Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: ஹாசிப்கான்

கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: ஹாசிப்கான்

Published:Updated:
கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

டிரெண்டிங் மேட்டர்களைக் கொஞ்சம் கலாய்த்து, கிழித்து, தைத்து, துவைத்து, காயப் போட்டு, அடுத்த நாள் அயர்ன் செய்து மடித்து எடுத்தால் கலாய் இலக்கியம் ரெடி!

கலாய் இலக்கியம்!

``அரசியல் பிரவேசத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது, போர் வரட்டும்’’ போன்ற வசனங்களையே திரும்பத் திரும்பச் சொல்லி, `தீரன்’ படத்தில் வரும் `தோ கிலோமீட்டர்’ தாத்தாவைப்போல் தன் ரசிகர்களைக் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார். ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்கும் இந்த வசனங்கள் `காலா’ வெளியாவதற்கு முன்பே காலாவதியாகிவிட அதிக வாய்ப்புள்ளது என்பதால், ரஜினிக்கு வேறு சில பன்ச்சுகளை ரெடி செய்திருக்கிறோம்...

நம்பர் ஒண்ணு : `` `அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறோம்’ என போஸ்டர் ஒட்டியிருக்கிறீர்கள். வெற்றிடத்தை நிரப்பி வெற்றி கொள்வதில் என்ன த்ரில் இருந்துவிடப் போகிறது. கமல், விஜய், விஷால் எல்லோரும் முதலில் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கட்டும். நாம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வருவோம். போர் புரிவோம். போர், ஆமாம், போர்!’’

நம்பர் ரெண்டு : `` `மெர்சல்’ படத்தில் `ஒரு குழந்தை உருவாகப் பத்து மாசம், ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம். ஆனால், ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது’ எனச் சொல்லியிருப்பார் தம்பி விஜய். எனவே, எனது ரசிகர்களாகிய நீங்கள்... ஆம், அதேதான். ஒரே ஒரு யுகம் மட்டும் காத்திருங்கள் போதும்.’’

நம்பர் மூணு :  `` `ஆளப்பிறந்தவரே’, `தமிழகத்தின் தலைவனே’, `தலைவா வா, தலைமையேற்க வா’ என இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு கலர்களில் போஸ்டர், பேனர் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குக் கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும். அனைவருக்கும் விருந்து வைக்கிறேன். விருந்து முடிந்ததும் சீர்கெட்டுப் போன சிஸ்டத்துக்கு சிரப் கொடுக்கத் தயாராவோம்.’’

நம்பர் நாலு : ``நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன் - நான் யானை இல்லை, குதிரை. யானை விழுந்தால் எழுந்து நிற்க லேட் ஆகும். ஆனால், குதிரை சும்மா டக்குனு எழுந்து நிற்கும். இனி நாம் யானையும் கிடையாது, குதிரையும் கிடையாது. நாம் டைனோசர்கள். கீழே விழுந்தால் வேகமாக எழுந்து நிற்குற குதிரையைவிட, கீழேயே விழாத டைனோசராக மாறச்சொல்கிறது காலம். சீக்கிரமே மாறுவோம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

`ரஜினி முருகன்’ படத்தில் வரும் கொடிக்குளம் பேச்சிப் பாட்டி, இணையத்தில் செம பிரபலம். எல்லாப் புகழும் மீம்ஸுக்கே. இந்தக் காட்சியில் சமுத்திரகனி ஒரு போட்டாவைக் காட்டி `இதை எடுத்துக்கலாமா’ எனக் கேட்பார். பேச்சிப் பாட்டி `அதுக்கென்னப்பே எடுத்துக்கப்பே’ எனச் சொல்லும். அடுத்து ஒரு பட்டயத்தைக் காட்டி `இதை எடுத்துக்கலாமா?’ எனக் கேட்பார். அதற்கு `இல்லப்பே அது முடியாதுப்பே’ என்பார். அடுத்தடுத்து வரும் இந்த முரண்பட்ட வசனங்கள், மீம் க்ரியேட்டர்களுக்குத் தாறுமாறு டெம்ப்ளேட்டாக அமைந்தது. இதேபோல், பொன்ராமின் முந்தைய படமான `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திலும் `ஒரு கோடிப்பே...’ டெம்ப்ளேட் வைரலானது. எனவே, சிவா - பொன்ராம் கூட்டணியின் அடுத்த படத்திலும் `ப்பே’ சீரீஸ் டெம்ப்ளேட் ஒன்றை நிச்சயம் எதிர்பார்க்கலாம்ப்பே...

கலாய் இலக்கியம்!

ளைஞர் சமுதாயம் அவர்களே, கல்லூரிக் காளைமார் அவர்களே,  அரியர்வைத்தாலும் அசிங்கப்படாத சிங்கங்கள் அவர்களே... அகில இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தி தேர்வாகியிருக்கிறாராம். பல நாள்களாக நம்முடன் அரியருக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்த ஒருவரும் திடீரென `ஆல் க்ளியர்’ செய்துவிட்டுக் கிளம்பியதைப் போல மனது கிடந்து தவிக்கிறது. `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே சினேகனைத் தலைவர் ஆக்கினார்கள். அதிலிருந்து அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதையே தவிர்த்துவிட்டேன். ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. `காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...’ பாடலைத்தான் ரிங்டோனாகவே வைத்திருக்கிறேன். குறியீடு புரிந்தும் அமைதியாகவே இருக்கிறார்கள். நான் என்னதான் செய்ய? ப்ச்ச்ச்...

 இப்படிக்கு,

மு.க.ஸ்டாலின் (செ.த)

கலாய் இலக்கியம்!

ம் ஊர் மாஸ் ஹீரோக்கள் ஆக்‌ஷன் காட்சிகளில் விஞ்ஞானத்தோடே வீம்பாக விளையாடியதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஐசக் நியூட்டனை நினைத்து ரத்தக்கண்ணீர் வடித்திருக்கிறோம். அப்படியே, இந்த கார்ட்டூன்களையும் பாருங்க, கலர் கலரா கண்ணீர் வரும்... என்ன லாஜிக்யா இது?

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

பார்த்துப் பல வருடங்களான, நமது ஃபேவரிட் கதாபாத்திரங்கள் இப்போ என்ன பண்ணிட்டிருக்காங்க என்பதைத் தெரிந்துகொள்ளும் பகுதி.

க்ளைமாக்ஸில் கிளிமூக்குத் தீவிரவாதியின் அல்லையில் கடப்பாரையைச் செருகிவிட்டு, பாகிஸ்தான் சிறுவனுக்குத் தமிழில் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த நரசிம்மா, அதன் பின் பாராசூட் ஏறி, தமிழ்நாடு வந்தடைந்தார். ஐஸ் கட்டியில் மல்லாக்கப்படுப்பது, கரன்ட்டுக்கே ஷாக் அடிக்க வைப்பது, நகத்தைக் கடித்துத் துப்புவதென அவருக்குள் இருந்த சூப்பர் ஹீரோ சக்திகளை தெரிந்துகொண்டு, `அவெஞ்சர்ஸ்' டீமில் இணையக்கோரி அயர்ன் மேனிடமிருந்து கடிதம் வந்தது. `என் தாய்நாட்டுக்காக மட்டும்தான் சேவை புரிவேன்' எனத் தமிழிலேயே பதில் கடிதம் எழுதிவிட்டு, தமிழ்நாட்டு போலீஸாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தார். இப்போது ரிட்டையராகிவிட்டார். வீட்டிலிருந்தே பார்ட் டைமாக சிறுவர்களுக்கு கதகளி க்ளாஸ் எடுத்துவருகிறார் சிம்மா... நரசிம்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism