Published:Updated:

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!
பிரீமியம் ஸ்டோரி
டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

நித்திஷ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

நித்திஷ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!
பிரீமியம் ஸ்டோரி
டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

ன்டர்வெல்லே விடாமல் சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் செலிபிரிட்டிகள். ‘இவரைப் பார்க்கிறதா இல்லை அவரைப் பார்க்கிறதா?’ எனக் குழம்பித் தவிக்கிறான் தமிழன். இப்படி மானாவாரியாகப் போட்டுத் தாக்கும் இந்த  செலிபிரிட்டிகள் பத்தாண்டுகளுக்குப்  பின் என்ன  செய்து கொண்டிருப்பார்கள்? எனக் கிறிஸ்டோபர் நோலன் உதவியோடு காலத்தைக் கடந்து சென்று பார்த்தோம்...

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

ஓவியா

‘ஓவியா கேரளா போய்ட்டார் ஓவர் ஓவர்’, ‘ஓவியா ஹேர்கட் பண்ணிட்டார் ஓவர் ஓவர்’ எனத் தீயாக வேலை பார்க்கின்றன ஓவியா ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸ் என முப்படைகளும். இப்படி 40 நாள்களில் நான்கு கோடி ரசிகர்களைப் பெற்ற ஓவியா இந்த மைலேஜை வைத்தே பத்தாண்டுகள் சினிமாவில் சக்கைப்போடு போடுவார். போக, யோகி-பி போல ராப் பாடகராகவும் மின்னுவார். ‘பிக் பாஸ்’ சீசன் 10-ஐ தொகுத்து வழங்கி, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ எனச் சிணுங்கிச் சில்லறைகளைச் சிதறவிட்டிருப்பார்.

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

ரஜினி

ரஜினி எதிர்காலத்தில் எப்படியிருப்பார் என்பதைக் கணிக்க டைம் மெஷின் எல்லாம் தேவையே இல்லை. 96-ல எப்படியிருந்தாரு? 2006-ல எப்படியிருந்தாரு? அதேதான் 2026-லயும். போர் வருமா எனக் கேடயம் மாட்டிக்கொண்டு `பாகுபலி’ நாசர்போல டெலஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருப்பார். (போர் வராது, போர்ல தண்ணி வேணா வரும் என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் சமாளிக்கணும்ல) அறுபதைத் தாண்டி எண்பதைத் தொடப்போகும் அவர் ரசிகர்களும், ‘அட்லீஸ்ட் பேரன் கல்யாணத்துக்காவது விருந்து வைங்க தலைவா’ எனக் கோரிக்கை வைத்துக்கொண்டிருப்பார்கள்.

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

மோடி

மோடி எம்.பி.பி.எஸ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அலாரம் வைத்து இந்தியாவைப் பிறக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இதுவரை பிறந்ததெல்லாம் போதாதென 2022-ல் வேறு புதிதாகப் பிறக்கவைக்கப் போகிறாராம். ஆனா, வாழ்க்கை ஒரு வட்டம் ஆச்சே பாஸ்.பத்தாண்டுகளுக்கு முன் ரூட்டுத் தலயாக இருந்த அத்வானியை எப்படி, மோடி ஆள் அட்ரஸ் தெரியாமல் ஒதுக்கினாரோ அதேபோல இப்போது உலகம் சுற்றும் கொலம்பஸாக இருக்கும் மோடியை யோகி ஓரங்கட்டலாம். என்ன, யோகியின் வேகத்துக்கு புதிய இந்தியா மட்டுமல்ல, புதிய அமெரிக்கா, அண்டார்டிகா எல்லாம்கூடப் பிறக்கும்.

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

எடப்பாடி பழனிசாமி

புத்தம் சரணம் கச்சாமி - இதுதான் இப்போதைய எடப்பாடி பழனிசாமி. எத்தைத் தின்றால் மூக்கடைப்பு நீங்கும் என்ற ரேஞ்சுக்கு அவஸ்தைப்படுகிறார். ஒருபக்கம் தினகரன், இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ், மூன்றாவது கோணத்தில் ஸ்டாலின், போதாக்குறைக்கு உயர் நீதிமன்றம் என நான்கு பக்கங்களில் இருந்தும் பாக்கெட் செய்கிறார்கள். இவ்வளவு டார்ச்சரையும் தாங்கும் ஆள் பத்து ஆண்டுகள் கழித்து எப்படியிருப்பார்? கண்டிப்பாக எடப்படி அருகே எட்டு கிரவுண்ட் நிலத்தில் ஆசிரமம் கட்டி, ‘போங்கய்யா நீங்களும் உங்க பாலிடிக்ஸும்’ என சீஃப் எக்ஸிக்யூட்டிவ் சாமியாராகியிருப்பார். ஏன் என்றால் ஆள் இப்பவே ஜென் நிலைலதான் இருக்காப்ல!

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

சிம்பு

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் எட்டாவது ரிலீஸாகாதப் படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகியிருக்கும்.அதற்கான புரொமோஷன்களில் வந்து, ‘எனக்குப் படம் நடிக்கணும்னு அவசியமே இல்லைங்க, நான் ஏங்க நடிக்கணும்?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்பார். ‘நான் ஆன்மிகத்தைத் தேடிப்போறேன்’ என ஆம்ஸ்டர்டாமிற்கு ஃப்ளைட் ஏறிக் காணாமல் போவார். இங்கே ஒன்பதாவது ரிலீஸாகாத படமும் ரெடியாகும்.

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

பாபா ராம்தேவ்

இவர் காமெடியனா? பிசினஸ்மேனா? ஆன்மிக குருவா? யோகா மாஸ்டரா? - யாருக்குமே தெரியாது. ஆனால், விஜய் டி.வி முதல் வி.டி.வி வரை எல்லாவற்றிலும் ஆஜராகிறார். ஏற்கெனவே ‘பதஞ்சலி பயன்படுத்தாதவங்க எல்லாம் அர்ஜுன் படம் பார்த்து தேசபக்தியை வளர்த்துக்கோங்க’ என்கிற ரீதியில் பில்டப் ஏற்றுகிறார்கள். பத்தாண்டுகள் கழித்து பதஞ்சலிப் பயன்படுத்தாதவர்களை நாடு கடத்தினாலும் கடத்திவிடுவார்கள். அம்பானிக்கே டஃப் போட்டி கொடுப்பது, டெட் எக்ஸில் சிறப்புரையாற்றுவதென செம பிஸியாக இருப்பார் பாபா.

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

வைகோ

கைவசம் இருந்த இதிகாச, புராணக் கதைகளை எல்லாம் சொல்லிச் சரக்குத் தீர்ந்திருக்குமென்பதால், வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளாக வரும் ‘அடேங்கப்பா’ ரகக் கதைகளைச் சொல்லத் தொடங்கியிருப்பார். சட்டமன்றத் தேர்தல்கள் எல்லாம் போரடித்து, அமெரிக்க மண்ணில் கால் பதித்திருப்பார். அங்கே குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டையுமே இணைத்துக் கூட்டுவைத்து, ‘உலக மக்கள் நலக் கூட்டணி’ ஒன்றைத் தொடங்கியிருப்பார். சரியாக ஒரு மண்டலம் கழித்து ‘என்னை அலாஸ்கா கவர்னராக நியமிக்கவில்லை’ எனக் கோபித்துக்கொண்டு வெளியேறி இருப்பார்.

டைம்மெஷின்ல கொஞ்சம் ஏறுங்க ஒறவுகளே!

அன்புமணி

முதல்வர் வேட்பாளராக இருந்து போரடித்துப் பிரதமர் வேட்பாளராகி இருப்பார். இதுவரைக் கூட்டணி வைக்காமல் மிச்சம் வைத்திருக்கும் உதிரிக்கட்சிகளோடும் நட்பு பாராட்டித் தேர்தல்களைச் சந்திப்பார். ‘உகாண்டாவில் பதிவான ஓட்டுகள் எல்லாம் எனக்கு விழுந்திருந்தா, இந்நேரம் நான் ஜனாதிபதியாகி இருப்பேன்’ என வெகுளியாகக் கண்ணைக் கசக்கியிருப்பார். முதல் கையெழுத்து ஊழல் ஒழிப்புக்குத்தான் என 12,751-வது முறையாகச் சபதம் ஏற்றிருப்பார்.