Published:Updated:

போன் இருந்தா லோன்!

போன் இருந்தா லோன்!
பிரீமியம் ஸ்டோரி
போன் இருந்தா லோன்!

ஞா.சுதாகர்

போன் இருந்தா லோன்!

ஞா.சுதாகர்

Published:Updated:
போன் இருந்தா லோன்!
பிரீமியம் ஸ்டோரி
போன் இருந்தா லோன்!
போன் இருந்தா லோன்!

 “நீ யாரென சொல்... உனக்கு எவ்வளவு தருவது என நான் சொல்கிறேன்” என சில ஸ்வைப்களில் இன்ஸ்டன்ட்டாகக் கடன்களை வாரி வழங்குகின்றன ஃபைனான்ஷியல் ஸ்டார்ட்அப்கள். எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை; எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை; மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு.

அப்படி இன்ஸ்டன்ட்டாக கடன் தரும் சில ‘நண்பேண்டா’ ஆப்ஸ் இங்கே...

மணி டேப் (Money Tap)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போன் இருந்தா லோன்!


குறைந்தபட்சம் 3,000; அதிகபட்சம் ஐந்து லட்சம். கடன்வாங்க செலவழிக்க வேண்டிய நேரம் வெறும் 15 நிமிடம். ஒரு கூகுள் அக்கவுன்ட்டும், மொபைல் எண்ணும் இருந்தாலே போதும்; மணி டேப்பில் கணக்குத் துவங்கிக் கடன் கேட்கலாம். ஆப்பைத் திறந்தால், நிறைய மெனு ஆப்ஷன்கள், பக்கம் பக்கமாக பாலிஸி விதிகள் என எதுவும் இல்லாமல், சிம்பிளாக ஹாய்  சொல்லி வரவேற்கிறது மணி டேப். உங்கள் சுயவிவரங்கள், சம்பளம், பணி செய்யும் இடம் போன்ற அனைத்தையும் நான்கு பக்க ஃபார்மாக நீட்டிக் கடுப்பேற்றாமல், கேர்ள் ஃப்ரெண்ட் உடன் சாட்டிங் செய்வதுபோல பேசியே வாங்கிவிடுகிறது ஆப். மொபைலில் நாம் எடுக்கும் செல்ஃபிதான் விண்ணப்பத்தில் ஓட்டும் போட்டோ என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி ஆப் கேட்கும் அனைத்துத் தகவல்களையும் தந்துவிட்டால், வங்கிகளுக்கு நம் விவரங்களை அனுப்பி, “யார் இவருக்குக் கடன் தரத் தயாராக இருக்கிறீர்கள்?” எனக் கேட்கும் மணி டேப்.

நம்முடைய அனைத்து விவரங்களையும் பார்த்துவிட்டு, ‘இவருக்கு இவ்வளவு தரலாம்’ என முடிவு செய்கின்றன வங்கிகள். பின்னர் நம் அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்றவற்றை எல்லாம் மின்னணு ஆவணங்களாகப் பதிவேற்றினால், உடனே உங்கள் ஆப்பில் அந்தத் தொகை சேர்ந்துவிடும். இந்தத் தொகைக்கு எந்தவித வட்டியும் கிடையாது. மாறாக இந்தத் தொகையில் எத்தனை ரூபாயை நீங்கள் செலவு செய்கிறீர்களோ, அதற்கு மட்டும் வட்டி உண்டு. இந்தக் கணக்கில் சேரும் கடனை வங்கிக்கணக்குக்கு மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூன்று மாதம் முதல் மூன்று வருடங்கள் வரை திருப்பிச்செலுத்துவதற்கான அவகாசம். தற்போதைக்கு நாட்டின் மிக முக்கிய நகரங்களில் மட்டுமே இந்தச் சேவை கிடைக்கிறது. மற்ற நகரங்களுக்கும் விரைவில் வரும் என்கிறது  இந்நிறுவனம்.

பே சென்ஸ் (Pay sense)

போன் இருந்தா லோன்!மற்ற ஆப்ஸ்போல முழு விவரங்களையும் வாங்கிவிட்டு, ‘இவ்வளவுதான் உனக்கு லோன்’ எனக் காட்டாமல் துவக்கத்திலேயே கடன்தொகைப் பற்றிக் கூறிவிடுகிறது பே சென்ஸ். அதற்குப்பிறகுதான் மற்ற விவரங்கள் எல்லாம். 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை இதில் பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய கடன் தொகையைக் கணக்கிட்டுச் சொன்னவுடனேயே, அதில் நமக்கு எவ்வளவு வேண்டும், எவ்வளவு EMI, எத்தனை தவணை என அனைத்து விஷயங்களையும் முடிவு செய்துகொள்ளலாம். எல்லாம் சரி  என்றால், சில நாள்களுக்குள் பணம் கிடைத்துவிடும். அதனை உடனே  வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

கடன் பெறுவதற்கு ஆப் மட்டுமின்றி, வெப் வெர்ஷனும் இருக்கிறது. மற்ற சேவைகளில் இருக்கும் அதே பிரச்னைதான் இதிலும். மிகக் குறைவான நகரங்களில் மட்டுமே இந்தச் சேவை. மேலும் சிபில் ஸ்கோர் அடிப்படையில்தான் கடன் வழங்கப்படுகிறது என்பதால், நிறைய பேருக்கு இது நெருடலாக இருக்கலாம். இப்போதைக்கு மாதச்சம்பளம் பெறுபவர்களுக்குதான் கடன் எனவும் பாலிஸி வைத்திருக்கிறது பே சென்ஸ்.

கேஷ் e (Cashe)

போன் இருந்தா லோன்!ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாக நமக்கு லைக் கிடைக்கும் எனச் சொன்னால் நம்புவோம். கடன் கிடைக்கும் என்றால் நம்புவோமா? ஆனால், கேஷ் e ஆப்பின் ஃபார்முலாவே இதுதான். மற்ற நிதிநிறுவனங்கள்போல கிரெடிட் ஸ்கோர்களை எல்லாம் பார்க்காமல், சோஷியல் லோன் குவோஷியன்ட் (SLQ) என்னும் ஃபார்முலாவைப் பின்பற்றுகிறது இந்த ஆப். எனவே, உங்களின் கிரெடிட் ஹிஸ்டரியைப் பார்க்காமல், SLQ அடிப்படையில்தான் கடன் வழங்கப்படும். இதன்படி சமூகவலைதளங்களில் நமக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை, நம்முடைய செயல்பாடுகள், தொடர்புகள் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாம். “ஒருவர் கிரெடிட் ஸ்கோர் குறைவாக வைத்திருந்தாலே, அவர் கடன் வாங்கத் தகுதியற்றவர்கள் என்பதெல்லாம் பழைய கதை” என்பதுதான் இந்த ஆப்பின் பன்ச். மாதச்சம்பளம் வாங்கும் இளைஞர்கள்தான் இதன் டார்கெட்.

இன்ஸ்டால் செய்துவிட்டு, ஆப்-ஐத் திறந்ததும் நம்முடைய ஃபேஸ்புக், கூகுள், லிங்க்ட்இன் கணக்குகளில் ஏதாவது ஒன்றைக் கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும். பின்னர் அடுத்தடுத்து நம்முடைய அடையாளச் சான்றுகளையும் இணைத்துவிட்டால், அதன் அடிப்படையில் கடன் வழங்குகிறது இந்த ஆப்.  5,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். நமக்கு எவ்வளவு என்பதை நம்முடைய SLQ-தான் முடிவு செய்யும். இப்படிப் பெறும் கடனை நமது வசதிக்கேற்ப 15, 30, 90 நாள்கள் எனத் தேர்வு செய்து திருப்பிச்செலுத்தலாம். ஒவ்வொரு வகை கடனுக்கும் ஒவ்வொரு மாதிரியான வட்டி வசூலிக்கப்படும். விவரங்களைப் பதிவு செய்யும் முறை கொஞ்சம் சிக்கலாக இருப்பதும், குறைவான EMI-களில் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்பதும் இதன் மைனஸ்.

ஷுப் லோன்ஸ் (Shubh Loans)

போன் இருந்தா லோன்!


தமிழ் மொழி வசதியும் கொண்ட லோன் அப்ளிகேஷன் ஷூப் லோன்ஸ். மற்ற ஆப்களைப்போலவே இதிலும் முன்னரே சுயவிவரங்கள், வங்கி விவரங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளைக் கொடுத்துவிட வேண்டும். இதனை வைத்து உடனே ஒரு கிரெடிட் ரிப்போர்ட் தயார் செய்து, நமக்கு லோன் தரலாமா வேண்டாமா என முடிவு செய்கிறது ஷூப்லோன்ஸ்.

ரூ. 25,000 முதல் இரண்டு லட்சம் வரைக்கும் கடன் வழங்கப்படும். இரண்டு வருட காலத்திற்குள் கடனைத் திருப்பி செலுத்தலாம். கடன் வாங்கும் நடைமுறை எளிதாக இருந்தாலும், ஆப்பில் இருக்கும் நிறைய டெக்னிக்கல் பிரச்னைகள் இதன் மைனஸ். அதேபோல சென்னை உள்பட மிகக் குறைவான நகரங்களில் மட்டும்தான் தற்போது இந்த சேவை கிடைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism