Published:Updated:

வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

Published:Updated:
வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

ட்சியாளர்களின் வீண் விளம்பரங்களுக்கு அப்பாவிகள் பலியாவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

வேண்டாம் இந்த விபரீத விளம்பரம்!

தங்களுக்கு வாக்களித்து அரியணையில் அமரவைத்த வாக்காளர்களின் தலை மீதே ஆட்சியாளர்கள் கை வைத்துப் பார்க்கிறார்கள். கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலையை மறித்துவைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி உயிரிழந்திருக்கிறார் கோவை இளைஞர். சாலை விதிகளைப் பொருட்படுத்தாமல் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால்,  விபத்து ஏற்படக் காரணமான அலங்கார வளைவுகளை வைத்தவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

விபத்துக்குக் காரணமான அலங்கார வளைவுக்கு மாநகராட்சி அனுமதியளிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் கோவை மாநகராட்சி ஆணையர். ஆனால், விபத்து நடந்தபிறகும் விபத்துக்குக் காரணமான அலங்காரவளைவு மட்டும் அகற்றப்பட்டதே தவிர, அனுமதியின்றி  நின்றுகொண்டிருந்த மற்றவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிர் போன பிறகும் மக்களின் உயிர்மேல் எவ்வளவு `பதைபதைப்புடன்’ இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம் இது.
 
`உயிரோடு இருப்பவர்களின் படங்களோடு பேனர்கள் வைக்கத் தடை’ என்று வழங்கப்பட்ட வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது, பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ‘`புகைப்படத்துடன் பேனர்கள், கட்- அவுட்கள் வைப்பதற்கான தடை உத்தரவு என்பது அரசியலமைப்பு கொடுத்திருக்கும் உரிமைக்கு முற்றிலும் எதிரானது’’ என்று வாதிட்டார். மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடவேண்டிய அரசு, பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கும் விஷயத்தில் மட்டும் ‘உரிமைக்குரல்’ கொடுக்கிறது என்றால், அதன் ‘அக்கறை’யை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அலங்கார வளைவுகளையும், பேனர்களையும், கட்-அவுட்டுகளையும் வைப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு; ஆனால், பொதுமக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா? விளம்பர அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதில் மட்டும் தர்க்கரீதியிலான வாதங்களை எடுத்துவைக்கும் அரசு வழக்கறிஞர்கள், மக்கள் பிரச்னைகளில் இவ்வளவு முனைப்புடன் வாதிடுவதில்லையே, ஏன்?

எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நடத்தப்படுகிறதோ அங்கெல்லாம் ஊரை வளைத்து அலங்கார வளைவுகளும் பேனர்களும் கட்-அவுட்களும் வைக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தங்களுக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்கு மக்கள்தான் கிடைத்தார்களா? மக்களின் உயிரைவிட, புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் இந்த அரசு எப்படி மக்களின் அரசாக இருக்க முடியும்? நீதிமன்ற உத்தரவை மதிக்காத இந்த அரசை மக்கள் மட்டும் எப்படி மதிப்பார்கள்?

 காளான்களைப்போல இரவோடு இரவாக முளைக்கும் பேனர்கள் ஊரின் அழகைக் குலைப்பதோடு வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. உயிர்பலி கேட்கின்றன. கட்-அவுட், பேனர் கலாசாரம் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்பதே மக்களைக் காக்கும் அரசின் முடிவாக இருக்க வேண்டும். மக்களைத் துச்சமாக நடத்தும் அரசை மக்கள் சக்தி காணாமல் போகச்செய்துவிடும். இதை உணராவிட்டால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!