Published:Updated:

“இசையில் தொடங்குதம்மா!”

“இசையில் தொடங்குதம்மா!”
பிரீமியம் ஸ்டோரி
“இசையில் தொடங்குதம்மா!”

கு.ஆனந்தராஜ்

“இசையில் தொடங்குதம்மா!”

கு.ஆனந்தராஜ்

Published:Updated:
“இசையில் தொடங்குதம்மா!”
பிரீமியம் ஸ்டோரி
“இசையில் தொடங்குதம்மா!”

“இளையராஜா சார் தன் மகள் பவதாரணிக்கு வீணை கற்றுக்கொடுக்க டி.வி.ஜி சார்கிட்ட ஆள் கேட்க, அவர் மூலமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. பவதாரணிக்கு வீணை கற்றுக்கொடுக்க ஆறு மாதங்கள் ராஜா

“இசையில் தொடங்குதம்மா!”

சார் வீட்டுக்குப் போனேன். ராஜா சார் தினமும் ரெக்கார்டிங் தியேட்டருக்குக் கிளம்பும் முன், காலை ஆறரை மணிக்கு தன் வீட்டின் மியூசிக் ரூமுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டுப் போவார். அந்த ரூம்லதான் நான் பவதாரணிக்கு க்ளாஸ் எடுத்துட்டிருப்பேன். அந்தச் சமயத்துல நான் சொல்லிக்கொடுப்பதைக் கவனிச்சிருக்கார். ஒருநாள் அவர் வீட்டிலேயே என்னை சில கீர்த்தனைகளை வாசிச்சுக்காட்டச் சொன்னார். அவருக்கு ரொம்பவும் பிடிச்சிருச்சு. அப்போ ஆரம்பிச்ச பயணம், தொடர்ந்து 27 வருஷமா ராஜா சார்   ட்ரூப்பில் வீணை வாசிச்சுட்டிருக்கேன்!” - சிலிர்ப்பும் சந்தோஷமுமாகப் பேசுகிறார் புண்யா ஸ்ரீநிவாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரபல வீணைக் கலைஞரான இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பல நூறு திரைப்படங்களில் பணியாற்றியவர். புண்யாவின் இசைப்பயணம் இதோ இப்போது அநிருத் இசையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு மேல’ பாடல் வரை வந்திருக்கிறது. 

“இசையில் தொடங்குதம்மா!”

“இளையராஜாவிடம் வேலைபார்க்கும் அனுபவம்?”

“அது வரம்! ராஜாசார்கிட்ட வேலைக்குச் சேர்ந்தப்போ எனக்கு 17 வயசு. முதல் ஒரு மாசம், எனக்குப் பயிற்சிகள் கொடுத்தார். பிறகு, 1990-களிலிருந்து ராஜா சாரின் எல்லாப் படங்களின் பின்னணி இசை, பாடல் இசை மற்றும் மேடைக் கச்சேரிகள்ல பிரதான வீணைக் கலைஞராக வாசிக்க ஆரம்பித்தேன். 90-களின் தொடக்கத்தில் தன் இசையில் வீணைக் கருவியுடன் கிடார் மற்றும் சிதார் கருவிகளையும் இணைத்து வாசிக்கவைப்பார். பின்னாள்களில், வீணை இசை தனித்துவமா ஒலிக்கிற மாதிரியான போர்ஷனை கம்போஸ்செய்து, அதில் என்னை வாசிக்கவைத்தார். ‘நிற்பதுவே நடப்பதுவே’ (பாரதி), ‘ஒரு ராகம் தராத வீணை’ (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) உள்ளிட்ட நிறைய பாடல்களில் என் வாசிப்பு தனித்துவமா தெரியும்.’’

“இசையில் தொடங்குதம்மா!”

“மற்ற இசையமைப்பாளர்களோடும் பணியாற்றுகிறீர்களே?”

‘`ராஜா சார்கிட்ட சேர்வதற்கு முன் நான் அதிகமா சினிமாவெல்லாம் பார்த்ததில்லை. சொல்லப்போனா, ராஜா சார்கிட்ட சேர்ந்த பிறகுதான் தமிழ் சினிமா இசை உலகு பற்றியும், அதில் அவர் முடிசூடா மன்னன் என்பதையுமே தெரிஞ்சுக்கிட்டேன். ராஜா சார்கிட்ட வேலைபார்க்க ஆரம்பிச்ச காலத்திலேயே, எனக்கு மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்தும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்கு ராஜா சார் எந்த ஆட்சேபனையும் சொல்லலை. வாழ்த்தினார். தொடர்ந்து தேவா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் தொடங்கி இன்று அனிருத் வரை முன்னணி தமிழ் மற்றும் தென்னிந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்கள்கிட்டயும் வொர்க் பண்ணிட்டிருக்கேன். ஒருவேளை ஒரே நேரத்துல பல இசையமைப்பாளர்களிடமிருந்தும் அழைப்பு வந்தால், ‘ராஜா சார் வேலையை முதல்ல முடிச்சுட்டு அப்புறம் வாங்க’னு அவங்களே சொல்லிடுவாங்க.”

“இசையில் தொடங்குதம்மா!”

“வெளி நிகழ்ச்சிகளில் சினிமாப் பாடல்கள் வாசிப்பதில்லையே. ஏன்?”

“27 வருஷத்தில், ஒரு வெளிநிகழ்ச்சியில்கூட சினிமாப் பாடல்களை வாசித்ததில்லை. ஏன்னா, அது இசையமைப்பாளர்களின் சொத்து. என் சொந்த உழைப்பில் உயிர்பெறும் பாடல்களின் மூலமே நான் வீணைக் கலைஞரா புகழ்பெற ஆசைப்படுறேன். அதன்படி 2012-ம் வருஷம், ‘வீணா இன் வியன்னா’ங்கிற பெயர்ல ஒரு வீணை ஆல்பம் வெளியிட்டேன். அந்த ஆல்பம் விற்பனையில் சாதனைபடைக்க, மீண்டும் ‘சவுண்ட் ஆஃப் ஸ்வான்’னு இன்னொரு ஆல்பம்  ரிலீஸ் பண்ணினேன். அதுவும் ஹிட். தொடர்ந்து பல வெளிக்கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகள்ல வாசிச்சுட்டிருக்கேன். அவற்றிலெல்லாம் தனி ஆல்பம், கர்னாட்டிக், ஃபியூஷன் மற்றும் பஜன்ஸ் மியூசிக் வகையில் உருவான பாடல்களை மட்டுமே வாசிக்கிறேன். என் ஆல்பங்கள் மூலமா என்னைத் தெரிஞ்ச பலருக்கும், நான் பலநூறு படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கிறதெல்லாம் தெரியாது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism