Published:Updated:

அவன் அவள் காடு!

இர.ப்ரீத்தி

அவன் அவள் காடு!

இர.ப்ரீத்தி

Published:Updated:
##~##

சுட்டெரிக்கும்  பாலைவன வெயிலில் சுற்றித் திரிகிறது அந்தத் தம்பதி. உடலின் நீர்ச் சத்து வறண்டுபோன நிலையில் மேற்கொண்டு ஓர் அடிகூட எடுத்துவைக்கமுடி யாத நிலை. மிகவும் சோர்வாகக் காணப் படும் மனைவியின் தாகத்தையேனும் தணிக்கலாம் என்று முடிவெடுத்து அவரு டைய  காதில் ஏதோ கிசுகிசுக்கிறார்அந்தக் கணவர். முகம் சுளித்தாலும் வேறு வழி இல்லாமல் இறுக்கமான முகத்துடன் கையில் கிடைக்கும் குவளையைக் கணவனிடம் கொடுக்கிறார் மனைவி. அந்தப் பக்கம் திரும்பி நின்று குவளையை நிரப்பி மனைவியிடம் கொடுக்கிறார் கணவர். அதை... இதற்கு மேல் வேண்டாம்! டிஸ்கவரி சேனலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் 'மேன், வுமன், வைல்டு’ நிகழ்ச்சியில்தான் இந்தக் காட்சி!

 டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சக்கைப் போடு போடும் இந்த நிகழ்ச்சியின் ஹீரோ மைக்கேல் ஹாக், அமெரிக்க ராணுவத்தில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். தனது ஜர்னலிஸ்ட் மனைவி ரூத்துடன் காடு, மலை, கடல், ஆறு, பாலைவனம் என இவர் மேற்கொள்ளும் பயணம்தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். முதல் சீஸனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இப்போது இரண்டாவது சீஸன் ஒளிபரப்பாகிறது.

அவன் அவள் காடு!

தான் சொல்வதைக் கேட்காத ரூத்திடம் சீற்றம் காட்டுவது, கடும் பசியில் இருக்கும்போது கையில் கிடைக்கும் ஆமையை உணவாக்க எண்ணும்போது, மனைவிக்குப் பிடிக்காததால் அந்த எண்ணத்தை மைக்கேல் கைவிடுவது என முழு நீள சினிமாவுக்கான திரைக்கதையுடன் அரங்கேறுகிறது நிகழ்ச்சி. பெரும்பாலும் எண்ணெய், மசாலா இல்லாத பச்சை மாமிசம் தான் இவர்களுடைய உணவு. அமைதி, அன்பு, பயம் என உதாரண மனைவியாக வலம் வருகிறார் ரூத்.

ஆனால், உயிருக்கே ஆபத்தான சமயங்களில் கூடவே இருக்கும் கேமராமேன்கள் தம்பதிக்கு உதவ மாட்டார்களா? அல்லது கேமராவுக்குப் பின்னால் ஃபுல் மீல்ஸ் கட்டிவிட்டு நடிக்கிறார்களா என்று ஏகப்பட்ட கேள்விகளும் தோன்றாமல் இல்லை!

முதலையின் வாய்க்குள் கைவிட்டுப் பதற வைப்பது, நண்டு நத்தைகளை அசால்ட்டாக லபக்குவது, மிருகங்கள், காற்று, மழை, புயல் என  இடர்களைச்  சந்திக்கும் சமயங்களில் தங்களைத் தற்காத்துக்கொள்ள மைக்கேல் சமயோசிதமாகச் செயல்படுவது எல்லாம் மைக்கேலின் ப்ளஸ். ஆனால், மனைவியை 'இரண்டாம் தரமாக’ நடத்துவது, சகட்டு மேனிக்குக் கெட்ட வார்த்தைகள் பேசுவது ஆகியவை அவர் மீதான விமர்சனங்கள்.

எது எப்படியோ... அதிரடி செய்து கல்லா கட்டுகிறது மைக்கேல் தம்பதி!