Published:Updated:

ஓவியா சார்... சிரிக்குது சார்!

ஓவியா சார்... சிரிக்குது சார்!
பிரீமியம் ஸ்டோரி
ஓவியா சார்... சிரிக்குது சார்!

மணிகண்டபிரபு - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ஓவியா சார்... சிரிக்குது சார்!

மணிகண்டபிரபு - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஓவியா சார்... சிரிக்குது சார்!
பிரீமியம் ஸ்டோரி
ஓவியா சார்... சிரிக்குது சார்!

முப்பதே நாளில் தமிழ்நாட்டின் செல்லக்குட்டியாக மாறி இருக்கிறார் ஓவியா. `யாருங்க அது ஓவியா... எனக்கே பார்க்கணும் போல இருக்கு’ எனப் பத்து வயதுப் பையனிலிருந்து பல்லுபோன பெருசுவரை எங்கெங்கு காணினும் ஓவியாதான். இணைய தேசமெங்கும் ஓவியாதான் ட்ரெண்டிங். இப்படியே போனால் ஓவியாவால் தமிழ்நாட்டில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

ஓவியா சார்... சிரிக்குது சார்!

ரியல் எஸ்டேட்

எந்தப் பெயரைத் தெருவுக்கு வைத்தால், பொறி பறந்து தெரு தெறிக்குமோ அந்தப் பெயரைத்தான் ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் ஊருக்கு வெளியே பொட்டல் காட்டில் சைட் போடும் இடங்களிலெல்லாம் ஓவியா நகர், ஓவியா கார்டன், ஓவியா சிட்டி, ஓவியா அவென்யூ, ஓவியா தோட்டம், ஓவியா குறுக்கு சந்து எனப் பெயர் வைத்துப் பேத்து எடுக்கலாம்.  மக்கள் கூட்டம் அள்ளும். லோக்கல் சேனல் தொகுப்பாளர்கள் கூறும் ஆஃபர் வீடு வாங்கினால், அனைவருக்கும்  அருள் பாலிக்கும்; செல்வ வளம் கொழிக்கும் ஓவியாவின் கையெழுத்திட்டப் புகைப்படத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாய் வழங்கலாம்.

ஓவியா ட்ரெஸ்

நதியா ட்ரெஸ் போட்ட பாட்டிகளின் சமகாலப் பேத்திகளின் ஒரே சாய்ஸ் ஓவியா உடைகள்தான். எத்தனை பேர் நாமினேட் செய்தாலும், எலிமினேட் ஆகாத எலும்பு மருத்துவர்தான் ஓவியா. அது மாதிரி எத்தனை முறை துவைத்தாலும் சாயம் போகாதென சேல்ஸ் மேன் சேலஞ்ச் செய்வாங்க. எல்லா துணிக்கடையிலும் ஓவியாதான் வரவேற்பு பொம்மையா இருக்கும். அந்த ஓவியா பொம்மை துணி எடுத்துத் திரும்பும் எல்லோருக்கும் டாட்டா சொல்லும்.

மக்கள் செல்வி

காசு கொடுக்காம மக்களை ஓட்டுப்போட வைத்ததால், அவருக்கு `மக்கள் செல்வி’, `புரட்சிகரக் குடும்பத்தலைவி’ எனப் பட்டங்கள் வழங்கப்படும். அப்படியே ஆன் தி வேயில் தமிழ்நாட்டு அரசியலிலும் வெற்றிடம் இருப்பதால் `வெற்றிடம் நிரப்பவந்த வெள்ளைமன சூறாவளி’ எனப் புகழப்படலாம். தனிக்கட்சி தொடங்கினால் கொள்கைப் பாடலே `கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட’தான். ஒவ்வொரு மீட்டிங்கிலும் பாசத்தம்பிகளைப் பாசக்கயிறாய் இழுக்க இந்தப் பாடல் பயன்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓவியா சார்... சிரிக்குது சார்!

சீரியல்

கதை கிடைக்கலை, கதை கிடைக்கலை என்று சுற்றிக்கொண்டிருக்கும் மெகா சீரியல் இயக்குநர்களுக்கு சூப்பர் கதை சிக்கிடுச்சு. முதலில் ஓவியாவிடம் 1,000 நாள்களுக்கு டேட்ஸ் வாங்கிக்கொள்ள வேண்டியது. அடுத்து கதை... கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்னைக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வரும் இளம்பெண்ணுக்கு, ஒரு கம்பெனியில் தற்காலிகமா வேலை கிடைக்குது. வேலை நிரந்தரமாக வேண்டும் என்றால் அங்கிருக்கும் டீம் மெம்பர் முதல் முதலாளி வரை செய்யும் அத்தனை டார்ச்சர்களையும் பொறுத்துக்கணும். ஒவ்வொருத்தரையும் எப்படிப் பொறுத்துப் பொறுத்துப் பொங்குகிறார் ஓவியா என்பதே ஒன்லைன்! ஓவியாவைக் காட்டியே இந்தி டப்பிங் சீரியலுக்கே டஃப் கொடுக்கலாம்.

விவாதம்

அன்றாடம் நடக்கும் நிகழ்வைப் பட்டி தொட்டி யெங்கும் கெட்டிச் சட்டினியாய் சிதறிக்கிடக்கும் பிரச்னையை இரவு நேர விவாதமாக வைக்கலாம். ஓவியாவை எதிர்த்து சாதிக் கட்சிக்காரர்களையும், ஆதரவாக ஓவியா புரட்சிப் படை நிர்வாகிகளையும் இறக்கலாம். பொதுவான இடத்தில் இலக்கிய ஆளுமைகளையும், வீடியோ கான்ஃபரன்ஸில் பிக் பாஸ் நிகழ்ச்சி லைட்மேனையும் பேச வைக்கலாம். நீயா நானாவில் ஓவியாவை எதிர்க்கும் சமூகத் தினரையும், ஓவியாவை ஆதரிக்கும் சமூகத்தி னரையும் வைத்தால் விளம்பர இடைவெளியின்றி வீர விளையாட்டு விளையாடலாம்.

பேட்டி

இன்னும் இரண்டு வாரம் வெளி யேறவில்லை என்றால் காட்டுக்குள் சென்று வீரப்பனை பேட்டி எடுத்தது மாதிரி, மக்கள் பிரதிநிதி கமல்ஹாசன் அனுமதியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து தனியாய் பேட்டி எடுத்து தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் ஒளிபரப்பினால், ஒரு பயலும் வேலைக்குப் போகாமல் டி.வி-முன் குத்தவைத்து டி.ஆர்.பி-யைத் திணறடிப்பார்கள்.

ஜோசியம்

கிளி ஜோசியம் பார்த்தால் பாதாள பைரவி, பத்ரகாளி வந்ததெல்லாம் ஓல்டு ஸ்டைல். இனி பிக் பாஸ் பாணியில் அதில் பங்கேற்றோர் படங்களை வைத்துக் குறி சொல்லலாம். பரணி படம் வந்தால், வீட்டைவிட்டு ஓடிப்போய்டுவே என்று சொல்லலாம். ஸ்ரீ படம் வந்தால், உடம்பு சரியில்லாமல் போகும்;  காயத்ரி வந்தால், `நாக்குல சனி கம்முனு இரு கண்ணாம்மா’என்று எச்சரிக்கலாம். நமீதா வந்தால், ஆப்பிளைத் தின்னுட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சு மாட்டிக்குவீங்க என்று எதிர்காலம் சொல்லலாம். ஆர்த்தி வந்தால், நீங்க சொல்றதை யாரும் உடனே நம்ப மாட்டாங்க ஒருவாரம் கழிச்சிதான் நம்புவாங்க என்று அடித்துவிடலாம். ஜூலி படம் வந்தால், கஷ்டம் வரும், வீட்டில் அழுகை சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்னும், ஓவியா படம் வந்தால், ஓய்யாரமாய் வாழலாம்னு சொல்லி உலக அளவுல ஜோசியத்தைக் கொண்டு போகலாம்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism