Published:Updated:

தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

தமிழுக்கு நீதி வழங்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

Published:Updated:
தமிழுக்கு நீதி வழங்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

‘தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும்’ என்று மதுரையில் ஒன்பது வழக்கறிஞர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்டகால வரலாறு உண்டு. ‘ஒரு விவசாயிக்குத் தன் நிலப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், இரண்டு வழக்கறிஞர்களும் என்ன பேசுகிறார்கள் என்றே புரியாத நிலை நியாயம்தானா?’ - இந்த எளிய கேள்விதான் இந்தப் பிரச்னையின் தார்மிக அடிப்படை.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். ஆனாலும், இன்னமும் நீதிமன்றங்களில் தாய்மொழியை நடைமுறைக்குக் கொண்டுவராமல் ஆங்கிலத்தின் துணையை நாடுவது ஏன்?

தமிழுக்கு நீதி வழங்குங்கள்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானம்,
2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து 11 ஆண்டுகள் சென்றபிறகும் தமிழ் வழக்காடு மொழியாகவில்லை. தமிழை நீதிமன்ற மொழியாக்க ஏதேனும் ஒரு முட்டுக்கட்டையைப் போட வேண்டும் என்று நினைத்த அப்போதைய காங்கிரஸ் அரசு, தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிக் கருத்து கேட்டது. உச்ச நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, தமிழகத்தின் கோரிக்கையை அது கிடப்பில் போட்டுவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2)-வது பிரிவின்படி உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் மத்திய அரசுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனாலும் மத்திய அரசு, நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக ஆக்காமல் இருப்பதற்கு மாற்றாந்தாய் மனப்பான்மையைத் தவிர, வேறு ஒரு காரணமும் இல்லை. தொடர்ச்சியாக மத்தியில் உள்ள கட்சிகளின் கூட்டணிகளில் நம் மாநில ஆளுங்கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை ஆக்குவதற்கு மத்திய அரசுக்கு அவை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

“தேச மொழியும் தமிழ், கோர்ட்டில் வழங்கப்படும் மொழியும் தமிழ், நியாயாதிபதியும் தமிழர், வாதிக்கிற வக்கீலும் தமிழர், மற்ற வக்கீல்கள், கட்சிக்காரர் முதலானவர்களும் தமிழர்களே! இப்படியாக எல்லாம் தமிழ்மயமாகி இருக்க, இந்த வக்கீல்கள் யாருக்காக ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை.”-150 ஆண்டுகளுக்கு முன்பு, நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை வெளிப்படுத்திய வேதனைக்குரலில் உள்ள நியாயம் இன்னும் உணர்ந்துகொள்ளப்படவில்லை என்பது அவலமானது அல்லவா?

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரிப்பது முதல், அனைத்துவகையிலும் மத்திய அரசுடன் இணக்கம் காட்டுகிறது தமிழக ஆளும் கட்சி. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, நீதித்துறையில் தமிழைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

‘நீதிமன்றங்களில் தமிழ்’ என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் தமிழுக்கும் நீதி வழங்குங்கள், தமிழர்களுக்கும் நீதி வழங்குங்கள்!