Published:Updated:

வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்
பிரீமியம் ஸ்டோரி
வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

Published:Updated:
வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்
பிரீமியம் ஸ்டோரி
வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

னவரியும் மார்கழியும் சங்கமிக்கும் இந்தக் காலமே சென்னையின் வசந்த காலம். வேறு எந்தப்

வலுப்பெறட்டும் வாசிப்பு இயக்கம்

பருவத்தைவிடவும் இந்தப் பருவத்தில்தான் சென்னையின் காலநிலை மனதிற்கினியதாக இருக்கும். அதுமட்டுமன்றி, கலைக்கும் அறிவுக்கும் சிறப்பு சேர்க்கிற கலாசாரத் திருவிழாக்களின் காலமும் அதுதான். 

டிசம்பரிலிருந்தே வீதிக்கு வீதி இசைக்கச்சேரிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன.  சென்னைத் திரைப்பட விழாவும் நடந்துமுடிந்திருக்கிறது. இப்போது சென்னைப் புத்தகக்காட்சியும் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, புத்தக வெளீயிட்டு விழாக்கள், நூல் விமர்சனக்கூட்டங்கள், எழுத்தாளர் சந்திப்புகள் என்று வாசிப்பு உலகம் அமர்க்களப்படுகிறது. சென்னையின் அடையாளமாகவே மாறியிருக்கும் புத்தகக் காட்சிக்குத் தமிழகம் முழுவதிலிருந்தும் வாசகர்கள் சென்னையில் வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் புத்தகங்கள் உருவானதும் மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கற்கள். உலகில் பல அரசியல் இயக்கங்கள் புத்தகங்கள்மூலமே பரவின. தமிழகத்திலும் பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம், தேசிய இயக்கம் ஆகிய இயக்கங்கள் புத்தகங்களைப் பயன்படுத்தியே தங்கள் கொள்கைகளை மக்களிடம் பரப்பி, இயக்கங்களை விரிவுபடுத்தின. பல தலைவர்களும் புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினர்.

வளரும் இளைய தலைமுறை  வாசிப்புப் பழக்கத்தின் சுவையை அறியாமல் இருந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருந்தது. அத்தகைய சூழலில் அந்த அச்சம் அவசியமற்றது என்பதைத் தொடர்ச்சியாகத் தமிழகமெங்கும் வெற்றிகரமாக நடைபெற்றுவரும் புத்தகக்காட்சிகள் நிரூபிக்கின்றன. புதிய புதிய புத்தகங்களை வாசிக்கவும், தான் வாசித்து ரசித்ததை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், எழுத்தாளர்களைச் சந்திக்கவும் புத்தகக்காட்சிகள் களம் அமைத்துக்கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.  

அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்பது வேறு எந்தச் சமூகத்தைவிடவும் நம் தமிழ்ச்சமூகத்துக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆயிரமாயிரம் விஷயங்களைச்  சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப் ஆகியவற்றின் மூலம் அறிந்துகொண்டாலும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அது தலைமுறைகளைத் தாண்டிக் கடத்திக்கொண்டிருக்கிறது.

காலம் நிறையவே மாறியிருக்கிறது, புதுப்புது ஊடகங்கள் வழியே முன்பைவிடவும் நிறையவே வாசிக்கிறோம் என்பதுதான் உண்மை. சமூகவலைதளங்கள் அறிவுப்பரவலுக்கு வழிவகுக்கிறது என்றாலும், பல மேம்போக்கான செய்திகளும் போலியான தகவல்களும் அதன்வழியாகப் பரவுவது அதன் பலவீனம். இதற்கு மாறாகவும் மாற்றாகவும் புத்தகங்களே ஆழமான பார்வைகளை வாசகர்களுக்கு வழங்குகின்றன. பல்லாயிரம் ஆண்டுக்காலப் பழைமையான மொழியான தமிழ், வாசிப்பு மூலமாகவே வளர்ந்துவந்திருக்கிறது, இனியும் அது வளரும். புத்தகங்களைக் கொண்டாடுவோம், புதிய சிந்தனைகளை விதைப்போம்!