Published:Updated:

`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’
பிரீமியம் ஸ்டோரி
`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: ஆ.முத்துகுமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: ஆ.முத்துகுமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’
பிரீமியம் ஸ்டோரி
`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

``வாழ்ந்து முடிச்ச கோழியும் வாழப்போற முட்டையும் சேர்ந்து இருக்கும் இடம்தான் `பிக் பாஸ்’ ’’ - தத்துவ முத்துகளை உதிர்க்கிறார் நடிகை ஆர்த்தி.  பிக்பாஸ் மூலம் தமிழர்களின் பேசுபொருளான ஆர்த்தியிடம் பேசினேன்.

`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

`` `பிக் பாஸ்’ போட்டியாளரா எப்படி உள்ளே போனீங்க?’’

 `` `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே குஷியாகிட்டேன். இந்த நிகழ்ச்சியின் விளம்பரம் வந்ததும், `14 போட்டியாளர்களில் ஒருத்தரா  நீயும்  இருக்கணும்’னு என் அப்பா ஆசைப்பட்டார். நான் பதறிட்டேன். இதுவரைக்கும் நான் வீட்டைவிட்டு தனியா எங்கேயும் இருந்ததே இல்லை. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்கூட அதிகம் கிடையாது.  என்னால 100 நாள்கள்  இருக்க  முடியுமானு ரொம்ப யோசிச்சு, முதல்ல `போகலை’னுதான் சொன்னேன். `என் பொண்ணு, எனக்கு அப்புறமும் எப்படி வாழுறானு நான் பார்க்கணும்’னு சொன்னார். ஒருகட்டத்துல, என் அப்பாவும் கணேஷும் சேர்ந்து `நீ ரொம்பத் தைரியமான பொண்ணு. உன்னால முடியும். எங்ககிட்ட இல்லாத திறமை உன்கிட்ட இருக்கு... இருக்கு’னு சொல்லிச் சொல்லியே ஏத்திவிட்டுட்டாங்க. ஆனால், இதில் என் புருஷனுக்கு ஓர் உள்குத்து இருக்குன்னாலும் பிக் பாஸ்ல கலந்துக்க அப்பாவுக்காக ஓகே சொல்லிட்டேன்.’’

``இவங்கதான் போட்டியாளர்கள்னு உங்களுக்கு முன்பே தெரியுமா?’’

``அந்த 14 போட்டியாளர்கள் யார்னு கடைசி நிமிஷம் வரைக்கும் பில்டப் கொடுத்துட்டே இருந்தாங்க. எங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு நிக் நேம் வெச்சுருந்தாங்க. என்னுடைய நிக் நேம் `பூஜா’னு அங்கே போனதுக்கு அப்புறம்தான் தெரியும்.  கமல் சாரைத் தவிர, வேற யார் வர்றாங்கனு வீட்டுக்குள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரியும். அங்கே ஸ்ரீ, வையாபுரி, கஞ்சா கருப்பு, அனுயானு எனக்குத் தெரிஞ்சவங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. ஜூலி என்டர் ஆனபோது, அவங்க தனியா இருக்காங்கனு ஃபீல் பண்ணக் கூடாதுனு, நான்தான் முதல் ஆளா `வாங்க ஜூலி’னு போய்க் கட்டிப்பிடிச்சு வரவேற்றேன். ஆனா, `என்னைக் கட்டிப்பிடிக்க ஆளே இல்லை’னு அடுத்த நாளே ஸ்ரீகிட்ட புலம்பியது தனி ட்ராக். அப்பவே கண்டுபிடிச்சுட்டேன்  ஜூலி மேடம்  எப்படிப்பட்டவங்கனு.’’

``அந்த வீட்டில் இருந்தவங்க ஏன் நீங்க `பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறணும்னு நினைச்சாங்க?’’

``என்னை கார்னர் செய்றாங்கனு ரெண்டாவது வாரமே எனக்குத் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ஜூலி எனக்கு முன்னாடி ஒண்ணு பேசுவாங்க. நான் இல்லாதப்போ வேற பேசுவாங்க. என்னைப் பற்றிப் பேசிக்கிட்டே இருக்காங்கனு காயத்ரி, சினேகன், ரைஸானு எல்லோரும் வந்து சொன்னாங்க. அப்புறம்  `லெமன்  அண்ட் ஸ்பூன்’  வெச்சு ஒரு டாஸ்க் வந்துச்சு.  நான் `பிக் பாஸ்’ கொடுக்கிற எல்லா டாஸ்க்கையும் சின்ஸியரா செய்வேன். ஆனா,  சக்தி `இது எல்லாம் சின்னப்புள்ளத்தனமாயிருக்கு. நான் ஒரு ஹீரோ. இந்த விளையாட்டுல கலந்துக்கிட்டா, என் இமேஜ் பாதிக்கும்’னு சொன்னார். `சக்தி... நான் வேணும்னா ஜல்லிக்கட்டுக் காளையை அவுத்துவிடட்டுமா... அடக்குறீங்களா?’னு கேட்டேன். உடனே அவருக்குக் கோபம் வந்துடுச்சு. சக்தி, தன்னைப் பெரிய ஹீரோனு நினைச்சுட்டிருக்கார். வெளியே வந்ததுக்கு அப்புறம்தான் தெரியும், ஒரு ஹீரோவுக்கு என்னென்ன தகுதிகள் வேணும்னு. முக்கியமா ஜூலிகூட வந்த அக்கா-தங்கச்சிப் பிரச்னைதான் நான் வெளியேறக் காரணம்னு நினைக்கிறேன்.’’

`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

``உங்களைக் காப்பாற்ற ஓட்டுப் போடலைனு மக்கள்மீது கோபம் இருக்கா?’’

``கிடையவே கிடையாது. இந்த ஆர்த்தி இப்போ இங்கே இருக்கக் காரணமே, மக்கள் கொடுத்த அன்புதான்; அவங்க கொடுத்த இடம்தான்.  அவங்களுக்கு என்னைத் திட்ட, வெறுக்க எல்லாத்துக்குமே உரிமையிருக்கு. ஆனா, நான் இத்தனை வருஷங்களா இங்கே நடிச்சுட்டிருந்தாலும், ஜல்லிக்கட்டு வீரத்தமிழச்சிமேல அவ்வளவு நம்பிக்கை வெச்சு நம்மைத்  தூக்கிப்போட்டுட்டு, அவங்களை `பிக் பாஸ்’வீட்டுக்குள்ளே உட்கார வைக்கிறாங்கன்னா, மக்கள் எவ்வளவு வெகுளியா இருக்காங்கனுதான் நினைச்சேன். நான் `பிக் பாஸ்’ வீட்டுல இருந்து வெளியே வரும்போது, `நான் யாரால் இந்த வீட்டைவிட்டு வெளியே வர்றேனோ... அவங்களோட உண்மை முகத்தை மக்கள் தெரிஞ்சுக்கணும்’னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். இப்போ அது எல்லாம்தான் உள்ளே நடந்துட்டிருக்கு.’’

``உள்ளே இருக்கும்போது உங்களுக்குப் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யார் யார்? வெளியே வந்ததுக்கு அப்புறம் உங்களுக்குப் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யார்?’’

``உள்ளேயும் வெளியேயும் எனக்குப் பிடிச்சவங்க ஓவியாதான். ஏன்னா, நாங்க ரெண்டு பேருமே விலைமதிப்பு இல்லாத  `அம்மா’ என்ற அன்பை இழந்திருக்கிறோம். ஓவியா, `சென்னையில் தனியா வசிக்கிறாங்க’னு சொன்னாங்க. அப்பவே அவங்க அன்புக்காக ரொம்ப ஏங்குறவங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். செம தில்லான பொண்ணு. வெளியே வந்தபோது, அது இன்னும் நல்லா தெரியுது. இப்போ பிந்து மாதவியையும் பிடிக்குது. எனக்கு இவங்க ரெண்டுபேரைத் தவிர, `பிக் பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கலை. எல்லோரும் சுயநலவாதிகள்!’’

``போட்டியாளர்களில் யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க?’’

``மக்களுடைய மனசை வென்ற ஓவியாதான் ஜெயிப்பாங்க. இப்போ அங்கே ரெண்டாவது இடத்துக்கு  யார் வரப்போறாங்க என்பதற்குத்தான் போட்டியே நடந்துக்கிட்டிருக்கு.’’

`` `ஓவியா ஆர்மி’ பெரிய குரூப்பா உருவாகியிருப்பதைக் கவனிச்சீங்களா?’’

``கிரிக்கெட் மேட்ச்லகூட `ஓவியா ஆர்மி’னு எழுதிக் காட்டுறாங்கன்னா... அந்த அன்புக்குத் தகுதியானவங்கதான் ஓவியா. கமல் சார் `எல்லோர் மாதிரியும் இமிடேட் செய்யுங்க’னு சொல்லியிருப்பார். ஆனா,  சக்தி மாதிரி பண்ண  ஓவியா கொஞ்சம் சிரமப்பட்டிருப்பாங்க. `என்னடா, ஒரு நடிகைக்கு நடிக்கக்கூட தெரியலையே’னு நீங்க நினைக்கலாம். ஆனா, அப்படிக் கிடையாது. ஒருத்தரை மாதிரி இமிடேட்கூட பண்ணாதவங்க எப்படி அடுத்தவங்களைப் பற்றிப் புறம் பேசுவாங்க? உண்மையாகவே ஓவியா 100 சதவிகிதம் அங்கே உண்மையா இருக்காங்க. இப்போ நிறைய பெண்கள், ஓவியா மாதிரி உண்மையா இருக்கணும்; ஓவியா மாதிரி வெளிப்படையா இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்.’’

`` `இந்த ஷோ ஸ்க்ரிப்ட்’னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?’’

``கண்ணைக்கட்டி காட்டுல விட்ட மாதிரி `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள விட்டுட்டாங்க. உள்ளே பேசுறது, அடிச்சுக்கிறது எல்லாமே சத்தியமா நாங்கதான். ஏதாவது பெரிய பிரச்னைனா `பிக் பாஸ்’ குரல் மட்டும்தான் உள்ளே கேட்குமே தவிர, வேற  யாரும் வர மாட்டாங்க. எங்களுக்குக் கொடுக்கப்படும் `டாஸ்க்’ மட்டும்தான் ஸ்க்ரிப்ட். வேற எதுவும் கிடையாதுங்க.’’

`` `பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல!’’

ஹோம் மேட்ஸுக்கு ஆர்த்தி வைத்திருக்கும் செல்லப்பெயர்!

வையாபுரி     - எல்லோரையும் வைய்யும் சோம்பேறி!

ரைசா         -  பவுடர் மூஞ்சி.

ஜூலி         -   போலிதான் மெயின் ஜோலியே.

சக்தி         -  மொன்ன கத்தி.

சினேகன்     - `ஸ்நேக்’ கண்.

காயத்ரி     - வாய்க்குத் தேவை கத்தரி.

ஆரவ்         -  சீட்டர் இன் லவ் `பவ்’

ஓவியா     -  காத்து வரட்டும்; கிளம்புறியா டைப்.

கணேஷ் வெங்கட்ராமன் - சாப்பாட்டு ராமன்.