Published:Updated:

சாராதான் இப்போ வைரல்!

சாராதான் இப்போ வைரல்!
பிரீமியம் ஸ்டோரி
சாராதான் இப்போ வைரல்!

கார்க்கிபவா

சாராதான் இப்போ வைரல்!

கார்க்கிபவா

Published:Updated:
சாராதான் இப்போ வைரல்!
பிரீமியம் ஸ்டோரி
சாராதான் இப்போ வைரல்!

பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூம் ஜாலியான ஓர் இடம். ஹவுஸ் மேட்ஸ் எல்லோருக்குமே அடுத்தவர்களைப் பற்றி ஒரு கருத்து இருக்கும். அதை அவர்களிடமே சொல்ல ஆசைதான். ஆனால், நேர்மையாக, முகத்தில் அடித்ததுபோல அதைச் சொல்ல ஓவியாக்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள், இந்த கன்ஃபெஷன் அறையில் பிடிக்காத விஷயத்தை பிக் பாஸிடம் காரணமாகச் சொல்லி, அவர்களை நாமினேட் செய்வார்கள்.

சாராதான் இப்போ வைரல்!


அடுத்தவர்களின் குறையைச் சொல்வதை விட, நம்மைப் பற்றிய அடுத்தவர்களின் கருத்துகளை அறிய எல்லோருக்கும் ஆவல் உண்டு. புதிதாக உடை அணிந்தால், அதுவரை செய்யாத ஒரு காரியத்தைச் செய்தால் என நம் செயல்கள் அனைத்தையும் அடுத்தவர்களுக்குத் தெரியவைப்பதே, அவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ளத்தான். ஆனால், வெளிப்படையாகப் பேசும்போது 90 சதவிகிதம் பேர் `செம சட்டைடா’ என்றோ `நல்லா பேசினேம்மா’ என்றோதான் சொல்வார்கள். அவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக, அதே சமயம் ரகசியமாகப் பகிர ஒரு வாய்ப்புக் கிடைத்தால்..? அதுதான்

சாரா (sarahah) ஆப்.

இந்த ஆப்பில் நம்மைப்பற்றி யார் வேண்டுமென்றாலும் பேசலாம். அது நமக்கு மட்டுமே தனித்தகவலாக வரும். வேறு யார் கண்களுக்கும் தெரியாது. நம்மால் அவர்கள் கருத்துகளுக்குப் பதில் சொல்லவும் முடியாது. இந்த ‘ஒன் வே’ கருத்து  மெஷின்தான் சென்ற வார ஹாட் நெட் டாக்.  உலக அளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தில் இருக்கிறது. யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் `யார் சாமி இவன்?’ என ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சாரா, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபிதீன் தஃபீக் என்ற டெவலப்பரால் உருவாக்கப்பட்டு வெளியானது. ‘சாரா’ என்றால் அரேபிய மொழியில் ரகசியம் என்று அர்த்தம். பழைய தமிழ் சினிமாக்களில் ‘மொட்டைக் கடுதாசி’ என்றொரு டெக்னிக் பிரபலமானது. யார் அனுப்பியது என்பது தெரியாது. ஆனால், விஷயம் வேண்டியவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும், இல்லையா? அந்த மொட்டைக் கடுதாசியின் ஆப் வெர்ஷன்தான் சாரா.

இந்த ஆப்-ஐ ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் நல்லது. அதுவே, யாரோ ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என முடிவு செய்து ட்ரோலிங்,  புல்லிங்(Bullying) போன்ற சீண்டல்களைக் கையில் எடுத்தால், தொல்லை தரும் ஆப்பாக மாறிவிடும்.

இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம் தீக்குச்சிப் போலத்தான். அதை வைத்து நாம் விளைக்கை ஏற்றுகிறோமோ, வீட்டைக் கொளுத்துகிறோமோ என்பதில்தான் விஷயம் இருக்கிறது.