Published:Updated:

அறம் செய விரும்பு

அறம் செய விரும்பு

விகடன் டீம் - படங்கள்: மீ.நிவேதன்

அறம் செய விரும்பு

விகடன் டீம் - படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
அறம் செய விரும்பு
அறம் செய விரும்பு

ரு மதியவேளையில், செம்மஞ்சேரி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கோ.விஜயலட்சுமி நம்மைத் தொடர்புகொண்டார் ``எங்க பள்ளியில ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ்நாட்டுலேயே அதிகமான மாணவர்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளியில இதுவும் ஒண்ணு. அதுமட்டுமல்ல, எல்லாரும் முதல் தலைமுறை மாணவர்கள். கட்டட வசதி இல்லாம சிரமப்படுறோம். அதை  மட்டும் கொஞ்சம் செஞ்சு கொடுத்தீங்கனா மாணவர்களுக்கு உதவியா இருக்கும் சார்...” -  ஒரு பெரும்பணிக்கான உரையாடல் இப்படியாகத்தான் தொடங்கியது. உடனடியாக, நமது விகடன் - ஜி.ஆர்.டி ஜூவல்லரி இணைந்து மேற்கொள்ளும் ‘அறம் செய விரும்பு’ குழு செம்மஞ்சேரி பள்ளியைப் பார்வையிட்டது. அங்கு பயிலும் மாணவர்களுடனும், அவர்களின் பெற்றோர்களுடனும், பின் ஆசிரியர்களுடனும் உரையாடியது. அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் இந்தப் பள்ளி செம்மஞ்சேரி மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது, அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எந்த அளவுக்கு மாற்றவல்லது என்பதை உணர்த்தியது. 

அறம் செய விரும்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் துயர் மிகுந்த கதை  ஒன்று இருக்கிறது. இந்த மாணவர்கள்தான் சென்னையின் பூர்வகுடிகள். இன்று நாம் வசிக்கும் சென்னையை நிர்மாணித்தவர்களின் பிள்ளைகள் அவர்கள். ஆனால், வளர்ச்சியின் பெயரால் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாகச் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள். ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னோர் இடத்தில் நட்டால், அந்த மரம் அந்நியமான புது மண்ணில் பொருத்திக்கொள்ள எவ்வளவு சிரமப்படுமோ, அவ்வளவு சிரமங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அறம் செய விரும்பு

“என் புருஷன் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கிட்டு  இருந்தாரு. ஆனா, இப்போவெல்லாம் அதிகமா சவாரி வர்றது இல்லை. தினமும் சென்னை சிட்டிக்குள்ள போய் ஆட்டோ ஓட்டிட்டு வர்றதும் சிரமமா இருக்கு. கையில் காசும் நிக்க மாட்டேங்குது. அவரு வேற வேலை தேடிக்கிட்டு இருக்காரு. எம்புள்ளதான் படிச்சு இந்தக் குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகணும்” என்கிறார் அந்தப் பகுதியில் வசிக்கும் கஸ்தூரி.

அறம் செய விரும்பு

கஸ்தூரி மட்டும் இல்லை. செம்மஞ்சேரியில் வசிக்கும் அத்தனை குடும்பங்களும் தம் பிள்ளைகளைத்தான் நம்பியிருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள், இந்தப் பள்ளியை நம்பியிருக்கிறார்கள். இந்தப் பள்ளியை மாற்றுவது மற்றும் மேம்படுத்துவது மூலம் நிச்சயம் இந்த மாணவர்களின் வாழ்வில் சிறு வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் ஏற்படும் சிறு மாறுதலும், முன்னேற்றமும் செம்மஞ்சேரி பகுதியில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் என்பது அந்தப் பகுதி மக்களுடனான உரையாடல் எங்களுக்கு உணர்த்தியது.

இந்தப் பள்ளியை மேம்படுத்தும் முயற்சியில் முதல் கட்டமாக, விகடன் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலம் ஆறு வகுப்பறைகளைக் கட்ட முடிவுசெய்தது. அதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கின. வெறும் செங்கல், சிமென்டால் ஆன கட்டடமாக அல்லாமல், அந்தப் பள்ளியின் சுவர்கள்கூட மாணவர்களுடன் உரையாடிப் புத்துணர்ச்சி ஊட்டும்விதமாக அந்த ஆறு வகுப்பறைகளும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் பணி இன்னும் நான்கு மாதங்களில் முடியும்.

அறம் செய விரும்பு

“இந்தப் பகுதியில் கொஞ்சம் திருட்டு பயம் இருந்துச்சு. கட்டடப் பணிக்காக வைக்கப்படுற பொருள்கள் குறித்த பயத்துலதான் இருந்தோம். ஆனா, கட்டடப் பணி தொடங்கியதுல இருந்து, இந்தப் பகுதி மக்களும், மாணவர்களும் ஏதோ தன் சொந்த வீட்டுக் கட்டட பணி நடக்கிறது போல, அவ்வளவு பத்திரமா பார்த்துக்குறாங்க. லீவ் நாள்லகூடப் பள்ளிக்கு வந்துடுறாங்க” என்று கட்டடப் பணிக்கும் மாணவர்களுக்கும் உள்ள உளப்பூர்வமான பந்தத்தைப் பேசி நெகிழ்கிறார்கள் ஆசிரியர்கள்.

செம்மஞ்சேரியில் மட்டுமல்ல... ரியல் எஸ்டேட் மொழியில் சென்னைக்கு மிக அருகில் இருந்தாலும் இன்னும் தனக்குள் ஒரு கிராமத்தை, அதன் இயல்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சாலமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அறம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முற்றாகச் சிதிலமடைந்து கிடந்த வகுப்பறைக் கட்டடம் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அந்தப் பள்ளியில் நூலகம் அமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது.

அறம் செய விரும்பு

வெறும் கட்டுமானப் பணிகளுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களுடன் உரையாடி, கல்வி, அறிவியல், ஓவியம், விளையாட்டு தொடர்பான பயிற்சிகளையும் கொடுக்கும் திட்டத்தை ‘அறம் செய விரும்பு’ குழு வைத்திருக்கிறது. இந்தப் பயிற்சிகளும் வரும் வாரங்களில் அந்தப் பள்ளிகளில் நடைபெறும்.

அறம் செய்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism