Published:Updated:

பிசினஸ் ஸ்டார்ஸ்!

பிசினஸ் ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஸ்டார்ஸ்!

மு.பிரதீப் கிருஷ்ணா

பிசினஸ் ஸ்டார்ஸ்!

மு.பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
பிசினஸ் ஸ்டார்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஸ்டார்ஸ்!

`இவங்க வாழ்க்கை முழுக்க விளையாடிட்டேதான் இருப்பாங்களா?’ - விளையாட்டு வீரர்களைப் பார்க்கும்போது எல்லோருக்குமே இப்படி ஒரு கேள்வி நிச்சயம் எழும். விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், அதைத் தாண்டி என்ன செய்கிறார்கள்? அவர்களது எதிர்கால வருமானம் என்ன? இன்றைய `நம்பர் 1’ ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களைப் பற்றிய பிசினஸ் அப்டேட்ஸ் இங்கே...

பிசினஸ் ஸ்டார்ஸ்!

சானியா மிர்சா (டென்னிஸ்)

ஐதராபாத்தில் சொந்தமாக டென்னிஸ் அகாடமி நடத்திவரும் சானியா மிர்சா, இரண்டாவதாக இன்னொரு அகாடமியைத் தொடங்கியுள்ளார்.  `கிராஸ் ரூட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அகாடமியில்  மூன்று முதல் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பயிற்சி. `சின்ன வயதில் டென்னிஸ் பயிற்சிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டேன். என்னைப் போல மற்ற குழந்தைகள் சிரமப்படக்கூடாது. அதற்காகத்தான் இந்த அகாடமி’ என்று சானியா சொன்னாலும் இங்கே பயிற்சி எடுக்கப் பல ஆயிரங்கள் கட்டணம்.   ஐதராபாத்தில் `ரிஸ்ரெட்டோ’ என்னும் காபி ஷாப்பையும் நடத்திவருகிறார் சானியா.

பிசினஸ் ஸ்டார்ஸ்!

விராட் கோஹ்லி (கிரிக்கெட்)

சந்தேகமே இல்லை. விராட் கோஹ்லிதான் இந்தியாவின் டாப் ஸ்போர்ட்ஸ் ஸ்டார். செல்போன், கடிகாரம், பைக், பேட்டரி என இவர் மார்க்கெட் செய்யாததே இல்லை. பிராண்ட் அம்பாசிடராக மட்டுமன்றி, பல பிசினஸிலும் முதலீடு செய்துள்ளார் கோஹ்லி.  நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் சிஸெல்(Chisel) ஃபிட்னெஸ் சென்டரில் கோஹ்லிதான் முக்கிய முதலீட்டாளர். சாதாரண ஜிம் போன்று இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு பயிற்சிபெறும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது `சிஸெல்’.

இளைஞர்களின் ஃபேஷன் ஐகானாக இருக்கும் இவர், WROGN என்ற ஃபேஷன் பிராண்டிலும் முதலீடு செய்துள்ளார். ``கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது என்று யோசித்தேன். எனக்கு அதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. அதனால்தான் இந்த முதலீடுகள்’’ என்கிறார் கோஹ்லி.  கிரிக்கெட் வீரராக  இருந்தாலும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணியான FC கோவா அணியிலும் இணை உரிமையாளராக இருக்கிறார் கோஹ்லி.

பிசினஸ் ஸ்டார்ஸ்!

மித்தாலி ராஜ் (கிரிக்கெட்)

  விழாக்கள், நிகழ்ச்சிகள், போட்டோஷூட்ஸ் என மித்தாலி இப்போது ரொம்பவே பிஸி. விரைவில் நிறைய விளம்பரங்களிலும் பார்க்கலாம். மித்தாலியை விளம்பரங்களில் நடிக்கவைக்க ஏகப்பட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.  ஒரு விளம்பரத்தில் நடிக்க 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார் மித்தாலி. விளம்பரம் மட்டுமன்றி, மித்தாலியின் பயோபிக் திரைப்படம் எடுக்கவும் பல தரப்பிலிருந்து அப்ளிகேஷன் வருகிறதாம். விரைவில் `மித்தாலி, மித்தாலியாய் ஆனது எப்படி?’ என ஒரு படம் இந்தியா முழுக்க ரிலீஸாகும் என எதிர்பார்க்கலாம்.

பிசினஸ் ஸ்டார்ஸ்!

விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை)

பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங், இன்று புரொஃபஷனல் பாக்ஸர். முகமது அலி, மைக் டைசன் போல் இந்தியாவில் ஒருவர் இல்லை என்ற குறையைத் தீர்க்க, தொழில்முறை குத்துச்சண்டைக்குள் நுழைந்தார். ஒன்பது போட்டிகள் - ஒன்பதிலும் வெற்றி. அதில் ஏழு நாக்-அவுட்கள்.   `விஜு அண்ட் யு’ என்கிற பெயரில் ஃபேஷன் பிராண்டைத்  தொடங்கியிருக்கும் விஜேந்தருக்கு பாக்ஸிங் அகாடமி தொடங்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு. டெல்லி அருகே குர்கவுனில் பாக்ஸிங் அகாடமி தொடங்கவிருக்கிறார்.  ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர், பிசினஸ்மேன் என இரண்டு தொழில்கள் கைவசம் இருக்கு.

பிசினஸ் ஸ்டார்ஸ்!

பி.வி.சிந்து (பேட்மின்டன்)

கோலிக்கு அடுத்ததாக விளம்பர நிறுவனங்களின் `மோஸ்ட் வான்டட்’ ஸ்போர்ட்ஸ்பெர்சன் சிந்துதான். விளம்பரச் சந்தையில் தோனியை முந்தி நிற்கிறது சிந்துவின் மார்க்கெட். விளம்பரங்களில் பங்குபெற நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருந்த சிந்துவின் மதிப்பு, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு 1 - 1.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது! மிந்த்ரா, மூவ், ஏபிஸ், பேங்க் ஆஃப் பரோடா போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ள சிந்து, மத்திய அரசின் ஜி.எஸ்.டி -க்கும் விளம்பரத் தூதர். கொரிய ஓப்பன் சாம்பியனான சிந்துவுக்கு, ஜப்பானிலும் தங்கம் வெல்வதுதான் அடுத்த டார்கெட்.

பேட்மின்டனில் தன் கனவுகளை நிறைவேற்றிவரும் சிந்து, சமீபத்தில் இன்னொரு நீண்டநாள் கனவையும் நிறைவேற்றியுள்ளார். பி.காம் படித்திருந்த சிந்துவுக்கு, MBA முடிக்க வேண்டும் என்பது  ஆசை. ஹைதராபாத் நகரில் உள்ள St. Ann’s மகளிர் கல்லூரியில் சேர்ந்து, கடந்த ஏப்ரலில் MBA எழுதி முடித்துள்ளார், இந்தத் தங்க மங்கை!

பிசினஸ் ஸ்டார்ஸ்!

சாய்னா நேவால் (பேட்மின்டன்)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியிருக்கும் இவரைப் பற்றிய பயோபிக்கே, சாய்னாவின் மவுசு இன்னும் குறையவில்லை என்பதற்கு சாட்சி. ஷ்ரத்தா கபூர் நடித்துக்கொண்டிருக்கும் `சாய்னா’ திரைப்படத்துக்காக ஷ்ரத்தாவுக்கு சில தினங்களுக்கு முன்பு பேட்மின்டன் பயிற்சியும் கொடுத்துள்ளார் சாய்னா. பல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தவர், `Paree’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் சானிடரி நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.  இதுதவிர நொய்டாவில் சாய்னாவுக்குச் சொந்தமாக பேட்மின்டன் அகாடமியும் உள்ளது.