Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

Published:Updated:
புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

2018 ஜெயமோகனுக்கான ஆண்டு. மகாபாரதத்தை மையப்படுத்தி அவர் எழுதிவரும் `வெண்முரசு’

புக்மார்க்

நாவல்கள் அதன் உச்சத்தை அடையவிருக்கின்றன. மகாபாரதப் போர் பற்றிய நான்கு நாவல்களை ஜெயமோகன் இந்த வருடம் எழுதவிருக்கிறார். இதற்கிடையே, விஜய் நடிக்க, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படம், ஷங்கரின் இந்தியன் -2 படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே வசனம் எழுதிமுடித்திருக்கும் `2.0’ இந்த ஆண்டு ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. 

புக்மார்க்

ஓவியம்: சண்முகவேல்

கடவுள் சந்தை - மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

புக்மார்க்

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இந்த நூற்றாண்டில் கடவுள் எந்தெந்த விதத்தில் சந்தைமயமாக்கப்படுகிறார் என்பதை ஆராய்கிறது இந்நூல்.  உலகமயமாதல், தாராளமயமாதல் போன்றவற்றால், வளரும் நாடுகளில் மதநம்பிக்கை குறைந்துவருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மைதானா, மதமும் தாராளவாத வணிகமும் இணைந்து செயல்பட முடியுமா, தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் மதம் ஒரு பெருவணிகமாக இயங்க முடியுமா, இந்தியா உண்மையிலேயே எவ்வளவு தூரம் மதச்சார்பின்மையை, சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது, உலகம் முழுக்கவே மத நம்பிக்கைகள் ஏன் இன்று வலுவடைகின்றன, அரசும் தனியார்துறையும் மதமும் இணைகிற புள்ளிகள் எப்படிப்பட்டவை எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே விடைகளையும் விவாதிக்கிறார் மீரா நந்தா. நூலின் பேசுபொருள் சார்ந்து பல்வேறு அரசியல் பொருளாதார வார்த்தைகளைத் தமிழிலேயே தர வேண்டும் என்ற மொழிபெயர்ப்பாளரின் முனைப்பு பாராட்டுக்குரியது. அதுவே சில இடங்களில் நம் வாசிப்பை சிரமப்படுத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சிப்பாதையின் பின்னுள்ள அரசியல் பண்பாட்டு விளைவுகளை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

ஆசிரியர்: மீரா நந்தா, தமிழில்: க.பூரணச்சந்திரன், வெளியீடு: அடையாளம்

புக்மார்க்

முழு நேர நடிகராகவே மாறியிருக்கிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி. ஏற்கெனவே ‘தீபன்’ என்கிற பிரெஞ்சுப் படத்தில் நடித்து, சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றவர் அடுத்து ‘ரூபா’  என்னும் படத்தில் நடிக்கிறார். இடையில் ‘எ பிரைவேட் வார்’ என்ற படத்திலும் நடித்துமுடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மூன்றுமுறை ஆஸ்கர் வென்ற ராபர்ட் ரிச்சர்ட்சன்.

41-வது புத்தகக்காட்சிக்குத் தயாராகிறது சென்னை.  செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் ஜனவரி 10 முதல் 22 வரை நடைபெறும் புத்தகக்காட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை சில புதுமையான ஏற்பாடுகளைச் செய்யவிருக்கிறார்கள். அரங்க வளாகத்தில் எட்டடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படவிருக்கிறது. வாங்கிய புத்தகங்களுடன் வள்ளுவரை அணைத்தபடி செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக இந்த ஏற்பாடாம். நாம் கேட்டதும் தகவல்களைச் சொல்லும் மனித ரோபோ மற்றும் புத்தகக் காட்சி குறித்த மொபைல் ஆப் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். அந்த மொபைல் அப்ளிகேஷனை நாம் டவுன்லோடு செய்துவிட்டால் எந்தெந்தப் புத்தகம் எந்தெந்த அரங்குகளில் கிடைக்கும், அந்த அரங்குக்கு எப்படிப் போக வேண்டுமென்கிற எல்லாத் தகவல்களும் கிடைக்குமாம்.

இந்தப் புத்தகக்காட்சியில் இவர்கள் வாங்க விரும்பும் புத்தகங்கள் என்னென்ன?

குட்டி ரேவதி

புக்மார்க்

“சசிகலா பாபு மொழியாக்கம் செய்துள்ள இஸ்மத் சுக்தாயின் `வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ என்ற அவரது சுயசரிதை நூலும், முபீன் சாதிகா மொழியாக்கம் செய்துள்ள இஸ்மத் சுக்தாயின் சிறுகதைகள் தொகுப்பும். ராபின் டேவிட்சனின் பயண நூல், இவற்றுடன் ஜா.தீபா மொழியாக்கம் செய்து, டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வரும் ‘ஒளி வித்தகர்கள்’ ஆகிய நூல்களை வாங்கலாம் எனத் திட்டம்.”

லீனா மணிமேகலை

புக்மார்க்

“பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள `போர்ஹே’யின் முழுத்தொகுதி, பூமணியின் புதிய நாவல் ‘கொம்மை’, யவனிகா ஸ்ரீராமின் கவிதைத் தொகுப்பான ‘அலெக்ஸாண்டரின் காலனி’, பாலசுப்ரமணியம் பொன்ராஜின் சிறுகதைத் தொகுப்பு ‘துரதிருஷ்டம் பிடித்த கப்பலின் கதை’, கவிஞர் நரனின் சிறுகதைத் தொகுப்பு ‘கேசம்’, அனோஜனின் சிறுகதைத் தொகுப்பு ‘பச்சை நரம்பு’, ஜெயமோகனின் பயணப் புத்தகங்களான ‘நூறு நிலங்களின் மலை’,  ‘குகைகளின் வழியே’ ஆகிய புத்தகங்களை வாங்கலாம் என்றிருக்கிறேன்.”

ஒளிப்பதிவாளர் செழியன்

புக்மார்க்

“இலக்கியம், அரசியல், சினிமா சார்ந்து வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் ஈழத்திலிருந்து எழுதப்படும் நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.”