Published:Updated:

பைரஸி ஒழி!

பைரஸி ஒழி!
பிரீமியம் ஸ்டோரி
பைரஸி ஒழி!

கார்க்கிபவா

பைரஸி ஒழி!

கார்க்கிபவா

Published:Updated:
பைரஸி ஒழி!
பிரீமியம் ஸ்டோரி
பைரஸி ஒழி!

கி.பி. ஆறாம் நூற்றாண்டு. ஓலைச்சுவடியும், கையெழுத்துப் பிரதிகளுமே மட்டுமே இருந்த காலகட்டம். அப்போது, கிரேக்க அரசவை ஒன்றில் நடந்த சம்பவம் இது. புலவர் ஒருவர் எழுதிய தொகுப்பு ஒன்றை வேறொருவர் காப்பியடித்துவிட்டார்.ஆனால், காப்பியடித்தவரோ ``நான் என் கையால் எழுதிய பிரதி அது. அதனால் எனக்குதான் சொந்தம்” என்றார். வழக்கு அரசரிடம் சென்றது. “எத்தனை கன்றுகள் பிறந்தாலும் அது தாய்ப்பசுக்குதான் சொந்தம். போலவே, எத்தனை பிரதிகள் வந்தாலும் முதலில் எழுதியவருக்குத்தான் அவை சொந்தம்” என்றார்.

காலம் 15 நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னமும் இந்தக் களவுப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஓலைச்சுவடி, ப்ளூ ரே டி.வி.டி. ஆகியிருக்கிறது. கையெழுத்துப் பிரதி பி.டி.எஃப் ஆகியிருக்கிறது. ஆனால், களவு மட்டும் அப்படியேதான் இருக்கிறது.

பைரஸி ஒழி!

magnet.com என்று ஓர் இணையதளம் செயல்பட்டு வந்தது. இந்தத் தளத்தில் அனைத்துப் பத்திரிகைகளும் வெளிவந்த உடனே பி.டி.எஃப் ஆக ரிலீஸ் ஆகிவிடும். தமிழில் வெளியாகும் கிட்டத்தட்ட அனைத்து நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் இவர்கள் தளத்தில் இலவசமாகக் கிடைத்தன. இதை எதிர்த்துப் பலர் புகார்கள் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து சென்ற மாதம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்ற மென்பொறியாளர் கைது செய்யப்பட்டார். ஆனால், மேக்னட் தளத்தின் இதயம் வெளிநாட்டில் எங்கேயோ இருக்கிறது. அதை இந்தியச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் அவலமான யதார்த்தம். ஆனந்த், பைரஸியின் பல மூளைகளில் ஒன்றுதான்.

பைரஸி எனப்படும் இந்தக் களவு வியாபாரம் ஒரே ஓர் ஆளோடு நிற்கிற விஷயம் இல்லை. இன்றைய டெக் உலகில்  போன்  இல்லாதவர்கள்கூட இருக்கலாம். ஆனால், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஃபார்வர்டு மெசேஜ்களையும், குட் மார்னிங்குகளையும் அனுப்பிக் கொண்டிருந்த வர்கள் இப்போது வேறு வகையான டிஜிட்டல் விஷயங்களை அதிகம் பகிர்கிறார்கள். அதில் முக்கியமானது, பத்திரிகைகளின் பி. டி. எஃப் வடிவங்கள். தினமும் காலையில் நம் வீட்டுக்கு நாளிதழ்கள் வருவதுபோல, காலை ஏழு மணிக்கெல்லாம் அன்றைய நாளிதழின் பி.டி.எஃப் வந்துவிடுகிறது. இவை அனைத்துமே திருட்டி சி.டி-க்கள்போல பைரஸி விஷயங்கள்தான்.

எவை பைரஸி?

ஒருவர் செய்த வேலையை, படைப்பை அவர் அனுமதி இல்லாமல் நகல் எடுப்பது என பைரஸிக்கு அர்த்தம் சொல்கிறது அகராதி. புத்தகமோ, ஓவியமோ, சினிமாவோ, அதை இன்னொரு வடிவத்துக்கோ அல்லது அதே வடிவிலோ உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வேறு பிரதி எடுப்பது எனச் சொல்லலாம். இந்த ஆங்கில வார்த்தையின் மூலத்தைக் கவனித்தால் பைரேட்ஸ் என்ற கடல்கொள்ளையர்களைக் குறிப்பிடும் வார்த்தைக்கு இட்டுச்செல்லும். கடல் கொள்ளையர்கள் செய்யும் களவைத்தான் முதலில் பைரஸி எனச் சொன்னார்கள்.

பைரஸி இரண்டு வழிகளில் பரவுகிறது. ஒன்று, இது பைரஸி எனத் தெரிந்தே வாங்குவது. திரைப்பட டி.வி.டி-க்கள், வீடியோகேம்ஸ் சி.டி-க்கள் போன்றவை இதில் அடங்கும். மற்றொன்று, பைரஸி எனத் தெரியாமலே அதை வாங்கிப் பயன்படுத்துவது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ். அகர்வால் எழுதிய புத்தகங்கள் பிரபலம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் அவரின் புத்தகங்களின் விலை 600 ரூபாயைத் தாண்டும். அதே புத்தகங்கள் கொஞ்சம் மலிவான காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு 200 ரூபாய்க்கே கிடைக்கின்றன. இவற்றில் முதல் சில பக்கங்கள் மட்டும் கலரில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இவை களவுப் பதிப்புகள். இதுபோல மென்பொருள்கள், பத்திரிகைகளின் பி.டி.எஃப், பாடல்கள் எனப் பல விஷயங்களில் அவை பைரஸி எனத் தெரியாமலே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

பைரஸி ஒழி!

சின்னத்திரையும் பைரஸியில் இருந்து தப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்த அரை மணி நேரத்தில் இணையத்தில் கிடைத்துவிடும். இப்போது இன்னும் வேகம். ஃபேஸ்புக்கில் லைவ்வே செய்துவிடுகிறார்கள். ஆனால், வெள்ளித்திரை அளவுக்குச் சின்னத்திரை அலட்சியமாக இல்லை. அவர்கள் இந்த பைரஸி பூதத்தை ஒழிக்க நடவடிக்கைகளை எப்போதோ தொடங்கிவிட்டார்கள்.

சன் குழுமம் சன் நெக்ஸ்ட் என்ற மொபைல் ஆப் மூலம் தனது அத்தனை நிகழ்ச்சிகளையும் இணையத்தில் பார்க்க வழி செய்திருக்கிறது. ஸ்டார் நிறுவனம் எப்போதோ ஹாட்ஸ்டார் என்ற மொபைல் அப்ளிகேஷனைக் கொண்டு வந்துவிட்டது.

பைரஸி என்றதும் அவை சினிமா, பாடல், சின்னத்திரையோடு முடிவதாக நினைக்க வேண்டாம். நம் வீடு முழுக்கக் களவுப்பொருள்கள் தான் நிறைந்திருக்கின்றன. நம் வீட்டுக் கணினி, லேப்டாப்பில் இருக்கும் மென்பொருள்களில் எத்தனை நாம் காசுகொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம்?

பைரஸித் தொழில் எந்தத் துறையில் இருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். படைப்பாளிகள் முதல் அதன் பயனர்கள்வரை கைகோத்துச் செயல்படுவதுதான் அதற்கான எளிய வழி. மக்கள் பொறுப்புஉணர்வுடனும், விழிப்புஉணர்வுடனும் செயல்பட வேண்டும். எவை பைரஸிப் பொருள்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பம்தான் பைரஸி வளர முக்கியமான ஆயுதம். எனில், அதே தொழில்நுட்பத்தைக்கொண்டு பைரஸியை நாம் ஒழிக்கவும் முடியும். சட்டங்கள் போடுவதும் ஒரு வழிதான். ஆனால், மக்களே களவுப்பொருள்களை அடையாளம் கண்டு அதை ஒதுக்குவதுதான் நிரந்தர மற்றும் முக்கியமான தீர்வாக இருக்க முடியும்.

பைரஸி ஒழி!
பைரஸி ஒழி!