Published:Updated:

என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கம்! - Follow-up

என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கம்! - Follow-up
பிரீமியம் ஸ்டோரி

என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கம்!

ஆனந்த விகடனில் 13/12/2017 இதழில் `எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா?’ என்கிற தலைப்பில் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல்மின்நிலையத்தைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றிய கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையிலேயே NLC நிர்வாகத்தரப்பின் கருத்தையும் பதிவு செய்திருந்தோம் எனினும், அவர்கள் மேலும் சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவை இங்கே!

* உங்களது கட்டுரையின் நிறைவாக “வளர்ச்சி என்பது நம் நாட்டிற்கு அவசியமே என்றாலும், நாட்டு மக்களின் அழுகுரல்களால் அதைத் தட்டி எழுப்பக்கூடாது என்ற அறம் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எமது நிறுவனத்தைப் பொறுத்தவரையில் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதனைச் சுற்றியுள்ள சமூகம், சுற்றுச்சூழல், பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கம்! - Follow-up

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கம்! - Follow-up

கடந்த 07.12.2017 அன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு தேசியக்கருத்தரங்கில், ‘அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெறுவதன் மூலம் தனது புகழை மேம்படுத்தி வரும் மத்திய அரசு நிறுவனம்’ என்ற விருதினை, ‘ஸ்கோப்’ எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிலைக்குழு அமைப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம், இந்த நிறுவனம் தன்னைப்போன்று சமூகமும் சுற்றுச்சூழலும் மேம்பட்டால்தான் தனது வளர்ச்சி நிறைவானதாக, நிலையானதாக, நியாயமானதாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ளது என்பது விளங்கும்.

*   உங்களது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள எய்ட்டின் ப்ளாக் என்ற பகுதி குடியிருப்புகளுக்கு ஏற்ற பகுதி இல்லையென நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, பிற செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடமாகும். அப்பகுதியில் முறைகேடாக ஆக்கிரமித்துக் குடியேறியபின் `அங்கு தண்ணீர், மின்சாரம் இல்லை’ என்ற, சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களின் கூற்று முற்றிலும் விதண்டாவாதம் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வாலாஜா ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தியது, பெருமாள் ஏரிக்குச் செல்லும் முக்கியக் கால்வாய்களான செங்கால் ஓடை, பரவனாறு ஆகியவற்றைத் தூர்வாரி ஆழப்படுத்தியதற்கு மட்டும் இந்நிறுவனம் ரூபாய் 48 கோடியே 21 லட்சத்தைச் செலவிட்டுள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கம்! - Follow-up

இயந்திரங்களில் பராமரிப்புப் பணிகள் அல்லது பழுது நீக்குதல் பணிகளை மேற்கொள்ளும் முன், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே அவற்றிற்கான அனுமதி வழங்கப்படுகிறது. சில எதிர்பாராத தருணங்களில் தனிப்பட்டவர்களின் தவறுகளால் விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன. இது மிகவும் துரதிஷ்டவசமானது. எனினும், விபத்திலிருந்து கற்ற பாடம் மூலம், தன் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனம் மேலும் மேம்படுத்திவருகிறது.

என்.எல்.சி இந்தியா நிறுவனம் செய்து கொடுத்த அடிப்படை வசதிகள் மூலம் சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் நல்லவிதமாகவே காட்சியளிக்கின்றன என்பதற்கு நாங்கள் கொடுத்துள்ள படங்களே சான்றாகும்.

துணைப் பொதுமேலாளர்
மக்கள் தொடர்புத்துறை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism