Published:Updated:

இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

மணி - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

மணி - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

க்களெல்லாம் கன்ஃபெஷன் ரூமுக்குப்போய் ``முதல்வரே... துணை முதல்வரே... தயவுசெஞ்சு எங்களை எல்லாம் எலிமினேட் பண்ணிடுங்க... இல்லைனா, ஆந்திராவுக்கு ஆட்டோ புடிச்சிடுவோம்’’ எனக் கதறுகிறார்கள். ரிசார்ட்டுகளில் எம்.எல்.ஏ-க்கள் தினகரன் தலைமையில் சுட்டீஸ் குட்டீஸாக மாறி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வுக்குப் போராடும்போதே `எக்ஸ்க்யூஸ்மீ பாஸ்’ என ஒருவிரல்காட்டி ஓடிப்போய் `விவேகம்’ பார்த்துவிட்டு ஆன்லைனில் ``முதல் பாதி ஓகே... இரண்டாம் பாதி முடியலை... ஆனா `புலி’க்கு இது பரவால்லய்ய்ய்’ என விமர்சனம் போட்டு டேபிள் மேட் தம்பி மாதிரி நூறுவிதமான வேலைகளை இரண்டே கைகளில் செய்துகொண்டிருக்கிறான் தமிழ் இளைஞன். ஜெயா டி.வி-யும், கலைஞர் டி.வி-யும் சேர்ந்து ஒரு நேரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகச் செய்திகள் வாசிக்கின்றன. என்னங்கடா நடக்குது தமிழ்நாட்ல என ஆல் இந்தியாவே அலறுகிறது...

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு சாமி வந்த மாமிபோல தலைவிரி கோலமாகத்தான் திரிகிறது. அந்த வினோதங்களின் வழி ஒரு சூப்பர் ஃபாஸ்ட் பயணம்.

இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

லெக்தாதா

மனிதர்களில் லெக்தாதா இருக்கலாம்... ஆனால், ஒரு தொகுதியே லெக்தாதாவாக இருந்தால் எப்படி இருக்கும்? அந்த மர்மதேசம் சென்னையில் இருக்கிறது. அங்கே யார் போட்டியிட்டு வென்றாலும் ஆறு மாசம்தான்.  இடைத்தேர்தல் வந்துவிடும். நம்ம தொகுதிகளில் கரண்ட் போனால் என்னாகும். விளக்கைத் தேடுவோம்; தீப்பெட்டியைத் தேடுவோம். ஆனால், இந்தத் தொகுதியில் கரன்ட் போனால், ‘‘ஏன்க்கா காசு குடுக்கறவய்ங்க இன்னைக்கு வருவாய்ங்கன்னாய்ங்க... ஆளையே காணலையே’ என வெத்தலைப் பாக்கு ஆயாக்கள்கூட அமெளன்ட்டுக்கு வெயிட்டீஸில் இருப்பார்கள். தேர்தலை நம் அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள். வாக்காளர் அட்டையை ஏ.டி.எம்-மாகப் பயன்படுத்தி புதுமையைப் புகுத்திய ஒரே மக்கள் ஆர்.கே.நகர் மக்கள்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!

இருக்கு ஆனா... இல்ல...

கூடை வெச்சிருக்கறங்களுக் கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாது மோடில் இருக்கிறது மத்திய அரசு. உலகத்திலேயே முதன்முறையாகத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் சட்டையைக் கிழித்து பேன்ட்டைக் கிழித்து முடியெல்லாம் கலைத்துவிட்டு, `மூன்றாம்பிறை’ க்ளைமாக்ஸ் கமல்போல ஆக்கித்  தேர்வு எழுத வெச்சதெல்லாம் கின்னஸ்ஸில் வருமா? சி.பி.எஸ்.சி படிச்ச பசங்கள்லாம் ஒண்ணுகூடி, நீட் தேர்வுக்கு ஆதரவா ஒரு பேட்டி கொடுத்தப்பதான் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஸ்தம்பிச்சு நின்னுச்சு. எஸ்.ஜே.சூர்யாகூட டாக்டரிடம் மட்டும்தான் ஒரே ஒருமுறை சொன்னாரு. நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் கூடிக்கூடி டாக்டராகப்போற பல ஆயிரம் பேர்கிட்டயும் வாராவாரம் மைக் புடிச்சு ‘‘இருக்கு... ஆனா, இல்ல...’’ என திரும்பத் திரும்பச் சொன்னதும்... அதை நாம நம்புனதும்... மெடிக்கல் மிராக்கிள்ல வருமா வருதா பாஸ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

  ஓவியா...லவ்வுய்யா

தமிழ்நாட்டில் மட்டும் பதினேழு பதினெட்டு போராட்டம் நடக்குது. வாழ்க்கையே சரியில்ல... போதாக்குறைக்கு மோடிவேற நைட் நேரம் மைக்கைப் பிடிச்சா, என்னத்தை அறிவிப்பு கொடுத்து எங்க க்யூவில் நிற்க விடுவாரோனு கெதக்குனு வருது. செத்தாலும் ஆதார் வேணுமாம். ஆனாலும், இந்த ரணகளத்துலேயும் ஒன்பது மணியானா, மறக்காம பிக்பாஸ் பார்த்துட்டு ஓரமா ‘ஓவியா ஆர்மி’யத் தொடங்கி ஓட்டுக்கேட்டு அலையறதெல்லாம் உலகத்துலேயே தமிழ்நாட்டுல மட்டும்தாண்ணே நடக்கும். ஓவியா போனா என்ன... பிந்துவுக்கு ஆர்மி ஆரம்பிப்போம். பிந்துவும் போனா சுஜா இருக்கான்னு அடுத்தடுத்து கான்ஃபிடென்டா போய்ட்டே இருக்கான் பாரு. அதான் சார் கெத்து! 

மூடு... ஓடு!

ஊரே ஒண்ணுகூடி ஒரு டாஸ்மாக் விடாம அடிச்சு நொறுக்க, ஆகா எழுந்தது பார் யுகப் புரட்சி என மார்க்ஸின் ஆவியே புரண்டு படுத்திருக்கும். ஆனால், எதற்குமே அடங்காத குடிமகன்கள் படப்பிடிப்புக்காக போட்ட டாஸ்மாக் செட்டில்கூட அரைநாள் முழுக்க க்யூவில் நின்று `உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...’ என உச்சிவெயில்ல ஸ்டெடியா நின்னானே... அதுதான் மறத்தமிழனின் மங்காத அடையாளம்!

நள்ளிரவு முதல் பெட்ரோல்

பெட்ரோல் விலை ஏறுதான்னும் தெரியாது. இறங்குதான்னும் தெரியாது. ஆனா, ஏறுற மாதிரியே இருக்கும். இறங்கின மாதிரியே இருக்கும். டெக்னிக்கா விலையேத்தி தோனி மாதிரி கூலா விளையாடுது மத்திய அரசு.

`ஜி.எஸ்.டி. போட்டு எல்லாத்தையும் விலையேத்தினீங்களே, பெட்ரோலுக்கு ஜி.எஸ்.டி. போட்டா விலை குறையும்தானே... அதை ஏன் ப்ரோ பண்ண மாட்டேங்கிறீங்க’ என்று ஒரு தமிழ் ப்ரோ இன்னொரு தமிழ் ப்ரோவுக்குக் கடைசிவரைக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிப் புரட்சி செய்துகொண்டே இருக்கிறான்.

இது தமிழ்நாடுடா மொமண்ட்ஸ்!

ஜியோ தன்தனாதன்...

`டெய்லி ஒன் ஜி.பி வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெர்ல மாப்ள’ என மென்டலாகித் திரிந்து கொண்டிரு க்கிறார்கள் மக்கள். சும்மா கொடுத்தா அப்படித்தானே இருக்கும். காசு கொடுத்து வாங்கிவிட்டால் எப்படியாவது அதைத் தீர்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் திரிவதெல்லாம் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் மொமென்ட்ஸ் ஆஃப் தமிழ்நாடு. `இரு நிறைய டேட்டா இருக்கு. அப்படியே படத்தை ஃபேஸ்புக்ல லைவ் போட்டு வுடுவோம்... நாலு பேரு பார்த்து நம்மை ஆசீர்வதிக்கட்டும்’ என்று இப்போ தெல்லாம் இறங்கி இருக்கிறான் இணையத்தமிழன். விஷால் களத்தில் இறங்கி பத்து சுமோவைப் பறக்கவிடும்வரை அடங்க மாட்டார்கள் இந்த ஜியோ பாய்ஸ்!

இலைக்குள் மலரும் தாமரை

``அ.தி.மு.க-வா? அது சாப்பிடுற ஐட்டமா இல்ல குடிக்கிற ஐட்டமா... என்னாது அப்படி ஒரு கட்சியா... ஓ மை காட் வீர்சாவர்க்கர் சத்தியமா வீ டோன்ட் நோ’’ என அம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள் தமிழிசை அண்ட் கோ. ``ஆட்சி அவங்களோடதுதான். ஆனா, அவங்களை கன்ட்ரோல் பண்றவங்களைப் பற்றிப் பேச மாட்டேன்’’ மோடிலேயே திரிகிறது மோடி பக்தர்களின் தமிழ்நாட்டு பிராஞ்ச். அதிகமாகப் பேசினால், அப்புறம் மாட்டை வெட்டினேன்னு உள்ளே போட்டு நொங்கிடுவோம் என மிரட்ட வேறு செய்கிறார்கள். எங்க குருநாதன்மேல கைய வெச்சுப் பாருங்கடா என அப்பப்போ அமித்ஷாவை வேறு ஆளே இல்லாத கூட்டங்களுக்குக் கூட்டிவந்து அசிங்கப்படுத்து வதையும் விடுவதில்லை. ஸ்ப்ரே அடிச்சிருவேன் ஜாக்கிரதை மாதிரி, எச்.ராஜாவை விட்டு ட்வீட் போட்டிருவோம் ஜாக்கிரதை என எச்சரிக்கிற தமிழக பா.ஜ.க, மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக்கட்சியே அல்ல... அல்ல... அல்ல... அதையும் தாண்டி...
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism