Published:Updated:

தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!

தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!

தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!

தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!

தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!

Published:Updated:
தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!

னசாட்சியுள்ள தமிழர்கள் அத்தனை பேரையும் அதிரவைத்திருக்கிறது, அனிதாவின் மரணம். பெரும்பாலான தமிழக மாணவர்களைக் கொந்தளித்துப் போராடவும் வைத்துள்ளது.

அனிதாவின் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதைப்போல, மேற்கொண்டு விபரீதங்கள் நடந்து விடாமல் தடுக்கின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ‘எந்த ஒரு பிரச்னைக்கும் உயிரை மாய்த்துக்கொள்வது தீர்வல்ல. மன உறுதியுடன் கூடிய போராட்டமும், விடாமுயற்சியும்தான் ஒரே வழி’ என்பதை நம்முடைய மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியம்போட வேண்டும்!

தயார்படுத்துங்கள்... தரம் உயர்த்துங்கள்!



மருத்துவர் ஆகும் கனவில் இருந்தவள்தான் அனிதா. கனவோடு நின்றுவிடாமல், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று சாதிக்கவும் செய்தவள். ‘நீட் எனும் நுழைவுத் தேர்வு’ இடையில் குறுக்கிட்டது. ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை. அதற்குக் காரணம், மாநில ஆட்சியாளர்கள் கொடுத்த போலி வாக்குறுதிகள்தான்! ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு என்ற தமிழக அரசின் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்’ என்ற பசப்பு வார்த்தைகளைத் தொடர்ந்து பரப்பினார்கள் தமிழக அமைச்சர்கள். ‘தமிழகத்துக்கு ஓராண்டு காலம் அவகாசம் தருவோம்’ என்று மத்திய அமைச்சர்களும் பச்சைக்கொடி காட்டினார்கள். இதைத்தான் அப்பாவி அனிதாக்கள் நம்பினார்கள். ஆனால், மத்திய அரசின் ‘விலக்கும்’ வரவில்லை... மாநில அரசு அதை வலியுறுத்தி வாங்கியும் தரவில்லை. அனிதாக்களால் என்ன செய்ய முடியும்?

லட்சங்கள், கோடிகள் எனப் பணத்தைக் கொடுத்து மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் விலை பேசப்படுவதைத் தடுக்க, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு போட்ட திட்டம்தான் நீட். இதற்காக இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு என்பதை மட்டும் கணக்கில்கொண்ட மத்திய அரசு, தனித்துவமான பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும் என்றும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோய்விடாத வகையில் அமைய வேண்டும் என்றும் திட்டமிட மறந்துபோனது கொடுமையே. இதைப்பற்றிய அக்கறையோ, ஆர்வமோ காட்டாத மாநில அரசு நமக்கு வாய்த்தது கொடுமையிலும் கொடுமை.

அரசுகள் மட்டுமல்ல, உறுதியாகவும், உளமாரவும் போராடாத எதிர்க்கட்சிகளின் நயவஞ்சக அரசியலும் தான் அனிதாவின் மரணத்துக்குக் காரணம். ``இன்று கொடிபிடித்துக் கோஷமிட்டு வீராவேசம் காட்டும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் சிலர் மருத்துவக் கல்லூரிகளை நடத்திப் பணம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை மறுக்க முடியுமா?’’, ‘`வீதியில் இறங்கிப் போராடும் அரசியல் வாதிகளே... உங்களில் எத்தனை பேர், மாணவர்கள் பலரிடமும் பணம் வாங்கிக்கொண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உங்களின் ‘கோட்டா சீட்’டை வாங்கிக் கொடுத்தவர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?’’, ``நீட் தேர்வு அமல் ஆகிவிட்டால், இதுநாள்வரை மருத்துவக் கல்லூரி இடங்களை லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் விற்று கல்லா கட்டிய தனியார் கல்விக்கூடங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், நீட் எதிர்ப்பு அரசியலின் பின்னணியில் தனியார் கல்விக்கூடங்கள் நிற்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில்தான் என்ன?’’

உடனடியாக உறுதியான சில முடிவுகளை எடுத்தாக வேண்டும். தற்போது தமிழகத்தில் அமைக்கப் பட்டிருக்கும் கல்விச் சீரமைப்புக்குழு சுதந்திரமாகச் செயல்படுவதை அனுமதிக்க வேண்டும்; இந்தக் குழு, தமிழக மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் புரிந்துகொண்டு படிக்கும் வகையிலான பாடத் திட்டத்தை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த வேண்டும்; நுழைவுத் தேர்வு என்கிற பெயரில் மறுபடி மறுபடிக் கல்வி வியாபாரிகளின் கைகளில் சிக்காமல் தடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர், ஆசிரியர், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு இருக்கிறது. இதையெல்லாம் செய்துவிட்டாலே... நீட் என்ன, எந்த வகைத் தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர்கள் தங்களின் இருப்பை உறுதி செய்துவிடுவார்கள்.

அனிதா இறந்துவிட்டார்... போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டியது, மத்திய-மாநில அரசுகளின் கல்விக் கொள்கைகளைத்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism