Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, கோ.ராமமூர்த்தி

கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, கோ.ராமமூர்த்தி

Published:Updated:
கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

ருபக்கம் ‘குஜராத்ல நாங்கதாம்லே’ என பிஜேபி பித்தளைப் பானையை உருட்டினால், மறுபக்கம் ஆர்.கே.நகரில் வைத்து மண்சட்டியாய் உடைக்கிறார்கள் தமிழக மக்கள். அப்போ, தமிழகத்தில் எப்படித்தான் தாமரையை மலரச் செய்வது... இதோ இப்படித்தான்!

கலாய் இலக்கியம்!

தாமரை 1

சாலைகளின் நடுவிலுள்ள டிவைடரில் வளர்ந்திருக்கும் முட்செடிகளை நீக்கிவிட்டு, மூன்று அடி ஆழத்துக்கு நெடுக்காகக் குழி தோண்டலாம். அதில் தண்ணீரைப் பாய்ச்சி, தாமரை விதையைத் தூவிவிட்டால் போதும், மிஷன் சக்ஸஸ்.

தாமரை 2

ஆதார் கார்டு, பான் கார்டு போல தாமரை கார்டும் கட்டாயம் என அணுகுண்டு வீசலாம். வீட்டில் தாமரைப்பூ வளர்த்து, கன்னத்தோடு கன்னம் வைத்து செல்ஃபி தட்டினால்தான் கார்டு. எப்பூடி! ‘இனி கட்டாயம்’னு ஒரு சட்டம் கொண்டுவந்த மாதிரியும் ஆச்சு, வீட்டுக்கு வீடு தாமரையை மலரச் செய்தது மாதிரியும் ஆச்சு.

தாமரை 3

``நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர். நீர் நிலைகளில் ஏன் தாமரை வளர்த்தார்கள் தெரியுமா?’’ என நூறு குரூப்புக்கு மெசேஜ் தட்டிவிட்டு,   முதல்கட்டமாக, வைகை, மேட்டூர் அணைகளில் தாமரை விதையைத் தூவி விடலாம். செல்லூர் ராஜு டென்ஷன் ஆவாப்டி, சமாளிச்சுக்கோங்க...

தாமரை 4

“விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் அல்ல, லோட்டஸ் விஜய். கமலின் பெயர் தாமரைஹாசன். செந்தமிழன் சீமான் அல்ல, செந்தாமரை சீமான்” என ஹெச்.ராஜா மற்றும் சுப்ரமணிய சுவாமியைவிட்டு ஆதாரம் காண்பிக்கச் சொல்லலாம். அதுவே தாமரையை மலரச் செய்ய மூலாதாரமாகவும் மாறலாம்.

தாமரை 5

லோட்டஸ் டிவியின் பெயரை தாமரை டிவி என மாற்றலாம்.

கலாய் இலக்கியம்!

‘கற்றது தமிழ்’ படத்தில் ரயில்வே டனலுக்குள் பாய்ந்த பிரபாவும் ஆனந்தியும் பரலோகம் போகவில்லை. திருட்டு ரயிலேறித் திருவனந்தபுரம் போய்விட்டார்கள். சீரியல் கில்லராய் இருந்தபோதே சமத்தாக டீத்தூள் வாங்கிவந்து பிளாக் டீ போட்டுக் குடித்துக்கொண்டிருந்த பிரபா, தற்போது கட்டன்சாயா கடை தோடங்கி செட்டிலாகிவிட்டார். ‘சேட்டா, சிகரெட் உண்டோ’ எனக் கேட்பவர்களைப் பிடித்து உட்காரவைத்து, தன் கதையைக் கதறக்கதறச் சொல்லி நல்வழிப்படுத்திவருகிறார். நகங்களைக் கடிக்காமல், சாக்ஸ்களைத் துவைத்துப் போட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பிரபா, நேற்றுக்கூட ஆனந்திக்கு பிங்க் கலர் சுடிதார் வாங்கிக் கொடுத்தார். நெசமாத்தான் சொல்றேன்...

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

மக்கும் குக்கருக்கும் ஏதோ பல ஜென்ம பந்தம் இருக்குபோல! வீட்ல குக்கர் விசிலை மறக்காம எண்ணி, ஸ்டவ்வை சரியா ஆஃப் பண்ணுன புண்ணியமாகக்கூட இருக்கலாம். சூப்பரு! எவ்ளோ பெரிய பருப்பா இருந்தாலும் பத்து விசில் விட்டா வெந்துதானே ஆகணும். சீக்கிரமே நான் வெறும் குக்கர் இல்ல, டாப் டக்கர்னு நிரூபிச்சுக் காட்றேன். ஸ்லீப்பர் செல்களை எல்லாம் விசிலடிச்சு உசுப்பி விடறேன்.

இப்படிக்கு,

சிரித்த முகத்தோடு,
டி.டி.வி.தினகரன்,
எம்.எல்.ஏ, ஆர்.கே.நகர்.

கலாய் இலக்கியம்!

ரத்குமார் - விக்ரமன் காம்பினேஷனில் கிடைத்த அதி அற்புதமான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.  இந்தப் படத்தில் வரும் ‘ மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா’ வசனம் எவர்கிரீன் மீம் கமென்ட். சமீபமாக, அதைவிட வேறு இரண்டு டெம்ப்ளேட்கள் பிரபலமாகி வருகின்றன. ஒன்று ‘பாயசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்’, மற்றொன்று  `சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது.’ அதிலும், ‘சின்ராசு’ டெம்ப்ளேட்டை வைத்து கற்பனை காண்டாமிருகத்தை எக்குத்தப்பாய்த் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீம் க்ரியேட்டர்கள்.