Published:Updated:

பாண்ட்... செந்தில் பாண்ட்!

க.நாகப்பன்படம் : பா.காயத்ரி அகல்யா

பாண்ட்... செந்தில் பாண்ட்!

க.நாகப்பன்படம் : பா.காயத்ரி அகல்யா

Published:Updated:
பாண்ட்... செந்தில் பாண்ட்!

''நான் கெட்டவ!''

 ன், ஜெயா சீரியல் பொண்ணு மகாலட்சுமி, இப்போ விஜய்  டி.வி-யின் 'அவள்’ சீரியலிலும் 'உள்ளேன் அம்மா’! தொடர்ந்து காம்பியரிங் மட்டுமே செய்துகொண்டு இருந்தது அலுத்துவிட்டதாம். ''அதனால்தான் நெகட்டிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். நிறையப் பேரு இப்போ மனசாரத் திட்டுறாங்க. ஆனா, அதுதானே ஹிட். அடுத்தடுத்து சீரியல்களில் நடிச்சுட்டே இருக்கிறதால், சின்னதா ஒரு ரெஸ்ட். என் ஹஸ்பண்ட் அனில் குமாரோடு கேரளா ஆலப்புழாவுக்கு ஒரு ட்ரிப் கிளம்பிட்டு இருக்கேன்'' - கலகலக்கிறார் மகாலட்சுமி!

பாண்ட்... செந்தில் பாண்ட்!

''பாண்ட்... செந்தில் பாண்ட்!''

வெள்ளித் திரையில் விழா எடுக்கும் அளவுக் குச் சிரிக்கவைத்த 'அவ்வா அவ்வா’ செந்தில் இப்போது சின்னத் திரையிலும். வசந்த் டி.வி-யில் 'ஜேம்ஸ்பாண்ட் 007’ என்னும் காமெடித் தொடரில் நடிக்க இருக்கிறார்.

''போலி டாக்டர், நரிக்குறவர், கிளி ஜோசியர், அம்மி கொத்துறவர், ரீ-சார்ஜ் பண்றவர், ஏலச் சீட்டு நடத்துறவர், சமையல்காரர், வேலைக்காரர், தவில் - மிருதங்கம் வித்வான்னு பல கெட்டப்களில் வருவேன். ஊர்ல, உலகத்துல நம்மளை எப்படிஎல்லாம் ஏமாத்துறாங்க... எவ்வளவு உஷாரா இருக்கணும்னு சொல்லப்போறேன். டி.வி.யோ, சினிமாவோ சாகிற வரைக்கும் நடிச்சுட்டே இருக்கணும். அவ்வளவுதான் என் ஆசை'' - தன்மையாகச் சிரிக்கிறார் செந்தில்!  

பாண்ட்... செந்தில் பாண்ட்!

''முரளிக்குப் பெருமை தேடித் தரணும்!''

''மார்க்கெட்டிங் வேலை, வாடிக்கையாளர் சேவை, பீ.பி.ஓ, சன் மியூஸிக் தொகுப்பாளர், 'மானாட மயிலாட’ ஷோ டான்ஸர், இசையருவித் தொகுப்பாளர்னு பல கட்டங்கள் தாண்டி, இப்போதான் என் கனவு தேசம் சினிமாவைத் தொட்டு இருக்கேன்!''- மலர்ச்சியோடு பேசுகிறார் முரளி. 'கண்டுபிடி கண்டுபிடி’, 'முயல்’ படங்களில் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் முரளியின் முகம் எல்லாம் சந்தோஷம். ''பிரகாஷ்ராஜ், ஜீவா, மாதவன் மூணு பேரும் வித்தியாசமான கேரக்டர்ல கலக்குகிறாங்க. 'முரளி’ங்கிற பேருக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் இருக்கு. இப்போ முரளி சார் இல்லை. அந்தப் பேருக்கு என்னால் முடிஞ்ச பெருமை சேர்க்கணும்''- நெகிழ்கிறார் முரளி!

பாண்ட்... செந்தில் பாண்ட்!

''எனக்குக் கல்யாணம்!''

விஜய் டி.வி. 'ஜோடி நம்பர் ஒன்’, ராஜ் டி.வி. 'பீச் கேர்ள்ஸ்’ என்று ரங்கீலா ரவுண்டு வரும் பாவனா, சமீபத்தில் ஹாங்காங் பறந்து காம்பியரிங் செய்து திரும்பியிருக்கிறார். ''ஹாங்காங் பக்கத்தில் கௌலூன்கிற இடத்தில் தங்கியிருந்தேன். ஹாங்காங்கையும் கௌலூனையும் இணைக்கிற பாலம்... அவ்ளோ அழகு. நான் தனியாளா ஃபாரின் போயிட்டு வந்தேன். ஆனா, அடுத்த தடவை என்னை நீங்க பார்க்கிறப்ப நான் மிஸஸ் நிகில் ரமேஷ் ஆகியிருப்பேன். ஆமாம்... எனக்குக் கல்யாணம்! நிகில் என் குடும்ப நண்பர்தான். என்னை மாதிரியே எம்.பி.ஏ., முடிச்சிருக்கார். சிங்கப்பூர்ல பிராண்ட் மேனேஜரா இருக்கார். கல்யாணத்துக்கு அப்புறமும் காம்பியரிங் பண்ணுவேன். தமிழ்நாட்டை மிஸ் பண்ண முடியுமா?''- பாச மழை பொழிகிறார் பாவனா!

பாண்ட்... செந்தில் பாண்ட்!

''வாம்மா மின்னலு!''

ன் டி.வி-யின் 'ஆஹா... என்ன ருசி!’ செஃப் ஜேக்கப் ரொம்பவே சோகத்தில் இருக்கிறார். ''என்ன சார்?'' என்று கேட்டால், பொலபொலவென்று கொட்டிவிட்டார். ''சமையல் வேலை பார்க்கிறவங்களுக்குப் பொண்ணு தரவே யோசிக்கிறாங்க. இந்த எண்ணத்தை மாத்தணும்னுதான் செட்டுக்குள்ள சமைக்காமல், மரத்தில் ஏறி சமைக்கிறது, கோயில்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் சமைக்கிறதுனு நிகழ்ச்சியை வித்தியாசமாப் பண்ண ஆரம்பிச்சேன். அப்படி சமீபத்தில் வீரப்பன் இருந்த காட்டுக்குப் போனேன். வீரப்பனுக்குப் பிடிச்ச கோழி சூப்வெச்சு வனத் துறை அதிகாரிகளுக்குக் கொடுத்தேன். இப்பதான் எங்களைப் போன்ற சமையல் கலைஞர்களையும் கொஞ்சம் மரியாதையாப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. என் சொந்த ஊர் மதுரை. பிசிக்ஸ் படிச்சிருந்தாலும் ஆர்வத்தில் கேட்டரிங் படிச்சு முடிச்சு கேட்டரிங் கல்லூரிப் பேராசிரியர், துறைத் தலைவர், முதல்வர்னு பொறுப்பான பதவிகளில் இருந்தேன். கொங்கு நாட்டு உணவு, நாஞ்சில் நாட்டு உணவு, சங்க கால உணவுனு நான் செய்த ஆராய்ச்சிகளுக்காக அப்துல் கலாம் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார். ஊருக்குச் சமைக்கிற நான், எனக்கே எனக்குன்னு சமைக்க ஒரு பொண்ணைத் தேடிட்டு இருக்கேன். சமைக்கத் தெரிய லைன்னாலும் நான் கத்துக் கொடுத்திடுவேன். ஏம்மா மின்னலு... எங்கேம்மா இருக்க?''- ஏக்கமாகக் கேட்கிறார் ஜேக்கப்!