
##~##

''ஜெயலலிதா அரசில் பிஸியாக இயங்கும் துறை எது?''

 ''சந்தேகம் என்ன, நீதித் துறைதான்!''

- சில்வியா, சேலம்.

''பால் விலையை ஏற்றிவிட்டு எலைட் ஷாப்களைத் திறக்கிறதே, தமிழக அரசு மக்களுக்கு என்னதான் சொல்ல விரும்புகிறது?''

''மச்சி... ஓப்பன் தி பாட்டில்!''

- நவீனன், கடலூர்.

'' 'மத்திய அரசு நிதி தராததால் இக்கட்டைப் புரிந்துகொண்டு மக்கள் தனக்கு உதவ வேண்டும்’ என்கிறாரே ஜெயலலிதா?''

''நல்ல விஷயம். அதேபோல், மத்திய அரசு தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முன்வராததால் தமிழகக் காவல் துறையை மீனவர்கள் பாதுகாப்புக்கு அனுப்பினால், அப்போது ஒப்புக்கொள்ளலாம் ஜெயலலிதா உண்மையிலேயே 'தைரியலட்சுமி’தான் என்று!''

- அன்புமணி, ஈரோடு.

''எந்தக் கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்கிறாரே மன்மோகன் சிங்?''

''தயவுசெய்து நீங்கள் அவரை நேரில் சந்தித்து, 'நீங்கள் பிரதமர்தானே?’ என்ற கேள்வியை ஒரு முறை கேட்டுப்பாருங் களேன்!''

- என்.ராஜேந்திரன், காரைக்கால்.

நானே கேள்வி.... நானே பதில்!

''வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா?''

''இவை உங்களுக்குத் தெரிந்த சம்பவங் களாகக்கூட இருக்கலாம். ஆனால், நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வதில் தவறு இல்லை. அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, 'இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா?’ என்று கேட்டார் அண்ணா. 'நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே. நீங்களுமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள்?’ என்று சிரித்தபடி கேட்டார் அமெரிக்க மருத்துவர். 'ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன்’ என்றார். பகத் சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக  அழைத்த போதுகூட, 'இந்தப் புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்றார். அண்ணாவுக்கு மறு நாள் குறித்த நிச்சயம் கிடையாது. பகத் சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது. மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?''

- குமணன், கொடைக்கானல்.

நானே கேள்வி.... நானே பதில்!