Published:Updated:

``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’

``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’
பிரீமியம் ஸ்டோரி
``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’

ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: வீ.நாகமணி

``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’

ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’
பிரீமியம் ஸ்டோரி
``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’

ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனை பேரின் கண்களிலும் எதிர்காலம் குறித்த கனவுகள் மிதந்துகொண்டிருந்தன. ‘கனவுகளை விதைக்கும் களம் இது’ என்ற திருப்தி அந்த இடத்தை முழுமையாகச் சூழ்ந்திருந்தது. விகடன் பிரசுரமும் சென்னையில் உள்ள எஸ்.எஸ்.எஸ். ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய மத்திய குடிமைப்பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிதான் அது.

``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’

``இப்போதுள்ள மாணவிகள் அதீத ஆற்றல்கொண்டவர்கள். பட்டப்படிப்பு முடித்தவுடன் சரியான வாய்ப்பைப் பெறும் வகையில் அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டியது மிக அவசியம். இத்தகைய பணியை விகடனுடன் இணைந்து செய்வதில் பெருமை” என்றார் கல்லூரியின் முதல்வர் பூர்ணா.

போட்டித்தேர்வுக் குறித்துப் பல்வேறு புத்தகங்களை எழுதியவரும், போட்டித்தேர்வுகளுக்கான முதன்மைப் பயிற்சியாளருமான மருத்துவர் சங்கர சரவணன், ``தமிழ்நாட்டில் 300 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  இருக்கிறார்கள். இவர்களில் 200 பேர், நேரடியாகத் தேர்வு எழுதியவர்கள். மீதம் உள்ளவர்கள் குரூப் ஒன் தேர்வு எழுதி, பத்துப் பதினைந்து வருடங்களாகப் பணியாற்றி, ஐ.ஏ.எஸ். ஆனவர்கள்.  செயல்பாட்டு அதிகார மையங்கள், இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று, அரசியல் அதிகார மையம், மற்றொன்று நிரந்தர அதிகார மையம். அரசியல் அதிகார மையம் என்பது, ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் இருக்கும். நிரந்தர அதிகார மையமாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இவர்கள்தான் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள். பட்டப்படிப்பை முடித்தவர்கள், குடிமைப்பணித் தேர்வை எழுதி, நிரந்தர அதிகார மையங்களாகவும் மாறலாம். போட்டித்தேர்வுக்குத் தயாராவோர் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி, போட்டித்தேர்வுக்கான கேள்விகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பதையும் விரிவாக விவரித்தார். 

``ஒவ்வோர் ஆண்டும் ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவியிலிருந்து கிராம நிர்வாக அலுவலர் பணி வரை பல்வேறு பணி நிலைகளில் சுமார் ஒன்றரை  லட்சம் வாய்ப்புகள் இளைஞர்களுக்காகக் காத்திருக்கின்றன. இளைஞர்கள் இலக்கு வைத்துச் செயல்படத் தொடங்கினால், 24 வகையான உயர் குடிமைப்பணிகளில் சேரலாம். கடின உழைப்பும், தொடர்ந்து படிக்கக்கூடிய தன்மையும், பொறுமையும் இருந்தாலே நீங்கள் வெற்றியாளர்தான்” என்று கல்லூரி மாணவிகளை உற்சாகப்படுத்தினார்,  தற்போது செங்கல்பட்டு சார் ஆட்சியராகப் பணியாற்றிவரும் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``போட்டித்தேர்வுகளுக்கு நாங்க ரெடி!’’

நிகழ்ச்சியின் முடிவில், மாணவிகள் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அதற்குப் பதிலளித்தார் ஜெயசீலன்.

``டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு எழுத, தமிழ்த் தெரிந்திருக்க வேண்டுமா?’’

``தேவையில்லை. தேர்வுக் கேள்விகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். தேர்வில் தேர்ச்சிபெற்றபிறகு, இரண்டு ஆண்டுகளில் துறைத்தேர்வு எழுதும்போது தமிழ்த் தேர்வையும் எழுதித் தேர்ச்சிபெற வேண்டும்.” 

``மாவட்ட ஆட்சியராக இருப்பவர்களுக்கு, அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்பது தெரியும். அவர்கள் பணியின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?’’

``மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் 56 துறைகள் இருக்கின்றன. மாவட்ட அளவில் 5,000 முதல் 10,000 பேர் வரை பணியாற்றுகிறார்கள். இங்கு எழும் பிரச்னைகளுக்கு முழுப் பொறுப்பு, மாவட்ட ஆட்சித் தலைவர்தான். கொஞ்சம் சவாலான வேலை என்றாலும், விறுப்பு வெறுப்பு இல்லாமல், சார்புத்தன்மையற்று முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்று உற்சாகப்படுத்தினார்.

கல்லூரி மாணவிகளுக்குப் பரிசுப் புத்தகங்களை வழங்கி வாழ்த்தியது விகடன் பிரசுரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism