Published:Updated:

நக்கலோ நக்கல்!

நக்கலோ நக்கல்!
பிரீமியம் ஸ்டோரி
நக்கலோ நக்கல்!

ப.சூரியராஜ், படங்கள்: சுஜித்

நக்கலோ நக்கல்!

ப.சூரியராஜ், படங்கள்: சுஜித்

Published:Updated:
நக்கலோ நக்கல்!
பிரீமியம் ஸ்டோரி
நக்கலோ நக்கல்!

கோவைக் குசும்பர்களின் லேட்டஸ்ட் பெருமை `நக்கலைட்ஸ்.’ யூ டியூபில் தெளிவான அரசியல் பார்வையோடும் அற்புதமான நகைச்சுவை உணர்வோடும் சமூக நிகழ்வுகள் குறித்த முக்கியமான வீடியோக்களை உருவாக்குகிறது கோவையைச் சேர்ந்த  `நக்கலைட்ஸ்’ குழு. நீண்ட நாளாக மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியையே முதல் கேள்வியாக வைத்து ஆரம்பித்தேன்.

``இரண்டு றெக்கைகள், இடதுகால் செருப்பு, `நக்கலைட்ஸ்’ லோகா என்னதாங்க சொல்ல வருது?”


``ஐயோ! அது அவ்ளோ பெரிய மேட்டர் இல்லீங். அதுல இருக்கிற ஹவாய் செருப்பு,  சாமானியர்கள் யூஸ் பண்றது. ஒரு சாமானியன் பறக்க றெக்கை கிடைச்சா, எவ்வளவு சுதந்திரமா ரவுசு பண்ணிக்கிட்டு, குறும்பு பண்ணிக்கிட்டிருப்பான். அப்படி நினைச்சுதான் வெச்சோம். அப்புறம், கேவலமா ஏதாவது பண்ணுனோம்னா, செருப்பைத் தூக்கி வீசுவானுங்கல்லோ, அதுக்கான குறியீடாவும் வெச்சுக்கலாம். ஒரே செருப்புல ரெண்டு மாங்கா”  பிரசன்னாவின் பேச்சில் தூக்கலாக இருக்கிறது வட்டாரமொழி வாசமும் கோயம்புத்தூர்க் குசும்பும்.

``ஆரம்பத்துல `சும்மனாச்சிக்கி’னு ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பிச்சோம். அதை `யூ டியூப் சேனல்’னு சொல்றதைவிட `ஃபேஸ்புக் சேனல்’னு சொல்றதுதான் சரி. மொதல்ல, `செல்லாது... செல்லாது’, `டோன்ட் பேனிக்’, `கொலைப்பசியில் இருக்கேன்’னு மூணு வீடியோக்கள் பண்ணுனோம். அதுல `கொலைப்பசியில் இருக்கேன்’ வீடியோ செம ரீச். `டோன்ட் பேனிக்’ வீடியோ, ஃபேஸ்புக்லேயே ஒரு லட்சம் வியூஸைத் தாண்டுச்சு. அப்போ, யூ டியூப்பைவிட ஃபேஸ்புக்லதான் நமக்கு ரசிகர்கள் ஜாஸ்தியா இருந்தாங்க. `நக்கலைட்ஸா’ மாறிய பிறகு, யூ டியூப்பிலும் ரசிகர்கள் எண்ணிக்கை ஜாஸ்தியாட்டிருக்குது. ஒருமுறை எங்க சேனலை பிளாக் பண்ணிப்போட்டானுங்க. யார் பண்ணது, எதுக்குப் பண்ணதுனே தெரியலை!” எனக் குழப்பமாகி, விட்டத்தைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்தார் பிரசன்னா, `நக்கலைட்ஸி’ன் ஆஸ்தான நடிகர் மற்றும் எழுத்தாளர்.

நக்கலோ நக்கல்!

``யூ டியூப்னு இறங்கிட்டா இதெல்லாம் சகஜம்தானேப்பா!’’ பிரசன்னாவை கூலிங்கிளாஸ் சகிதமாக கூலாக்கினார் செல்லா.

``ஏங்க செல்லா, அதெல்லாம் இருக்கட்டுங்க. ரூமுக்குள்ள வந்து அரை மணி நேரம் மேலாவுது. அந்த கூலிங்கிளாஸைக் கழட்டி வெச்சாதான் என்ன?” என அருண்குமார் அப்செட்டாக, ``ஏப்பா, அவரு `காலா’ படத்துல சூப்பர் ஸ்டாரோடு நடிச்சுட்டிருக்காரில்ல, அதான் எப்பவும் கூலிங்கிளாஸோடவே சுத்திட்டிருக்கார்” என விளக்கம் தந்தார் பிரசன்னா.

``அதெல்லாம் இல்லீங் பிரசன்னா, இலுமினாட்டிங்கனா எப்பவும் கூலிங்கிளாஸோடுதான் இருக்கணுமாமே, அதான்” என குண்டைத் தூக்கிப்போட, எல்லோரும் குபீரெனச் சிரித்தனர்.

``ஆமாங்க, எங்களை `இலுமினாட்டிகள்’னு சொல்லி சிலர் கிளப்பிவிட்டுட்டு இருக்காங்க. நினைச்சாலே சிரிப்புச் சிரிப்பா வருது” என்றார் இயக்குநர் ராஜேஷ்.

``இது என்ன பாஸ் புதுப்புரளியா இருக்கு?” எனக் கேட்க, ``நாங்க  ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுற பிரச்னைகளைப் பத்திதான் வீடியோ பண்ணுவோம். மாட்டிறைச்சிப் பிரச்னை வந்தப்போ, `மாட்டு வெளியிடை’னு ஒரு வீடியோ பண்ணுனோம். அதில் மாட்டிறைச்சியைத் தொடர்ந்து கோழி, மீன், முட்டைனு எல்லாத்துக்கும் பிரச்னை வரும்கிற மாதிரி சொல்லியிருந்தோம். உண்மையிலேயே, பெருமாளுடைய மச்சவதாரம்தான் மீன். அதனால மீன் சாப்பிடக் கூடாதுனு கொல்கத்தாவில் கிளம்பினாங்க. இதுமாதிரி `நக்கலைட்ஸ்’ வீடியோவில் கற்பனையாகச் சொல்லப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள்கூட பின்னாடி உண்மையிலேயே நடக்க ஆரம்பிச்சுடுச்சு. அதான் எங்களை `இலுமினாட்டி’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. சத்தியமா, அவங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லீங். துண்டைப் போட்டுக்கூட தாண்டுறேன்” என ராஜேஷ் சொல்ல, ``பெரிய போர்வையைக் கொண்டுவாங்க, ஒட்டுமொத்த டீமும்  அதைத்தாண்டி, பிரச்னையை முடிச்சுவிட்ருவோம்” என ஆயத்தமானார் ஒளிப்பதிவாளர் சுஜித்.

 சமூக ஆர்வலரான பிரசன்னாவும், `மதுபானக்கடை’ கமலக்கண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டிருந்த ராஜேஷும்தான் `நக்கலைட்ஸி’ன் சூப்பர் சீனியர்கள். சாதிப் பெருமை பேசித்திரிபவர்களை சகட்டுமேனிக்குக் கலாய்த்து பிரசன்னா ஒரு ஸ்க்ரிப்ட் எழுத, அதை `ஆண்ட பரம்பரை’ என்ற பெயரில் குறும்படமாக இயக்கினார் ராஜேஷ். லிவிங்ஸ்டன் நடித்த அந்தப் படம்தான் நக்கலைட்ஸின் ஆரம்பப் புள்ளி. அந்தப் படத்தில்தான் நக்கலைட்ஸின் நட்சத்திரங்களான பிரசன்னா, செல்லா, சசி செல்வராஜ், தனம் அம்மா ஆகியோரும் நடிகர்களாக அறிமுகமாகினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நக்கலோ நக்கல்!

சசி செல்வராஜ்தான் வீடியோக்களில் `விஷாலா’க வந்து கலக்கிக்கொண்டிருப்பது. `விஷால் கதாபாத்திரத்திலேயே மூழ்கிட்டீங்களே பாஸ்!’ என நாம் தம்ஸ்அப் காட்டினால், ``அவன் மூழ்கலை; நாங்க முக்கிட்டோம்” என்கிறார்கள். `அம்மா அலப்பறைகள்’ மூலம் ஓவர்நைட்டில் ஓவியாவைவிடப் பிரபலமாகியுள்ளார் தனம் அம்மா. `அப்படியே எங்க அம்மாவைப் பார்த்த மாதிரியே இருக்கு’ என நெட்டிசன்கள் கண்ணீர் வடிக்க, நெகிழ்ச்சியில் இருக்கிறார் அவர். 
 
``நான் நடிக்கவெல்லாம் இல்லை, என் பையன்கிட்ட நான் எப்படி நடந்துக்குவேனோ, அதைத்தான் கேமரா முன்னாடி செஞ்சேன். சொல்லப்போனால், கேமரா இருக்குங்கிறதையே நான் மறந்துட்டேன். எனக்கு நிஜத்தில் ரெண்டு பசங்க. பெரியவர் சினிமா லைன்லதான் இருக்கார். `உத்தமவில்லன்’ படத்தின் அசோசியேட் டைரக்டர். சின்னவர் வெளிநாட்டுல இருக்கார். இவருடைய கதாபாத்திரம்தான் `அம்மா அலப்பறைகள்’ வீடியோவில் வரும் அருணின் கதாபாத்திரம்” எனச் சொல்லும் தனம் அம்மா, ஒரு சமூக ஆர்வலர். இவரின் கணவர் பொன்.சந்திரன்தான் நக்கலைட்ஸின் நரேந்திர மோடி என்பது கொத்தமல்லித் தகவல்!

``அண்ணே, அந்த டிராஃபிக் மேட்டரைச் சொல்லுங்கண்ணே” என `அகோரி’ விக்னேஷ் லீடு எடுத்துக்கொடுக்க,

நக்கலோ நக்கல்!

``ஹாங்ங்... ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க பண்றதைவிட பொதுமக்கள் பண்றதுதான் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். `பணம் பிரம்மாஸ்மி’ ஷூட்டிங்கில் நான் நடுரோட்ல ஒரு காலைத் தூக்கி தியானம் பண்ற மாதிரி ஷூட் பண்ணிட்டிருந்தோம். அப்போ ஒருத்தர் திடீர்னு என்ட்ரி கொடுத்து, நாங்க ஏதோ யோகா பற்றிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்திட்டிருக்கோம்னு  நினைச்சு, டிராஃபிக்கை க்ளியர் பண்ண ஆரம்பிச்சுட்டார். அதே மாதிரி `காலைப் பொழுதின் கலக்கத்திலே...’ வீடியோ பண்ணும்போது உண்மையாவே பாத்ரூம் போக எங்ககிட்ட காசு இல்லைனு நினைச்சு, ஒரு அம்மா வந்து  எங்க கையில காசு கொடுத்துட்டு, காசு கேட்டவனைக் கழுவிக் கழுவி ஊத்த ஆரம்பிச்சுட்டாங்க. களத்துல இறங்கி கேமராவை வைக்கும்போதுதான் இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்கும்” என்றார் செல்லா.

``சீக்கிரமே, நக்கலைட்ஸை நீங்கள் பெரிய ஸ்க்ரீன்ல பார்க்கலாம்” எனப் புன்னகைத்தார் இயக்குநர் ராஜேஷ்.

வாங்க மக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism