Published:Updated:

இது சென்ட்ரல் சபா!

இது சென்ட்ரல் சபா!
பிரீமியம் ஸ்டோரி
இது சென்ட்ரல் சபா!

வீயெஸ்வி - படங்கள்: பா.காளிமுத்து

இது சென்ட்ரல் சபா!

வீயெஸ்வி - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
இது சென்ட்ரல் சபா!
பிரீமியம் ஸ்டோரி
இது சென்ட்ரல் சபா!
இது சென்ட்ரல் சபா!

‘பயணிகளின் பணிவான கவனத்துக்கு...

சென்னை மைலாப்பூரிலிருந்து அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடையும் ராதிகா வைரவேலவனின் சாதூர் லட்சண அகாடமியின் நடன மாணவிகள் தங்கள் நிகழ்ச்சியை பிளாட்ஃபார்ம் எண் 9 மற்றும் 10-ன் நுழைவாயிலில் 25 நிமிடங்கள் தாமதாகத் துவங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்...’

இந்த அறிவிப்பு கற்பனை. ஆனால், நிகழ்வு நிஜம்!

சுதந்திர தினத்தன்று மாலை. நான்கு பக்கமும் கயிறு கட்டி, பாக்ஸிங் ரிங் மாதிரி அமைக்கப்பட்டிருக்க,  நடுவில் நடன காஸ்ட்யூமில் ஏழு பெண்கள்.

கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் சுற்றிலும் சூழ்ந்து நிற்க, ஆறு மணிக்கு என்று அறிவிக்கப்பட்டு, மிகச் சரியாக 6.25 மணிக்கு அலாரிப்புடன் ஆரம்பமானது நிகழ்ச்சி. சபாக்கள் மாதிரியே ஃபோகஸ் லைட் இரண்டு பக்கங்களிலும், பதிவு செய்யப்பட்ட பாடல்களை ஒலிக்கவிடக் கருவிகள்.

இது சென்ட்ரல் சபா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதுகில் பை மாட்டிக்கொண்டு, கையில் வாட்டர் பாட்டிலுடன் ரயில் பிடிக்கும் அவசரத்தில் திரும்பிப் பார்த்துக்கொண்டே சிலர் நடக்க, அவகாசம் இருப்பவர்கள் சற்று நின்று இரண்டு நடனங்கள் பார்த்துவிட்டுப் போனார்கள். திருவிழா மாதிரி குழந்தையைத் தோள்களில் உட்காரவைத்து நிற்கும் சிலர், ரயிலிலிருந்து இறங்கி வருபவர்கள், ‘இங்கே என்ன கூட்டம்?’ என்ற கேள்வியை முகத்தில் தேக்கி நாட்டியத்தைப் பார்க்க, நிகழ்ச்சி நடந்த ஒருமணி நேரமும் நின்று பார்த்து மகிழ்ந்தவர்கள் பலர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களும் பார்வை யாளர்கள் பகுதியில்!

அலாரிப்புக்கு அடுத்ததாக, மிருதங்க வித்வான் காரைக்குடி மணி, கணக்கு வழக்குகளுடன் அமைத்துக்கொடுத்த லயக் கவிதையை அபிநயித்தார்கள். தொடர்ந்து `மாடு மேய்க்கும் கண்ணா...’  ‘நீ உரைப்பாய் அனுமானே...’ என்று அடுத்த அயிட்டத்தில் வாயுபுத்திரனை அசோக வனம் அனுப்பினார்கள் எழுவரும். இறுதியில், ஆனந்த பைரவியில் ஆரம்பித்து ராகமாலிகையில் தொடரும்... டி.எம்.கிருஷ்ணா பிரபலப்படுத்தி யிருக்கும், ‘பொறம்போக்கு...’ பாடல். ‘ஜங்ஷன்’ வந்துவிட்ட திருப்தியில் அனைவரும் ஓலா பிடிக்கக் கலைந்தார்கள்.

சபா மேடைகளில் மட்டுமே வட்டமடித்துக் கொண்டிருக்கும் கிளாசிகல் கலையை வெளியே பொது ஜனங்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்து வருபவர் டி.எம்.கிருஷ்ணா. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும்விதமாகக் கடந்த சில வருடங்களாக ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ‘கலை விழா’ நடத்தி வருகிறார்.

இது சென்ட்ரல் சபா!

கிருஷ்ண லீலைகள் தொடர்ந்தன!

சென்ற வருடம் பல்லவன் பேருந்தில் (29C) குழுவினருடன் பாட்டுக் கச்சேரி செய்தபடியே பயணித்தார். இந்த டிரிப்பின்போது, குடிபோதையில் ஒருவர் தன் பாடலுக்கு டான்ஸ் ஆடியபடி வந்ததை அண்மையில் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார் கிருஷ்ணா.

“அவர் தன் வாழ்க்கையில் மியூஸிக் அகாடமிக்குள் நுழைந்திருக்கவே மாட்டார். கர்நாடகச் சங்கீதம் தன் வாழ்க்கையோடும் சம்பந்தப்படும் என்றும் அவர் நினைத்திருக்கவும் மாட்டார். ஆனால், அவரே அன்று பாரதியாரின் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடினார்...” என்று சொல்லியிருக்கிறார் கிருஷ்ணா.

முதலில் பஸ். இப்போது ரயில்வே ஸ்டேஷன். பாரம்பரியக் கலை வடிவங்கள் பல்வேறு இடங்களுக்குள் புகுந்து புறப்பட்டுப் பாமரர் களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. அடுத்து, கோயம்பேடு பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், தீபாவளிச் சமயத்தில் ஜவுளிக் கடைகள் என்று நிறைய இடங்களுக்கு அவர் போகக்கூடும்!

இசைத் துறையில் நிறைய பேர் இந்த முயற்சிகளை ‘வேண்டாத வேலை...’ என்று திரை மறைவில் வசைபாடிக்கொண்டிருப்பதும் நம் காதில் விழுகிறது. ஆனால், முற்போக்குவாதி கிருஷ்ணா அவற்றைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism