Published:Updated:

பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!

பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!

தார்மிக் லீ - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!

தார்மிக் லீ - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!

`பிக் பாஸ் நிகழ்ச்சியே ஸ்க்ரிப்ட்படிதான் நடக்கிறது’ என ஆதாரங்களைச் சிலர் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை, அந்த நிகழ்ச்சி இந்த இயக்குநர்கள் ஸ்க்ரிப்ட் எழுதி, இயக்கியிருந்தால் எப்படியிருக்கும்?!

பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!

ஷங்கர்

ராஜமௌலி சினிமாவில் காட்டிய பிரமாண்டத்தை,  நான் டி.வி-யிலேயே காட்டி அசால்ட் செய்கிறேன் என்று களமிறங்கியிருப்பார். ஊருக்கு வெளியே 20 கி.மீ இடத்தை வளைத்துப் போட்டு அதில் பாகுபலிக்கே சவால்விடும்படி செட் ஒன்றை அமைத்து, கலர் கலர் பெயின்ட் அடித்து அதற்குள்ளே ஒரு கண்ணாடிச் சுவரால் ஆன பிக் பாஸ் வீட்டை அமைத்திருப்பார். அதுபோக சின்னச் சின்ன ரோபோக்களை உருவாக்கி, வீட்டுக்குள்ளே உலவவிட்டிருப்பார்.தட்டு கழுவுவதில் ஆரம்பித்து, தண்ணீர் சப்ளை செய்வதுவரை எல்லாவற்றையும் ரோபோவே பார்த்துக்கொள்ளும். அந்த ரோபோக்களுக்கு காதல் வைரஸ் தாக்கிவிடாமல், ஆன்ட்டி வைரஸ் அப்லோடு செய்ய வேண்டியது போட்டியாளர்களின் கடமை. ஒரே ஆள் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டியாக நடிப்பது, கரன்ட் வருவதற்கு பென்ஸ் காரை அடித்து நொறுக்குவது என  டாஸ்க்குகளை உருவாக்கி அதகளம் செய்வார்.

பாலா

பிக் பாஸ் வீட்டை ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் ஒரு சுடுகாட்டில் அமைப்பார். போட்டியாளர்கள் தூங்குவதற்கான ரூம்களைக் குடிசை கட்டி அமைத்துக் கொள்ளலாம். ஸ்மோக்கிங் கார்னர் இருக்கும், ஆனால், அங்கு பீடியை மட்டுமே புகைக்க முடியும். உள்ளே இருக்கும் ஆட்களின் முகத்தில் மேக்கப் என்பதே துளியும் இருக்கக் கூடாது. அதையும் மீறி மேக்கப் ஆசை வந்தால், தலைக்கு ப்ரவுன் கலர் டை அடித்துக் கொள்வதற்கும் மொட்டை அடித்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும். லக்ஸரி பட்ஜெட்டில் பழைய சோறும், பச்சை மிளகாய் ஊறுகாயும் மட்டுமே இருக்கும். க்ளீனிங் டீமுக்கு வேலையே கிடையாது. கோணிப்பை ரேஸ், பாட்டுப் பாடிக்கொண்டே வீட்டைச் சுற்றி ஓடுவது போன்ற விஷயங்கள் டாஸ்க்காக நடக்கும்.

ஏ.ஆர். முருகதாஸ்

உள்ளே போட்டியாளர்கள் அனைவரும் மொபைல் போன், லேப்டாப், ஹேண்டி கேம் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுப்பார். இவர் படங்களில் வருபவர்கள் ஹை டெக் டெக்கீயாக இருப்பார்கள். `கூகுள் கூகுள்’, `செல்ஃபி புள்ள’ எனப் பாடுவார்கள் என்பதாலேயே இந்தச் சிறப்பு அனுமதி. பிரமாண்ட குழாயில்தான் வீட்டு செட்டே போடப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் தவறே செய்திருந்தாலும் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே கூடாது. `ஸாரி’ எனச் சொல்லிக்கொள்ளலாம். போட்டியாளர்களுக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்லைக் கண்டுபிடிப்பது, இருட்டுக்குள் காயின்களைத் தூக்கிப்போட்டுக் கண்டுபிடிப்பது போன்றவற்றை டாஸ்க்குகளாக நடத்தி டரியலாக்குவார்.

பிக்பாஸை இயக்க இவங்க ரெடி!

கௌதம் மேனன்

தமிழ் பிக் பாஸின் முக்கியமான விதியே ஆங்கிலத்தில் அதிகம் பேசக் கூடாது என்பதுதான். ஆனால், கௌதம் மேனன் இயக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் விதியே ‘ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும்.’ எல்லா போட்டியாளர்களும் தோரணையாக ட்ரெஸ் அணிந்திருக்க வேண்டும். அதுவும் நீல நிற ஆடையாக இருந்தால் சிறப்பு. ஆண்கள் கையில் கண்டிப்பாகக் காப்பு இருக்க வேண்டும். காலையில் எழுந்திருக்கும்போது இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் கிடார் மெலடியாக மட்டுமே இருக்க வேண்டும். லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்கை வெல்பவர்கள் காபி ஷாப்புக்குக் கூட்டிச் செல்லப்படுவார்கள். முக்கியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இசையமைப்பாளர் (மிஸ்டர் எக்ஸ்) யார் என்றே கடைசிவரை தெரியாமல் இருக்கும். சைக்கிள் ஓட்டினால்தான் தண்ணீர் வரும் என்ற டாஸ்க்குக்குப் பதில் ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் இருக்கும் தோட்டத்தில் ரவுண்ட் அடித்தால்தான் தண்ணீர் வரும் என்ற டாஸ்க்கைக் கொடுப்பார்.

செல்வராகவன்

பிக் பாஸ் வீட்டை, அந்தமானுக்கு அருகில் உள்ள தீவில்தான் அமைப்பேன் என அடம்பிடிப்பார். வீட்டுக்குள் எங்கே என்ன புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போட்டியாளர்களுக்கே தெரியாது. நிகழ்ச்சியில் வெற்றிபெற பிரானா மீன்களைச் சமாளிப்பது, பாம்புகளிடம் இருந்து தப்பிப்பது போன்ற ஏழு விதமான தடைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க வேண்டும். கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போடப்பட மாட்டாது. கொட்டும் மழையில் வெறித்தனமாக டான்ஸ் ஆடுவது, முகத்தில் ரியாக்‌ஷனே காட்டாமல் பாடுவது போன்ற டாஸ்க்குகளை அவ்வப்போது கொடுப்பார்.

மிஷ்கின்

மிஷ்கினின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அந்த வீட்டில் இருக்கும் 54 கேமராக்களும் தரையில் இருந்து ரெண்டு இன்ச் உயரத்தில்தான் பொருத்தப்பட்டிருக்கும். நிகழ்ச்சி முழுவதும் போட்டியாளர்களின் கால்களை மட்டுமே காட்டுவார். யாரும் அதிகம் பேசாமல், தேவைப்படும் நேரத்தில் மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டும் என ரூல்ஸ் போடுவார். உள்ளே இருக்கும் அனைவரும் மொட்டை அடித்து, கறுப்பு நிற கூலிங் க்ளாஸ் அணிந்திருக்க வேண்டும். இரவு நேரத்தில்தான் எல்லா டாஸ்க்குகளுமே நடக்கும். அதனால் போட்டியாளர்கள் பகல் நேரத்தில் மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுவார்கள். இரவு நேரத்தில் தூங்கினால், ஓநாயை ஊளையிட வைத்து எழுப்பிவிடுவார்கள். குங்ஃபூ கற்றுக்கொள்ளுதல், வயலின் வாசித்தல், மஞ்சள் சேலை அணிந்து குத்தாட்டம் போடுதல் போன்றவைதான் மிஷ்கின் கொடுக்கும் டாஸ்க்குகள்.