Published:Updated:

அசத்தல் கண்காட்சி!

அசத்தல் கண்காட்சி!
பிரீமியம் ஸ்டோரி
அசத்தல் கண்காட்சி!

சி.மீனாட்சி சுந்தரம் - படங்கள்: ஜெரோம்

அசத்தல் கண்காட்சி!

சி.மீனாட்சி சுந்தரம் - படங்கள்: ஜெரோம்

Published:Updated:
அசத்தல் கண்காட்சி!
பிரீமியம் ஸ்டோரி
அசத்தல் கண்காட்சி!
அசத்தல் கண்காட்சி!

மிழ்நாட்டின் 75 வருட அரசியலைக் கண்முன் நிறுத்துகிறது ‘முரசொலி’ நாளிதழின் பவள விழா காட்சியரங்கம்.

கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்படும் கருணாநிதி, கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகத்துக்கு வந்து பத்திரிகைப் பணிகளில் மூழ்குவதையே பெரிதும் விரும்புவார். அங்கு அவருக்கென ஒரு பிரத்யேக அறை இருக்கும். அதில் உட்கார்ந்து ஆசிரியர் குழுவினருடன் பேசுவது, அடுத்தநாளுக்கான செய்திகளைக் கவனிப்பது, தொண்டர்களுக்குக் கடிதம் எழுதுவது, தனது ஐடியாக்களில் உருவான கார்ட்டூன்களைத் தேர்ந்தெடுப்பது எனப் பரபரப்பாவார். எந்தச் செய்தியிலும் பிழை வந்துவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டுவார். கருணாநிதி செயல்படும் அந்த அறை, தமிழகத்தின் பல அரசியல் மாற்றங்களுக்கு விதை போட்டிருக்கிறது. ‘முரசொலி’ பவள விழா காட்சியரங்கில் அந்த அறைதான் நம்மை வரவேற்கிறது. அதில் அமர்ந்து, தனது லெட்டர் பேடில் கருணாநிதி எழுதிக்கொண்டிருப்பது போன்ற மெழுகுச்சிலை பார்வையைப் பறிக்கிறது.

அச்சு ஊடகத்தின் அழகியலை இயந்திரமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ‘முரசொலி’ அச்சடிக்கப்பட்ட பழமையான அச்சு இயந்திரமும், அதில் ஊழியர்கள் பணியாற்றுவது போன்ற அமைப்பும் ரியலிஸ்டிக்காக இருக்கிறது.

கருணாநிதி எழுத்தில் உருவான பல புத்தகங்கள், நாவல்கள், கட்டுரைகள், நாடக வசனங்கள், சிறுகதைகள், கடிதங்கள், கேள்வி - பதில்கள் விழா அரங்கம் முழுவதும் இடம்பெற்றிருக்கின்றன. ரோமாபுரிப் பாண்டியன், சிலப்பதிகார நாடகக் காப்பியம், நெஞ்சுக்கு நீதி, ஆறுமாதக் கடுங்காவல், கே.ஆர்.நாராயணன் வெளியிட்ட ‘பொன்னாரம்’, தாய்மை, நான்மணிமாலை, பெருமூச்சு, தூக்குமேடை என அப்போது வெளியிடப் பட்டிருந்த அதே அட்டைப்படத்தோடு காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

அசத்தல் கண்காட்சி!

பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த அரசியல் நகர்த்தல்களின் ஆதாரங்களைப் பரப்பி வைத்திருக்கிறார்கள். யேல் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா எடுத்த திருக்குறள் வகுப்பு, “கருணாநிதியிடம் நானும், நாடும் நிறைய எதிர்பார்க்கிறோம்” என 1968-ல் அண்ணா பேசியது,  ஜெயப்பிரகாஷ் நாராயணனுடனான டெல்லி சந்திப்பு, கண்ணதாசன் பற்றிய கருணாநிதியின் பதிவு, பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன், வி.பி.சிங் ஆகியோர் பற்றிய கருணாநிதியின் செய்திகள் என சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார்கள்.

இந்திரா காந்திக்கு ஹிட்லர் வேடம், காமராஜர் - அண்ணா மல்யுத்தம், எம்.ஜி.ஆர் கார்ட்டூன்கள், எமர்ஜென்சி, இந்திப் போராட்டம் என கார்ட்டூன்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் கருணாநிதி. இவரது ஐடியாக்களை கார்ட்டூன் செல்லப்பன் உள்வாங்கி அசத்தியிருக்கிறார். இந்த அரங்கில் பெயரிடப்படாத கார்ட்டூன் படங்களை நன்றாகப் பார்த்து ரசித்துவிடுங்கள். அது கருணாநிதியே பென்சில் பிடித்து வரைந்தவை. நக்கலும், நையாண்டியும் அவரது எழுத்துகள்போலவே கார்ட்டூன்களிலும் விளையாடியிருக்கின்றன. 

எமர்ஜென்சி காலம் பற்றிய பல தகவல்களை அடுக்கியிருக்கிறார்கள். இங்குதான் ஸ்டாலின் என்ட்ரி கொடுக்கிறார். ஸ்டாலின் கைது, சிட்டிபாபு மரணம், இந்திரா காந்தி அரசின் அடக்குமுறை என அப்போதைய புகைப்படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தமிழ் ஈழப் போராட்டம், டெசோ அமைப்பு, ஐவரணி, இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அதில் தி.மு.க மாணவர் அமைப்பு ஏற்படுத்திய புரட்சி, கல்லக்குடிப் போராட்டம் எனக் காலங்களை ஓட்டிக் காட்டுகிறது அந்த அரங்கம்.

கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கும் கருணாநிதியை ஒருமுறை இந்த அரங்கத்துக்கு அழைத்து வந்தால், சலனமற்று ஓய்ந்திருக்கும் அவரின் கைகள் அடுத்தநாளே பேனா தேடும்!