Published:Updated:

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

#Throwbackstoryநா.சிபிச்சக்கரவர்த்தி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

#Throwbackstoryநா.சிபிச்சக்கரவர்த்தி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்
யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

#பிடிச்ச படம்

இப்ப நான் நடிச்சுட்டு இருக்கிற ‘நாச்சியார்’ படம்தான். இயக்குநர் பாலா சார், நான் நடிப்பதற்கு அவ்வளவு சேலஞ்ச் கொடுத்திருக்கிறார்.

#இசையமைப்பாளர்


இது ஒரு தவ நிலைதான். எப்போதும் வரத்திற்காக காத்திருக்கணும்.

#ரிஸ்க்

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


நமக்கு இதுபோதும், இதுதான் நாம்னு நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டு, கம்ஃபர்ட் ஸோன்லயே இருப்போம். அதுக்கு அப்புறம் ஒரு ரிஸ்க் எடுக்கும்போது நம்ம வாழ்க்கை மாறும். இதில் எதிர்பாராத வெற்றியும் பெறலாம், கீழே விழவும் செய்யலாம். ஆனா, அந்த ரிஸ்க் எடுக்கிறது முக்கியம். நான் அந்த ரிஸ்க்  எடுத்தேன்.

 #வாழ்க்கை

நாம இங்க தனித்துதான் வந்தோம், தனித்துதான் போகப்போறோம். அதுக்குள்ள எத்தனை பேர் மனசுல இடம் பிடிக்கிறோம்; எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம். அதுதான் வாழ்க்கைனு நினைக்கிறேன்.

#வெற்றி

இது எல்லா நேரத்துலயும் வராது. வரும்போது என்ஜாய் பண்ணிக்கணும். ஆனா, தலைக்கு அதை ஏத்திடக்கூடாது.

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

#ஆசை

என் இசைகாலம் கடந்து நிற்கணும்னு ஆசைப்படுறேன்.

#நன்றி

எனக்குக் கல்வி, இசை, இப்போ நடிப்பு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் என் எல்லா குருமார்களுக்கும் நன்றி.

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

#பிடிச்ச பாடல்

‘மதராசப்பட்டினம்’ படத்தில் வந்த ‘பூக்கள் பூக்கும் தருணம்’ மற்றும் `ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வந்த ‘இந்தப் பாதை எங்கு போகுமோ...’  பாடல்கள்.

#அந்த ஒரு நாள்

‘வெயில்’ படத்துக்கு இசையமைக்க, இயக்குநர் வசந்தபாலன் கூப்பிட்ட அந்த நாளும், 2014- ஜூன்ல ஒருநாள் ஞானவேல் ராஜா சார் ஒரு ரீமேக் படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுத்த அந்த நாளும் என் வாழ்க்கையைத் திருப்பிப் புரட்டிப்போட்ட நாள்கள்.

யாரோ to ஹீரோ - ஜி.வி.பிரகாஷ்

#சின்ன வயசுக் கனவு:

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மாதிரி  கிரிக்கெட்டர் ஆகணும்னுதான் ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்கான முயற்சிகளைத்தான் சின்ன வயசுல எடுத்தேன்.

#நீண்டநாள் பழக்கம்

நான் என்னுடைய எந்தக் கருத்தையும் மறைக்காம வெளிப்படையா சொல்லிடுவேன். அதுதான் என் ப்ளஸ் மற்றும் மைனஸ்.

#கடைசியா சொல்றேன்

எந்த விஷயத்திலும் இயன்றதைக் காட்டிலும் அதிகமா சாதிக்க முயற்சி எடுக்கணும். அந்த முயற்சிகள்தான் முன்னே கொண்டுவந்து நிறுத்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism