Published:Updated:

விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!
பிரீமியம் ஸ்டோரி
விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

சக்தி தமிழ்ச்செல்வன், படங்கள்: ப.சரவணகுமார்

விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

சக்தி தமிழ்ச்செல்வன், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!
பிரீமியம் ஸ்டோரி
விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

த்திராஜ் கல்லூரியின் கலையரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர் நாளைய அரசுப் பணியாளர்கள். அவர்கள்,  தமிழகத்தின் தென்கோடி கிராமம் முதல் தலைநகர் சென்னை வரை உள்ள கிராம மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர்; ஊழலற்ற மக்கள் பணியை மேற்கொள்ளக் காத்திருப்பவர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த  டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில், சுமார் ஏழு லட்சம் பேர் முதல் சுற்றுத் தேர்வு எழுதினர். அவர்களில் பத்தாயிரம் பேர் அடுத்த கட்டத்துக்குத் தேர்வாகினர். இவர்களில் 2,500 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்குத் தகுதிபெற்றுள்ளனர். திறமையான போட்டியாளர்கள் பலருடன் போட்டிபோட்டுத்தான் `அரசுப் பணி’ என்ற கனவை நிஜமாக்க முடியும். நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளுதல், எழுத்துத் தேர்வை அணுகுவது போன்றதல்ல. அதிலும் முதன்முறையாக நேர்முகத்தேர்வை அணுகுபவர்களுக்கு பேனலில் உள்ள அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்பார்கள், அதை எப்படி எதிர்கொள்வது என்ற பயம்கலந்த குழப்பம் இருக்கும். அதைப் போக்கி, நேர்முகத்தேர்வைத் தன்னம்பிக்கையுடன்  எதிர்கொள்வதற்காக எத்திராஜ் கல்லூரியில் `விகடன் பிரசுரம்’ மற்றும் `அப்போலோ ஸ்டடி சென்டர்’ இணைந்து  டி.என்.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியை நடத்தியது.

விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

அப்போலோ ஸ்டடி சென்டரின்  இயக்குநர் சாம் ராஜேஸ்வரன், போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், செங்கல்பட்டு சப்-கலெக்டர் V.P.ஜெயசீலன் I.A.S., S.சரவணக்குமார் I.R.S ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு இயக்குநர் பழனிச்சாமி, நேர்முகத்தேர்வின்  ஆளுமைத்திறன் குறித்தும், பல்வேறு நேர்முகத்தேர்வில் பங்கேற்ற அரசு அதிகாரி பாபு பிரசாத், நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

விழாவில் பேசிய டாக்டர் சங்கர சரவணன், ``இந்தியாவை வல்லரசாக்க அரசுப் பணியாளர்களால்தான் முடியும். அப்படிப்பட்ட ஒளி படைத்த கண்களையும் உறுதிகொண்ட நெஞ்சையும் உடையவர்களாக நீங்கள் அந்தப் பணியைச் செய்ய வேண்டும்’’ என்றார். சப்-கலெக்டர் V.P.ஜெயசீலன் பேசுகையில், ``அரசு அதிகாரிகளாகப் பணியாற்ற இருக்கும் நீங்கள், பணியாற்றவிருக்கும் துறைசார்ந்த விழிப்பு உணர்வு கொண்டிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு என்பது, உங்களுக்கும் உங்களுக்கு வேலை தரப்போகிறவர்களுக்கும் இடையே நடக்கும் ஆரோக்கியமான கலந்துரையாடல்’’ என, தேர்வை அணுகவிருப்பவர்களுக்கு ஊக்கமளித்தார்.

விகடன் புத்தகத்திலிருந்து ஒரு கேள்வி!

``புன்னகை, உங்கள் வெற்றியின் அடையாளம்’’ எனப் பேசிய சரவணக்குமார், ``உங்களுடைய ஆளுமைத்திறனை பென்சிலைப்போலக் கூர்மையாக்கிக்கொண்டே இருத்தல் அவசியம்’’ என்றார்.

விழாவின் இறுதியில் பேசிய அப்போலோ  ஸ்டடி சென்டரின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரன், குருப்-1 தேர்வில் விகடன் பிரசுரத்தில் வந்த `பெரியோர்களே... தாய்மார்களே..!’ புத்தகத்தி லிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், வரும் வாரங்களில் அப்போலோ ஸ்டடி சென்டர் சார்பில் நடக்கவிருக்கும் மாதிரி நேர்முகத்தேர்வுப் பயிற்சி வகுப்புகள் குறித்தும் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism