Published:Updated:

புதிய மனிதா

புதிய மனிதா
பிரீமியம் ஸ்டோரி
புதிய மனிதா

டெக் தமிழன்

புதிய மனிதா

டெக் தமிழன்

Published:Updated:
புதிய மனிதா
பிரீமியம் ஸ்டோரி
புதிய மனிதா
புதிய மனிதா

ஒரு செய்தி

வந்தாச்சு பேட்டரி லாரி!

எலெக்ட்ரிக் வாகனங்களைத் தன் பெருமைமிகு படைப்புகளாக அடுக்கி வரும் டெஸ்லா நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்கு ரெடி. இதுவரை கார்களில் மட்டுமே அதிரடி காட்டிவந்த எலான் மஸ்க், தன் பார்வையை எலெக்ட்ரிக் டிரக்குகளின் பக்கம் திருப்பியிருக்கிறார்.

நவீனத் தொழில்நுட்பங்களுடன் அட்டகாசமான வடிவத்தில் வந்திருக்கும் டெஸ்லா செமி-ட்ரக் 36,285 கிலோ வரை எடையைச் சுமக்குமாம். அவ்வளவு எடையைத் தாங்கிக்கொண்டு வந்தாலும் 95 கிலோமீட்டர் வேகத்தை 5 விநாடிகளில் எட்டிவிடுமாம். ஆச்சர்யமூட்டும் விதமாக, வெறும் 30 நிமிட சார்ஜில் 640 கி.மீ. தூரம் வரை செல்லலாம் என்கிறார் மஸ்க்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய மனிதா

தானாக ட்ரக் இயங்கும் வகையில் ஆட்டோபைலட் வசதி, ஒரே பாதையில் விலகாமல் செல்லும் வகையில் சென்சார்கள், வாகனத்தின் முன்னர் வேறு ஏதும் தடை வந்தாலோ, வேறு வாகனங்கள் வந்தாலோ எச்சரிக்கும் சென்சார்கள் எனப் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு முறை பிரேக் அழுத்தும் போதும் உருவாகும் இயக்க ஆற்றலை (Kinetic Energy) மீளுருவாக்கம் செய்து வாகனத்தின் பேட்டரியில் சேமித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், வரும் 2019-ம் வருடம் முதல் இதன் தயாரிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

``இவ்ளோ சொன்னதுக்கு அப்புறமும் இன்னும் டீசல் லாரி ஓட்டிட்டிருந்தா, உங்களுக்குத்தான் காசு நஷ்டம்” என்கிறார் மஸ்க்.

ஒரு சவால்

னது ஒரு வருட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த உற்சாகத்தில் இருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். வருடா வருடம் ஒரு சவாலை எடுத்துக்கொண்டு அதைச் செயல்படுத்துவது மார்க்கின் வழக்கம். ஒரு வருடம் முழுவதும் புதுப் புத்தகங்களைத் தேடிப் படித்தல், ஒரு வருடம் முழுக்க ரன்னிங் போன்ற சவால்களை முடித்துவிட்டு, இந்த வருடம் வட அமெரிக்கா முழுக்கச் சுற்றுப்பயணம் என்று அறிவித்திருந்தார் மார்க். அந்தப் பயணத்தை வெற்றிகரமாக நவம்பர் மாதம் நிறைவு செய்துள்ளார்.

புதிய மனிதா

“ஒவ்வொரு வருடமும் தனிப்பட்ட முறையில் சவாலான விஷயங்களை எடுத்துச் செய்ய வேண்டும். இது நம்மை மெருகேற்றிக்கொள்ள நிச்சயம் உதவும். நான் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, அவர்கள் தங்களின் வாழ்வைக் குறித்து என்ன நினைக்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்கு என்னென்ன கனவுகள் வைத்திருக்கிறார்கள், எதற்காக அதிகம் வருத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் அறிந்துகொள்ள விரும்பினேன். இது ஒரு கூட்டிற்குள் சோம்பேறியாக இருந்த என்னை மிகவும் மாற்றியுள்ளது” என்பதுதான் மார்க்கின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்.

இது, தான் வருடா வருடம் எடுக்கும் சவால்களில் ஒன்றுதான் என்று மார்க்கே சத்தியம் செய்தாலும், அரசியலில் குதிப்பதற்கு முந்தைய வேலைகள்தாம் இவையெல்லாம் என மீண்டும் ஃபார்வர்டு மெசேஜ் அனுப்பத் தொடங்கிவிட்டனர் ஆன்லைன் தொண்டர்கள்!

ஒரு கேட்ஜெட்

புதிய மனிதா

“துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் போல” என வைரமுத்து சொன்னதைக் கேட்ட யாரோ ஒருவருக்கு ஐடியா ஃப்ளாஷ் ஆகியிருக்கிறது. அந்த மூங்கிலை வைத்தே ஸ்பீக்கர் ஒன்றைத் தயார் செய்துவிட்டார். இந்த மூங்கில் ஸ்பீக்கரின் ஹைலைட், இதற்கு மின்சாரம் தேவையில்லை என்பதே. நம் மொபைலை இந்த கேட்ஜெட்டின் மீது வைத்து, மியூஸிக் ஆப்-ஐ திறக்க வேண்டியதுதான். மொபைலிலிருந்து வரும் இசையைப் பெருக்கி, பன்மடங்காக்கி அறை முழுவதும் இது நிறையச்செய்கிறது. பார்க்கவும் அழகாய், கேட்கவும் இனிமையாய் இருக்கும் இந்த கேட்ஜெட், சுற்றுப்புறத்துக்கும் நன்மை செய்கிறது.  எடுத்துச் செல்வதும் எளிது; பயன்படுத்துவதும் எளிது. நாட்டுக்குள் ஒரு காட்டை உருவாக்கும் இந்த மூங்கில் ஸ்பீக்கருக்கு தாராளமாய் ஒரு “வெல்கம்” பாடல் பாடலாம்.

ஒரு பன்ச்

புதிய மனிதா

“இந்தியாவில் சமீப காலமாக, நிறைய நல்ல மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், இங்கே வரும்போதெல்லாம் எனக்கு அதிகம் வருத்தம் தரக்கூடிய ஒரு விஷயம், இந்நாட்டின் கல்விமுறை. அது இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும்.”

- பில் கேட்ஸ்

ஒரு செயலி

ரு மொபைல் அப்ளிகேஷன் ஹிட் அடிக்க என்ன என்ன தேவை என்பது யாருக்கும் தெரியாது; ஹிட் சினிமாவுக்கான ரகசியம் போலத்தான் இதுவும். கிரியேட்டிவான ஐடியாக்களைவிடப் பயனுள்ள விஷயங்கள் இருக்கும் ஆப் நல்ல ரீச் ஆகும். இரண்டும் சேர்ந்திருந்தால் கூடுதல் பலம். Lock me out அந்த வகையைச் சார்ந்தது. சிக்னலில் சில விநாடிகள் கூடுதலாக நிற்க நேர்ந்தாலே மொபைலை எடுத்துவிடும் ஆளா நீங்கள்? உங்கள் கையைக் கட்டிப்போடத்தான் இந்த ஆப்.

புதிய மனிதா

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு காரில் செல்ல அரை மணி நேரம் ஆகுமென்றால், இந்தச் செயலியில் 30 நிமிடம் டைம் செட் செய்துவிட வேண்டும். இந்த 30 நிமிடங்களுக்கு உங்கள் பாஸ்கோடு வேலை செய்யாது; அதனால் மொபைலை அன்லாக் செய்ய முடியாது. எமர்ஜென்ஸி கால் செய்யலாம், லாக் ஸ்க்ரீனில் இருக்கும் கேமரா போன்ற விஷயங்களைப் பயன்படுத்தலாம். மற்ற எதையும் செய்ய முடியாது. 30 நிமிடம் கழித்து பாஸ்கோடு வேலை செய்யும். நம் கவனம் மொபைலில் விழாமல் ஒரு காரியத்தைச் செய்துமுடிக்க இந்த ஆப் உதவுகிறது.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/2iv30ET