Published:Updated:

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”
பிரீமியம் ஸ்டோரி
“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

சக்தி தமிழ்செல்வன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

சக்தி தமிழ்செல்வன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”
பிரீமியம் ஸ்டோரி
“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

ல்லாத் திசைகளிலும் அழுகுரல்கள், பிரார்த்தனைகள், சிறு குழந்தைகளின் கேவல்கள், கோரிக்கைகள் என உறவுகளை இழந்த உயிர்களின் ஓலத்தால் நிலைகுலைந்துபோயிருக்கிறது கன்னியாகுமரிக் கடல்.

``இது மொத கொழந்த, 11 வயசாயிட்டுது. இது ரெண்டாவது கொழந்த, எட்டு வயசாயிட்டு. மூணாவது குட்டிக்கு ஆறு வயசாயிட்டு. கடைசி மொவளுக்கு இப்பதான் ஒன்றரை வயசு. தகப்பன் வரலையங்கில் எங்களையும் கடலிண்டைய ஒப்படைச்சு மரிச்சுப்போகும். அது தவிர்த்து வேறேதும் வழியுண்டோ எங்களிண்ட கடல் பிள்ளைகளுக்கு?” எனக் கதறி அழுத அந்த நெய்தல் நிலத்தாயின் மடியில் அமர்ந்தபடி, போராட்டக்காரர்கள் கொடுத்த க்ரீம் பிஸ்கட் பாக்கெட்டைப் பற்களால் கடித்துப் பிய்த்துக் கொண்டிருந்தார்,  தகப்பனுக்காகக் காத்திருந்த ஆறு வயதுச் சிறுமி.

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம் : ரா.ராம்குமார்

குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் கடலின் மக்கள் பல்லாயிரம் பேர் நடத்திய போராட்டக் களத்தில்தான் அந்தக் குடும்பம் அமர்ந்திருந்தது. நவம்பர் மாதம் 20-ம் தேதி கடலுக்குச் சென்ற தன் கணவன் இன்னும் வராத வேதனையில், `மடேர் மடேர்’ என நெஞ்சில் அறைந்து ``என்ட கடலம்மே... என்ட மாமனே குடுத்துச்சேரு” எனப் பெரும் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார் அந்தப் பெண். அவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஆறு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பல நூறு குடும்பங்களும் தங்களின் தகப்பனுக்காக, அண்ணனுக்காக, பிள்ளைக்காக, தம்பிக்காக என ஆயிரம் நாட்டிக்கல் தொலைவுக்கு அப்பால் எங்கோ சென்ற தம் மீனவச் சொந்தங்களுக்காகப் பெரும் ஓலமிட்டுக் கதறி அழுதுகொண்டிருந்தனர்.

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டம்துறை போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து மீனவ மக்களும், குழித்துறை ரயில் நிலையத்தைப்  போராட்டக்களமாக்கினர். கொளுத்தும் வெயிலில் அழுது அழுது களைத்துப்போயிருந்த குழந்தைகளும் தாய்மார்களும் மயங்கிச் சரிந்துகொண்டிருந்தனர். அவர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பியபடியே ``சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்? கடலில் போன மக்களைக் காக்கத்தானே நாங்கள் கேட்டோம்” எனக் கொந்தளித்த கடலலைபோல கோஷமிட்டது கூடியிருந்த மக்கள் திரள்.

இன்னமும் கடலுக்குள் சென்ற மீனவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன, அவர்களில் இறந்தவர்கள் எத்தனை பேர்,  உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை என்ன என்ற சரியான புள்ளிவிவரங்கள் கணக்கிடப் படாமல் உள்ளன. அரசு  சரியான முறையில் கணக்கிடவில்லை எனக் குற்றம்சாட்டி, கிராம மக்களும் மீனவச் சங்கப் பிரதிநிதிகளும் சேர்ந்து அதைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தனர். கடந்த மாதம் 30-ம் தேதி தாக்கிய `ஒகி’ புயலால் இழந்த உயிர்கள் குறித்தோ, உடைமைகள் குறித்தோ  சரியான தரவுகள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று. `ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத் தோப்புகள், ரப்பர் தோட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன. பொருளாதார, வாழ்வாதாரரீதியாக இழப்புகள் ஒருபுறமெனில், பல்லாயிரக் கணக்கான சொந்தங்களை இழந்து தவிக்கும் மீனவர்கள் மறுபுறம்.

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, சின்னத்துறை, தேங்காய்ப்பட்டினம், குளச்சல், முட்டம் பகுதிகளைச் சேர்ந்த மீனவக் கிராமங்களில் உள்ள மீனவர்கள், நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிப்பவர்கள். அவர்கள் பிடித்து வரும் மீன்கள், வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்நியச் செலாவணிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்திவருகின்றன. அரபிக்கடலின் கரைகளில் உள்ள இந்தக் கிராமங்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு,  தமிழகத்துடன் 1956-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. மீன் பிடித்தலையே முதன்மைத் தொழிலாகக்கொண்ட இந்த மக்களுக்குக் கடல்தான் வாழ்வாதாரத்துக்கான வழி. வள்ளத்தில் இறங்கும் அவர்களின் உழைப்புதான் மூலதனம். பங்கு பிரிக்க முடியாத கடலைப்போல உள்ள ஒற்றுமைதான் இந்த மக்களின் மிகப்பெரிய பலம்.

காலையில் கடலுக்குச் சென்று மாலை வீடு திரும்புவது அல்ல மீனவர்களின் தொழில்முறை. `தங்கு கடல்’ மீன் பிடிப்பு எனப்படும் ஆழ்கடலிலேயே 10 முதல் 45 நாள்கள் வரை தங்கி மீன் பிடிப்பவர்கள் அந்தப் பகுதி மீனவர்கள். வழக்கமாக இவர்களுக்கு டிசம்பர் மாதம் என்பது கொண்டாட்டமான மாதம். திருவிழாக்களும், அதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புது வருடப் பிறப்பு என அடுத்தடுத்து விழாக்களின் காலமாகவே இருக்கும். எவ்வளவு நாள்கள் கடலிலேயே கிடந்தாலும் கிறிஸ்துமஸுக்குக் கரைக்கு வந்துவிடுவார்கள்.  ஆனால் 2017 டிசம்பர் இவர்களுக்கு மாபெரும் துயரத்தைக் கொடுத்துள்ளது.

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

சின்னத்துறை மீனவ கிராமம், நீரோடி கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமம். தமிழக - கேரள  எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்துக்குச் சென்றோம். கிராமத்தில் வயதான சிலரைத் தவிர யாருமே இல்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வயதான அம்மா ஒருவர் குழித்துறை ரயில் நிலையத்தில் தலைவிரிகோலமாக அழுதுகொண்டிருந்தார். அவரின் குடும்பத்தில் கடலுக்குச் சென்ற கணவர், மகன், இரண்டு மருமகன்கள் என அத்தனை பேரும் இறந்துவிட்டனர். தன் குடும்பமே சிதைந்துபோன நிலையில் தன் மகளின் கைக்குழந்தைக்கு வாட்டர் பாக்கெட்டில் தண்ணீர் கொடுத்தபடியே ``என் பிள்ளைங்கள மீட்டுக் கொடு. நாங்கள் என்ன தவறு இழைச்சோம். எங்க மக்க காணாமல்போயி எத்தினி தெவசம் எங்கூரு பிள்ளைகள் அழுதிருக்கும்” என அழுது அழுது வற்றிப்போன தொண்டையில் அரற்றினார்.

ஆரோக்கியதாஸ் என்கிற தன் தம்பி லட்சத்தீவுகளில் இருப்பதாக யாரோ கூற, அங்கு இருந்த ஒவ்வொருவரிடமும் தன் தம்பியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். மேரி என்ற 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, தன் கணவனைச் சென்ற வருடம் பறிகொடுத்தவர். தன் ஒரே மகனைக் கடலுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வாரத்துக்கும்மேல் சாப்பிடாமல் அழுதுகொண்டிருக்கிறார். கூட்டுக் குடும்பமாக வாழும் செபாஸ்டியன் குடும்பத்தில் ஏழு பேர் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுச் சென்ற மார்ஷல் என்ன ஆனார் என்றே யாருக்கும் தெரியவில்லை.

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

``இயற்கைச் சீற்றங்களுக்கு யாராலும் எதுவும் செய்ய முடியாதுதான். ஆனால், எங்களுக்கு உதவுங்கள் என்றுதான் இந்த அரசைக் கேட்கிறோம். அவர்களோ, நீங்கள் யார் என்பதைப்போல் உதாசீனப் படுத்துகிறார்கள்’’ என்கிற குரல்தான் கடற்பகுதி முழுக்கவும் ஒலிக்கிறது.

“சோறா கேட்டோம்... நீரா கேட்டோம்... குடியிருக்க வீடா கேட்டோம்?”

``கடற்படையைப் பற்றித் தவறான பிரசாரம்  பரப்பப்பட்டு வருகிறது. அவர்களின் கடுமையான முயற்சியால் 700 மீனவர்கள் இதுவரையிலும் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அரசியல் நோக்கத்தோடு போராட்டம் நடத்தப்படுவதால் மீனவ மக்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஒப்பாரி வைக்கும்  வீட்டில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். தேவைப்பட்டால் மீனவர்களைத் தேட ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும். மீனவர்கள் எந்தப் பகுதியில் தேடச் சொல்கிறார்களோ அந்தப் பகுதியில் தேட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.’’

- பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism