Published:Updated:

புதிய மனிதா

புதிய மனிதா
பிரீமியம் ஸ்டோரி
புதிய மனிதா

புதிய மனிதா

புதிய மனிதா

புதிய மனிதா

Published:Updated:
புதிய மனிதா
பிரீமியம் ஸ்டோரி
புதிய மனிதா
புதிய மனிதா

ஒரு ரோபோ

ரோபோ உருவாக்குவது குடிசைத் தொழில் ஆகிவிட்டது. அதிலும் “ஸ்பெஷலிஸ்ட் ரோபோ”  தயாரிப்புதான் இந்தத்தொழிலின் அடுத்த லெவல். அந்த வரிசையில் உலகின் முதல் ரோபோ அரசியல்வாதியை உருவாக்கியிருக்கிறார் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக் ஜெர்ரிஸ்டன் (Nick Gerritsen). “சாம்” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோ உள்ளூர்ப் பிரச்னைகளான கல்வி, மருத்துவம், ரியல் எஸ்டேட், குடிபெயர்தல் தொடர்பான விஷயங்களைப் பற்றி அப்டேட் ஆக இருக்கிறது. இதற்கென இருக்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் நடத்தப்படும் சர்வேக்களுக்கு மக்கள் தரும் பதில்களை வைத்து, தாமாகச் சிந்தித்து சரியான முடிவுகளைத் தருகிறான் சாம். மெஸெஞ்சரில் தன்னுடன் உரையாடும் மக்கள் தரும் தகவல்களையும் மூளையில் சேமித்து, அரசின் கொள்கைகளை அப்டேட் செய்துகொண்டு, எது சரியோ அதை மக்களுக்கு எடுத்துச்சொல்கிறான் சாம்.

புதிய மனிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இது சாமின் ஆரம்பக்காலம். அதனால் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கின்றன. ஒரு தேர்தலை சாம் பார்த்துவிட்டால் பக்கா அரசியல்வாதி ஆகிவிடுவான்” என்கிறார் நிக்.

மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் தகவல்களைத் தருவதும்தான் லோக்கல் அரசியல்வாதியின் வேலை என சாமுக்குச் சொல்லித்தருகிறார்கள். அப்போ சாம் இந்தியாவில் அரசியல் பண்றது கஷ்டம்தான்!

புதிய மனிதா

ஒரு பன்ச்

ல்வியில் கவனம் செலுத்துவது நல்லதுதான். ஆனால், இளைஞர்கள் கிரியேட்டிவிட்டி விஷயத்தில் கவனம் செலுத்துவதையும் நிறைய ரிஸ்க் எடுப்பதையுமே நான் விரும்புகிறேன்.

- சுந்தர் பிச்சை,
சி.இ.ஓ, கூகுள்

ஒரு ஷாக்

வெள்ளை மாளிகையை லென்ஸ் வைத்துக் கவனிக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். சமீபகாலமாக பல விஷயங்கள் வெள்ளை மாளிகையிலிருந்து லீக் ஆக டிரம்ப் டென்ஷன் ஆகிவிட்டார். வெள்ளை மாளிகை ஊழியர்கள் மொபைல் பயன்படுத்தத் தடை விதிக்கலாமா என அதிகாரிகளுடன் ஆலோசனையைத் தொடங்கிவிட்டார். தனிநபர் பயன்படுத்தும் மொபைல்களும் வெள்ளை மாளிகையின் வைஃபையில் கனெக்ட் ஆகியிருக்கின்றன. அவர்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டால், வெள்ளை மாளிகையின் வைஃபையும் சேர்த்து ஹேக் செய்யப்படும் ஆபத்திருக்கிறது. அதனால், பர்சனல் கேட்ஜெட்ஸ் அனைத்தையுமே தடை செய்யும் ப்ளானில் இருக்கிறது வெள்ளை மாளிகை. ஆனால், வேலை நேரத்தில் குடும்பங்களுடன் தொடர்பு கொள்வது அவசியம் என இந்த யோசனைக்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

புதிய மனிதா

அலிபாபாவுக்குக்கூட மந்திரம் தெரிந்ததால்தான் கதவு திறந்தது. ஹேக்கர்ஸ் எந்த மந்திரமும் இல்லாமல் எல்லாக் கதவுகளையும் திறந்துவிடுகிறார்கள்.

ஒரு கேட்ஜெட்

“ஒன் ப்ளஸ் வரும் பின்னே; ஆப்பிள் வரும் முன்னே” என்பதுதான் மொபைல் மொழி. ஐபோனில் ஆப்பிள் கொண்டு வரும் வசதிகளை அடுத்த சில மாதங்களில் குறைந்தவிலையில் ஒன் ப்ளஸ் அறிமுகப்படுத்துவது தொடர்கிறது. ஒன் ப்ளஸ் 5 மாடல் வெளியான சில மாதங்களிலேயே `ஒன் ப்ளஸ் 5டி’ என்ற மாடலை வெளியிட்டிருக்கிறது. ஐபோனின் புதிய வசதிகளைச் சேர்ப்பதற்காகத் தான் இந்த அவசர ரிலீஸ் என்கிறது கேட்ஜெட் உலகம்.

புதிய மனிதா

முகத்தை வைத்தே மொபைலை அன்லாக் செய்யும் ஃபேஸ் ஐடி, ஃபுல் வியூ ஸ்க்ரீன் என ஐபோன் விஷயங்களைப் பிரதியெடுத்தி ருக்கிறது ஒன் ப்ளஸ். “இருந்தாலும் ஐபோன் போல வருமா” என ஆப்பிள் ரசிகர்கள் கலாய்க்க, “எங்க விலைக்கு ஆப்பிள் வருமா” என ஒன் ப்ளஸ் ரசிகர்கள் டபாய்க்க… இணையத்தில் இடிவெடிதான்.

இந்தியாவில் `ஒன் ப்ளஸ் 5டி’ மொபைல்கள் அமேசான் மூலம் விற்கப்படுகின்றன. விலை 32,999 ரூபாய் முதல் தொடங்குகிறது.

புதிய மனிதா

ஒரு செயலி

கூகுள் நிறுவனம் 2017-ம் ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் எனப் பல விஷயங்களை அறிவித்திருக்கிறது. வாட்ஸ்அப் போன்ற பல முன்னணி ஆப்கள் இந்தப் பட்டியலில் இல்லையென்ற சர்ச்சையும் எழுந்தது. ஆனாலும், இந்தப் பட்டியல் நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது.  இந்த ஆண்டின் சிறந்த கேம் CATS. நாமே நமக்கான ரோபோவை உருவாக்கி, அதை மற்ற பிளேயர்களுடன் சண்டைக்கு விட வேண்டும். நமது கிரியேட்டிவிட்டி, கன்ட்ரோல், கவனிப்பு எனப் பல ஏரியாக்களுக்கு சவால் விடுகிறது இந்த கேம். Cut the rope போன்ற பிரபலமான விளையாட்டுகளை உருவாக்கிய நிறுவனம்தான் இதையும் உருவாக்கியிருக்கிறது. இதை டவுன்லோடு செய்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

லிங்க்: http://bit.ly/2kAqv2U

புதிய மனிதா

ஒரு இணையதளம்

பாடல்களுக்கென ஒரு சூப்பர் மார்க்கெட்டைத் திறந்திருக்கிறது மதன் கார்க்கியின் டூபாடூ என்னும் இணையதளம். இவர்கள் ஸ்டுடியோவுக்குச் சென்றால் காதல், நட்பு, துரோகம் என ரகவாரியாகப் பிரிக்கப்பட்ட 1000க்கும் அதிகமான பாடல்களைக் கேட்கலாம். அதில் எந்தப் பாடலாவது பிடித்திருந்தால் அதைத் தங்கள் திரைப்படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த `சாங்ஸ் சூப்பர் மார்க்கெட்`டுக்கு முதல் கஸ்டமர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா 3 படத்துக்கு 5 பாடல்களை இங்கிருந்து எடுத்திருக்கிறார்.

“ஒரு திறமைசாலியைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்பு வழங்குப்படுவதுதான் திரையுலகில் வழக்கம். ஆனால், அதன்பின் கதைக்கேற்ற பாடல்கள் உருவாகாமலும் போகலாம். இதற்கான நேரமும் கூடுதல் ஆகலாம். நேரம்தான் பணம் என்பது எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும். டூபாடூ அங்குதான் முக்கியத்துவம் பெறுகிறது. எங்கள் லைப்ரரியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களிலிருந்து அவர்கள் கதைக்குத் தேவைப்படும் பாடலை அவர்கள் தேர்வு செய்யலாம். அடுத்த நொடியே அந்தப் பாடலை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார் டூபாடூவின் நிறுவனர்களில் ஒருவரான மதன் கார்க்கி.

திறமையிருக்கும் யார் வேண்டுமென்றாலும் தங்களுடைய பாடல்களை டூபாடூ தளத்துக்குக் கொடுக்கலாம். அவர்களது பாடல் தேர்வானால் அவர்களுக்கு உரிய கிரெடிட் தரப்பட்டு, படத்தில் பயன்படுத்தப்படும். கூடவே பணமும் கிடைக்கும். ஒரு பாடலின் விலை 1 லட்சம் முதல் 20 லட்சம் வரை. கிடைக்கும் பணம் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடல் உருவாக்கத்தில் பங்கு பெற்றவர்களுக்குப் பிரித்தளிக்கப்படும்.

இண்டிபெண்டென்ட் இசை தந்த வாய்ப்பை இன்னும் விரிவுபடுத்தி நேரிடையாக சினிமாவில் நுழைய உதவுகிறது டூபாடூ.

மேலதிக தகவலுக்கு: doopaadoo.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism