Published:Updated:

சீரியல் செல்லம்ஸ்!

சீரியல் செல்லம்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சீரியல் செல்லம்ஸ்!

வே.கிருஷ்ணவேணி, வெ.வித்யா காயத்ரி - படம்: ப.சரவணகுமார்

சீரியல் செல்லம்ஸ்!

வே.கிருஷ்ணவேணி, வெ.வித்யா காயத்ரி - படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
சீரியல் செல்லம்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சீரியல் செல்லம்ஸ்!

மிழ் சீரியல்களின் புதிய முகங்கள் இவர்கள். வித்தியாச வேடங்களிலும், அட்டகாச நடிப்பிலும் லைக்ஸ் அள்ளும் சின்னத்திரை நட்சத்திரங்களின் அப்டேட்டா இங்கே!

சீரியல் செல்லம்ஸ்!

நட்சத்ரா நாகேஷ்
As I’m suffering from kadhal


சன்டி.வி-யில் `வி.ஜே’, சின்னத்திரை நடிகை, குறும்பட நாயகி எனக் கலந்துகட்டி அடிக்கும் கலர்ஃபுல் பொண்ணு நட்சத்திரா. ‘As I’m suffering from kadhal’ வெப் சீரிஸில், இவருடைய இயல்பான நடிப்புக்கு இணையத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ்.   ஒருமுறையாவது ஈஃபிள் டவருக்குச் சென்றுவர வேண்டும் என்பது நட்சத்திராவின் சின்னச் சின்ன ஆசை. ஒரு பீரோ முழுவதையும் ஷூக்களுக்காக ஒதுக்கும் அளவுக்கு ஷூ பிரியர். நட்சத்திராவுக்கு நிறைய லவ் புரொபோசல்ஸ் வந்துகொண்டிருக்கிறதாம். ஆனால், பொண்ணுக்கு நடிப்பு மேலதான் ஒரே லவ்வாம்.

சீரியல் செல்லம்ஸ்!

ரக்‌ஷிதா 
சரவணன் மீனாட்சி 


‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தவர் ரக்‌ஷிதா. கன்னடம் தாய்மொழியாக இருந்தாலும், இப்போதைக்கு இவர்தான் தமிழ்நாட்டுக்கே மருமகள். ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மீனாட்சி. தன்னை வாழவைக்கும் தமிழ் மக்களை இன்னும் நிறைய மகிழ்விப்பதுதான் இவருடையே ஒரே லட்சியமாம். அஜித்தும் அனுஷ்காவும் ஃபேவரைட்ஸ். ‘`ரொம்பக் கோபப்படுவேன் பாஸ். அது மட்டும்தான் ஒரே ஒரு கெட்டப் பழக்கம்’’ என்கிறார் மீனாட்சி என்கிற ரக்‌ஷிதா.

சீரியல் செல்லம்ஸ்!

அன்வர் 
பகல் நிலவு 


‘பிரிவோம் சந்திப்போம்‘ மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தவர், செய்யது அன்வர். பிறந்து வளர்ந்த ஊர் ஆந்திராவாக இருந்தாலும், சென்னையில் வாசம். பி.காம் பட்டதாரி. விஜய் டி.வி-யின் `பகல் நிலவு’ சீரியல் அவருக்கான அடையாளத்தை வாங்கிக்கொடுத்திருக்கிறது. சீரியலில், நிஜக்காதலி சமீரா ஷெரீஃப்புடன்தான் நடிக்கிறார். 26 வயதாகும் அன்வருக்கு வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுப்பதுதான் லட்சியம்.  

சீரியல் செல்லம்ஸ்!

ஷாமிலி 
பாசமலர்


மெகா சீரியல்களின் ஆல் ரவுண்டர் ஷாமிலி. ‘பாசமலர்’, ‘பொன்னூஞ்சல்’, ‘வாணி ராணி’ எனப் பல தொடர்களில் ஷாமிலி பேபி பிஸி. ‘பாண்டிய நாடு’, ‘மேகா’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சீரியல்களில் வில்லியாக நடித்தாலும், நிஜத்தில் பரம சாது. ‘`பக்கா சென்னைப் பொண்ணாக இருந்தாலும், பாவாடை தாவணிதான் எனக்குப் பிடித்தது’’ என்கிறார். ஸ்போர்ட்ஸ் மற்றும் பெயின்ட்டிங் இரண்டிலும் ஆர்வம்.

சீரியல் செல்லம்ஸ்!

ராகுல் 
நந்தினி


சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘நந்தினி’ சீரியலின் மூலம் ஹிட் ஸ்டாரானவர் ராகுல். கேரளாவில் இருந்து சென்னை வந்த ஃபேஷன் மாடல். நடிப்பு ஒருபக்கம் இருக்க, பி.டெக் முடித்துவிட்டு எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறார். ‘`சாகும்வரைக்கும் நடிச்சுட்டே இருக்கணும். எல்லோருக்கும் பிடித்த நடிகர் என்ற பெயரை வாங்கணும்’’ என சீரியஸாக வாழ்க்கை லட்சியங்களைச் சொல்கிறார் ராகுல்.

சீரியல் செல்லம்ஸ்!

சஞ்சீவ்
ராஜா ராணி


மலையாளத்தில் ‘அபூர்வா’ படத்தில் அறிமுகமானவர் சஞ்சீவ். இந்தப் படத்தில் சஞ்சீவின் ஜோடி `பிக் பாஸ்’ டார்லிங் ஓவியா. ‘குளிர் 100 டிகிரி’ படம்தான் தமிழில் சஞ்சீவின் விசிட்டிங் கார்டு. தற்போது ‘ராஜா ராணி’ சீரியலின் ஹேண்ட்சம் ஹீரோ. கோயம்புத்தூர் பையனான இவரின் நிஜப்பெயர், சையத் அஸாருதீன். பள்ளிப் பருவத்திலே பிரேக் அப் ஆகிவிட்டதால், அடுத்த காதலுக்காக வெயிட்டிங்காம்.

சீரியல் செல்லம்ஸ்!

நட்சத்திரா
யாரடி நீ மோகினி 


சினிமா வழியே சின்னத்திரைக்கு என்ட்ரியானவர் இந்த நட்சத்திரா. ‘கிடா பூசாரி மகுடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். அந்தப் படத்துக்காக மொட்டை அடித்துக்கொள்ளவும் துணிந்த டெடிகேட்டட் நடிகை. தற்போது, ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில், வெண்ணிலாவாக செட்டில் ஆகிவிட்டார். நிறைய ஊர் சுற்றுவது நட்சத்திராவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.