Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ்

கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ்

Published:Updated:
கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

டிரெண்டிங் மேட்டர்களைக் கொஞ்சம் கலாய்த்து, கிழித்து, தைத்து, துவைத்து, காயப் போட்டு, அடுத்த

கலாய் இலக்கியம்!

நாள் அயர்ன் செய்து மடித்து எடுத்தால் கலாய் இலக்கியம் ரெடி!

ர்.கே.நகர்த் தேர்தலில் அ.தி.மு.க கடனை உடனை வாங்கி, காட்டுக்கத்து கத்தி ஓட்டு சேகரிக்கணும் எனும் அவசியமே கிடையாது. அது பல விஞ்ஞானிகளையும் தத்துவஞானிகளையும் கொண்டுள்ள கட்சி. அவர்களின் அறிவில் அரைத் தேக்கரண்டி எடுத்துத் தொகுதிமீது தெளித்துவிட்டாலும் வெற்றி உறுதி. அதுக்குப் பக்காவா சில உதாரணங்கள் சொல்றேன் பார்த்துக்கிடுங்க...

``கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’’ என அடித்துச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, ``ராமாயணத்தை எழுதியது ராதாகிருஷ்ணன்” என குபீர் குண்டைக் குறுக்கே உருட்டிவிடலாம். ஆர்.கே.நகர் எனும் ராதாகிருஷ்ணன் நகர்த் தொகுதி மக்கள் இதைக் கேட்டு குஷியாகிவிடுவார்கள்.

‘`ஆர்.கே.நகர்த் தொகுதியில் உள்ள வார்டுக்கு ஒருவரைத் தேர்வுசெய்து, அவருக்கு மகசேசே விருது வழங்கவேண்டும்’’ என ரைட் கையை ஸ்ட்ரெயிட்டாக நீட்டி உறுதிமொழி எடுக்கலாம். அதேபோல், ``ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு, சிறந்த தொகுதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தரும் வரை ஓய மாட்டோம்” என்றும் முழக்கமிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலாய் இலக்கியம்!

செல்லூர் ராஜு அறிவியல் மன்றத்தின் ஆலோசனைப்படி, வெயில் கொடுமையிலிருந்து ஆர்.கே.நகர்த் தொகுதியைக் காப்பாற்ற தெர்மாகோல் கூரை வேயலாம். குடை பிடித்தால், நாளடைவில் கறுப்பு கலர் குடை வெளுத்துவிடும் என்பதால், வெள்ளை கலர் தெர்மாகோல்தான் சிறந்த சாய்ஸ்.

`புளியமரத்து அடியிலே... புஷ்பலதா மடியிலே’ போன்று அடிக்கடி பழமொழிகளைப் பரபரவெனத் தூவிவிடுவார் ஜெயக்குமார். ``பிரியாணி கொண்டுபோக அண்டா, குலோப் ஜாமுன் கொண்டுபோக குண்டா” என அவரை எதையாவது பேசவைத்து, மக்களை ஈர்த்துவிடலாம். வாட் எ மேன்!

``ஆர்.கே.நகரில் வெயிலடிப்பதற்கு, அரக்கோணம் மக்கள் தங்கள் வீட்டு ஃபேனை நாலாம் நம்பரில் வைக்காததுதான் காரணம்” என, ராஜேந்திரபாலாஜியை விட்டுப் பேசவைக்கலாம். ``என்னா... ஒரு புத்திசாலித்தனம்!” எனத் தொகுதி மக்கள் ஆச்சர்யமடைய வாய்ப்புள்ளது.

இவை எல்லாவற்றையும்விட அ.தி.மு.க மிக புத்திசாலித்தனமா செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். திண்டுக்கல் சீனிவாசனின் கையில் மைக்கைக் கொடுக்கவே கூடாது. பாடகிக்குப் பதிலாக பரதநாட்டியம் என்றவர், பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் என்றவர், குழப்பத்தில் அ.தி.மு.க-வுக்குப் பதிலாக தி.மு.க-வுக்கு ஓட்டு கேட்க மாட்டார் என்று என்ன நிச்சயம்கிறேன்.

கலாய் இலக்கியம்!

ருண்விஜய் ஹீரோவாக நடித்து 2007-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் `தவம்’. இந்தப் படத்தில் கீரிப்புள்ளை எனும் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. ஒரு காட்சியில் வடிவேலுவைப் பார்த்து `என் செயினைக் காணோம் பார்த்தீங்களா?’ என அருண்விஜய் கேட்க, `ஆஹான்’ என ஆச்சர்யமும் அப்பாவித்தனமும் கலந்ததொரு ரியாக்‌ஷனைக் கொடுப்பார், செயினை ஆட்டையைப் போட்ட வடிவேலு. இப்படியொரு படம் வந்ததே பல பேருக்குத் தெரியாமல்போக, இந்த காமெடி மட்டும் அவ்வப்போது சேனல்களில் ஒளிபரப்பானது. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு, யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ ஒரு ஸ்டேட்டஸுக்குப் புதைந்துபோன இந்த ரியாக்‌ஷனைத் தோண்டி எடுத்து கமென்டாகப் போட, பயங்கர வைரலானது `ஆஹான்’ ரியாக்‌ஷன். பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் `ஆஹா’னைக் கொண்டாடினார்கள். கடப்பாரையைக் கொண்டு அடித்தாலும் கலாய்க்கவே வராதவர்களுக்குக் கிடைத்த மாமருந்து இது. சீரியஸான ஸ்டேட்டஸோ, காமெடி ஸ்டேட்டஸோ... எல்லா வகையான ஸ்டேட்டஸ்களுக்கும் ஒரே கமென்ட்தான், `ஆஹான்’. ஆனால், வடிவேலுவுக்கு முன்னரே `ஆஹான்’ ரியாக்‌ஷன் கொடுத்தவர் யார் தெரியுமா? நம்ம சூப்பர்ஸ்டார்தான். `நெற்றிக்கண்’ படத்தில் கொடுத்திருப்பார்!

கலாய் இலக்கியம்!

``நான் பாத்ரூமுக்குள் டப்பிங் பேசினேனாம். அதை ஏதோ துக்கமா பேசுறாங்கய்யா. `தசாவதாரம்’ படத்துல `அதுவும் ஆலயம்தானே, சௌச்சாலயம்’னு ஆண்டவரே சொல்லுவாரு. சிலருக்கு பாத்ரூமில் உட்காரும்போதுதான் கபாலத்துக்குள்ளே புதுப்புதுச் சிந்தனைகள் உதிக்கும். அதுமாதிரி, எனக்கு பாத்ரூம் உள்ளேயே டப்பிங் பேசிடலாம்னு புதுசா ஒரு சிந்தனை உதிச்சது. இது தப்பா, சொல்லுய்யா! டப்பிங் பேசினது க்ளாரிட்டியா இல்லைனு சொல்றாங்க. டார்க் கிரீன் பொய் அது. பீப் சாங்கையும் நான் பாத்ரூம்லதான் பாடினேன். அதுல மட்டும் பீப் சவுண்டுக்குப் பின்னால உள்ள வார்த்தைகூட உங்களுக்குத் தெளிவா கேட்டுச்சு. எப்படிய்யா அது, என்ன வாழ்க்கைய்யா இது... நான் காசிக்கே கிளம்புறேன்.’’

கலாய் இலக்கியம்!

ஓவியம்: பாலமுருகன்

டத்துல பொண்ணுங்களைக்கூடத் தொடாம நடிப்பாரே அந்த டி.ஆர்னு நினைச்சியாடா, அதே படத்துல பொண்ணுங்களைத் தொட்டு உதட்டைக் கடிச்சு இழுக்குற எஸ்.டி.ஆர் (எ) சிம்பு (எ) சிலம்பரசன்டா...

இடம் : பெட்ரூம் அருகில் உள்ள பாத்ரூம்
நேரம் : யாமம் 2.45 மணி

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

`உங்க முகத்துல பத்து எம்.ஜி.ஆர்., இருபது சிவாஜி, முப்பது கமல், நாற்பது ரஜினியைப் பார்க்கிறேன்’னு என்னைக்காவது உங்கள் நண்பர் கலாய்ச்சிருக்காரா? ஆனால், மான்செஸ்டரைச் சேர்ந்த எலியாட் ஜோசப்பை யாரும் அப்படிக் கலாய்க்க முடியாது. ஏன்னா, அதுதான் உண்மையே. வெறும் மேக்கப்பின் உதவியால் அவரது முகத்தில் மைக்கேல் ஜாக்சனின் முகத்தையும் கொண்டுவருகிறார், எலிசபெத் ராணியின் முகத்தையும் கொண்டுவருகிறார், ஜானி டெப்பையும் கொண்டுவருகிறார், டிகாப்ரியோவையும் கொண்டுவருகிறார். செமல்ல... நம்ம ஊர்லேயும் யாராவது முயற்சி பண்ணுங்கப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism