Published:Updated:

உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!

உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!

ஜெ.சரவணன், ஞா.சக்திவேல் முருகன்

உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!

ஜெ.சரவணன், ஞா.சக்திவேல் முருகன்

Published:Updated:
உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!

``பேங்க்ல 1 லட்சம் ரூபாய்க்கும் மேல பணம் வெச்சிருக்கீங்களா... உடனே எடுத்திடுங்க... இல்லைன்னா இனிமே அது உங்க பணமா இருக்காது. புதுச்சட்டம் வரப்போகுது. எச்சரிக்கை’’ என வேகமாகப் பரவுகிறது வாட்ஸ்அப் ஃபார்வேர்டு. இது உண்மையா?

``பாதி உண்மைதான். ஆனால், உடனடியாகப் பணத்தை எடுக்கவேண்டும் என்று பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அவர்கள் அனைத்துக்கும் காரணமாகச் சொல்வது, வங்கிகளுக்குக் கணக்குவழக்கின்றி இருக்கும் வாராக்கடன்களைத்தான்.

உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!

வாராக்கடன்களை இனி வசூலிக்கமுடியாது என்பதால் அதற்குப்பதில் அரசு வேறு வழியைக் கண்டுபிடித்துள்ளது என்கிறார்கள். அதுதான் மத்திய அரசு  விரைவில் கொண்டுவரவுள்ள  `நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகைக் காப்பீட்டு மசோதா’ (Financial Resolution and Deposit Insurance Bill 2017) என்கிறார்கள்.

 என்ன சொல்கிறது சட்ட மசோதா?

`வங்கி ஒன்று, வாராக்கடனாலும் தொடர் நஷ்டத்தாலும் திவாலாகும் நிலைக்கு வந்தால், அந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் பணம் முடக்கப்பட்டு, அதையே மூலதனமாக மாற்றி வங்கியைத் தொடர்ந்து செயல்படுத்தலாம்’ என்பதுதான் இந்தச் சட்ட மசோதாவின் சுருக்கம். மத்திய அரசுக்கு இந்த யோசனை தானாக வந்துவிடவில்லை.

இதுதான் சைப்ரஸ் டெக்னிக்!

2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பிறகு சைப்ரஸ் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. 2012-13-ம் ஆண்டில் சைப்ரஸ் நாட்டு வங்கிகள் வாராக்கடனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அதனால், அப்போதைய சைப்ரஸ் அரசு சில வங்கிகளைப் பாதுகாக்கவேண்டி வாடிக்கையாளர்களின் பணத்தை முடக்கும் `பெயில் இன்’ சட்டத்தைக் கொண்டுவந்தது. அதுவரை வங்கிகளை திவால் ஆகாமல் பாதுகாக்க `பெயில் அவுட்’ நடைமுறை மட்டுமே இருந்தது.

`பெயில் அவுட்’ என்பது, வங்கிகளை திவால் ஆகாமல் பாதுகாக்க அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்குவது. `பெயில் இன்’ என்பது, வங்கிகளை திவால் ஆகாமல் பாதுகாக்க மக்கள் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தையே மூலதனமாக மாற்றிக்கொள்வது. இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். சைப்ரஸைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளிலும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால்,  இன்னும்  அந்தச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் பணம் இனி உங்கள் பணம் இல்லை?!

சூழ்நிலை அந்த நாடுகளுக்கு வரவில்லை.

தனி அதிகாரம்!

இந்தியாவில் அமல்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின்படி  `தீர்மானக் கழகம்’ (Resolution Corporation) என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்புக்கு வங்கிகள் திவாலாகாமல் காப்பதற்கான தனி அதிகாரங்கள்  வழங்கப்படும். அதில் வங்கிகளை இணைப்பது, பங்குகளை விற்பது, அதிகாரிகளை மாற்றுவது, வேலையிலிருந்து நீக்குவது மற்றும் வங்கிகளின் சொத்துகளை விற்பது உள்ளிட்ட சில முக்கிய அதிகாரங்கள் அடக்கம்.

இதில் மிக மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சமே, வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளரின் பணத்தை, அவர் கேட்கும்போது திருப்பித் தரவேண்டிய வங்கிகளின் அடிப்படைக் கடமையைக்கூட இந்த அமைப்பு ரத்துசெய்யலாம் என்பதுதான். 

ஆனால்,   இந்தச் சட்டத்தில் வாடிக்கையாளரின் பணத்துக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும், பணத்துக்குப் பதிலாகப் பங்குகள் அல்லது பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்!

``வாராக்கடன் அதிகரிப்பு, அடிக்கடி நஷ்டக்கணக்கு காட்டுவது உள்ளிட்ட காரணங்களால், மக்களுக்குத் தேசிய வங்கிகள் மீதான நம்பிக்கை ஏற்கெனவே குறைந்துவருகிறது. இந்த நிலையில் மக்களுடைய பணத்தை முடக்கி, வங்கிகளைக் காப்பாற்ற நினைக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் `நம்முடைய பணம் என்னாகுமோ’ என்ற  பதற்றம்  பொதுமக்களிடையே ஏற்படும்.

வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கு இன்ஷூரன்ஸ் சட்டம் இருக்கிறது. வங்கிகள் திவால் ஆகாமல் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ரிசர்வ் வங்கி சட்டங்கள் இருக்கின்றன. தனியார் வங்கிகளுக்கும் நிறுவனச் சட்டங்கள் இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளுக்கும் தனியே சட்டங்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, அனைத்துச் சட்டங்களின் அதிகாரத்தையும் மீறிய ஒரு சட்டம் தேவையா என்பது முக்கியமான கேள்வி. தேசிய வங்கிகள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. வங்கிகள் திவாலானால் அரசே திவாலானதுபோல் ஆகிவிடும். ஆகையால், வங்கி திவாலாக வாய்ப்பே இல்லை. தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத சட்டவரைவாகத்தான் இதைப் பார்க்கிறேன்” என்கிறார் அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம்.

அரசு தெளிவாக எதையும் சொல்லவில்லை!

``இந்தச் சட்டத்துக்கு இதுவரை நான்கு வரைவுகள் வந்துவிட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரைவு குறித்துப் பேசுகிறார்கள். வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தை எடுத்து மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து, அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. நம்முடைய பணத்துக்கு 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை வட்டி வழங்குவார்கள். அவர்கள் வழங்கும் கடனுக்கு 10  அல்லது 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி பெறுகிறார்கள்.

நம்பகமானவர்களுக்குக் கடன் கொடுக்க வேண்டும்; கொடுக்கும் கடனைத் திரும்ப வசூலிக்க  வேண்டும். இதுதான் வங்கிகள் செய்யவேண்டிய அடிப்படையான விஷயம். அதை விட்டுவிட்டு, நாம் வங்கியில் வைத்திருக்கும் பணத்தை முடக்கி, `குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் தருவோம்’ என்று சொல்வது சரியல்ல. நம்முடைய அரசியலமைப்பு அடிப்படைச் சட்டத்திலும், வங்கிச் சட்டத்திலும் இதற்கான இடமில்லை. இப்போதுவரை இந்தச் சட்டம் குறித்துத் தெளிவான அறிக்கையை அரசு வெளியிடவில்லை” என்கிறார் கணக்குத் தணிக்கையாளர் எம்.ஆர்.வெங்கடேஷ்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், வங்கிகளில் பணத்தைப் போடுவதற்குப் பொதுமக்கள் பயப்படுவார்கள். இதனால் பெருமளவு பணம் மீண்டும் வீடுகளில் பூட்டப்படலாம். வங்கிகளுக்குப் பணம் வரவில்லை எனில், வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும். பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism