Published:Updated:

இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

ஆர்.குமரேசன்

இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

ஆர்.குமரேசன்

Published:Updated:
இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!
இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

து 2008-ம் ஆண்டின் ஏப்ரல் மாத கடைசி நாள். ‘பசுமை விகடன்’ இதழ் சார்பாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொழிஞ்சி பண்ணையில் நடந்து கொண்டிருந்த  ‘இனியெல்லாம் இயற்கையே’ எனும் விவசாயப் பயிற்சியில், தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த விவசாயிகள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு மத்தியில் கையை வீசி வீசி ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார்.

“காவிரியில தண்ணி வரலயேனு தவிக்கிறோம். அப்படியே திறந்துவிட்டாலும், அறுவடை வரைக்கும் தண்ணி கிடைக்குமானு சந்தேகமா இருக்கு. இந்த மாதிரியான நேரங்கள்ல விதைக்கிறதுக்காகவே அறுபதாம் குறுவைனு ஒரு நெல் ரகத்தை வெச்சுருந்தோம். இப்ப கிட்டத் தட்ட அழிஞ்சே போயிடுச்சு. அந்த ரகம் இருந்தா, அறுபதே நாள்ல அறுவடையை முடிச்சுடலாம்.தண்ணியை நிப்பாட்டிடுவாங்களோனு கவலைப்படத் தேவையில்லை. அதைத்தான் பல வருஷமா தேடிட்டு இருக்கேன்” என்றார். அறுபதாம் குறுவையைப்பற்றி அவர் சொன்ன செய்தி, விவசாயிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனடியாக, அறுபதாம் குறுவையைத் தேடும் பணியில் இறங்கியது பசுமை விகடன் குழு. பல கட்டத் தேடலுக்குப் பிறகு, நாகர்கோவில் அருகேயுள்ள திட்டுவிளை கிராமத்தில் முத்தையா பிள்ளை என்ற ஆசிரியரிடம் அறுபதாம் குறுவை விதைநெல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைச் சந்தித்து, இரண்டு கிலோ அறுபதாம் குறுவை விதைநெல்லை விலைக்குக் கேட்டோம். ‘விதை நெல்லுக்கு எதுக்குய்யா காசு?’ எனக்கேட்ட அந்த வெள்ளந்தி விவசாயி, இலவசமாகவே கொடுத்தனுப் பினார். நம்மாழ்வார் கையில், இரண்டு கிலோ விதைநெல் ஒப்படைக்கப்பட்டது. ‘அறுபதாம் குறுவை அம்புட்டுக்கிச்சா’ என ஆனந்தக் கூத்தாடியவர், அந்த விதைகளை சில விவசாயிகளிடம் கொடுத்து, ‘இதை விதைச்சு, எனக்கு விதை நெல் கொடுங்கய்யா’ என அன்புக் கட்டளையிட்டார். அவர்களும் அதன்படியே செய்தனர். அந்த விதைகளைக் கைமாற்றி, கைமாற்றிப் பரப்பிக்கொண்டே இருந்தார் நம்மாழ்வார். கடந்த பருவத்தில், தமிழ்நாட்டையும் தாண்டி ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுபதாம் குறுவைப் பயிரிடப்பட்டிருந்தது என்கிறது புள்ளி விவரம்.

இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

இதேபோல, நம் மண்ணுக்குச் சொந்தமான பல பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறது பசுமை விகடன். இதையே முன்மாதிரியாகக்கொண்டு, சில பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார் சத்தீஸ்கர் மாநிலம், தாம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரசன்னா. அதோடு நில்லாமல், வட மாநிலங்களில் முதன்முறையாக உழவர் சந்தை அமைத்தது, 100 கிராமங்களை இயற்கை விவசாயக் கிராமங்களாக மாற்றி வருவது...போன்ற சாதனைகளைச் சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகிறார் கலெக்டர் பிரசன்னா.

செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை திருச்சி, மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவிருக்கும் பசுமை விகடனின் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில்  வித விதமான நாட்டு விதைகளின் அருமை, பெருமைகளை அறிந்துகொள்ளலாம். துவக்க நாள் கருத்தரங்கின்போது, தனது சாதனைகளையும், அதை நிகழ்த்திக்காட்டிய விதம் பற்றியும், தமிழக விவசாயிகளிடம் பகிர்ந்துகொள்ள வருகை தருகிறார் பிரசன்னா.

இயற்கையைப் போற்றும் வேளாண் கண்காட்சி!

கலைத்துறையிலிருந்து கழனிக்கு வரும் நட்சத்திரங்களில் நம்பிக்கையோடு ஒளிர்ந்துகொண்டிருக்கும் நடிகர் கிஷோர், முன்னோடி இயற்கை விவசாயியாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய எட்டு ஏக்கர் நிலத்தில் ராகி, தினை, சோளம் என்று சிறுதானியங்களும், மா, எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா போன்ற பழமரங்களையும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து வருகிறார். இதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இதுபற்றிய அனுபவப் பாடங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார். மேலும், விளை பொருள்களை மதிப்புக்கூட்டும் மந்திரங்களைக் கற்றுத்தர இருக்கிறார் மைசூரில் உள்ள சி.எஃப்.டி.ஆர்.ஐ நிறுவனத்தின் இயக்குநர் ராமராஜசேகரன். நபார்டு வங்கி மூலமாக விவசாயிகள் வாழ்வில் விடியலைக் கொண்டுவரும் வாய்ப்புகள் பற்றிப் பகிர்ந்துகொள்ளப் போகிறார், நபார்டு வங்கியின் முதன்மைப் பொதுமேலாளர் நாகூர் அலி ஜின்னா.

தூர்ந்துபோன ஆழ்துளைக் கிணறுகளை மீட்டெடுக்கும் நுட்பங்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் பூச்சிகளைச் சமாளிக்கும் முறைகள், இயற்கை விவசாயச் சாகுபடி முறைகள், சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் கொடுக்கும் பெரிய லாபங்கள், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முன்னோடி விவசாயிகளும், வேளாண் வல்லுநர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். விதைகள், இயற்கை இடுபொருள்கள், கருவிகள், நாற்றுகள், இயற்கை விவசாய விளைபொருள்கள், மரச்செக்கு எண்ணெய் எனப் பயனுள்ள பல அரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இடம்பெற உள்ளன. நான்கு நாள்களும் இயற்கை வேளாண் திருவிழாவாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நமது பாரம்பர்யத்தை, இயற்கை வழி விவசாயத்தை,வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள திருச்சிக்குத் திரண்டு வாருங்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism