Published:Updated:

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif
``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

``நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க.. இந்த ஓவியம்லாம் நீங்க வரையுறீங்களா? இல்ல கம்ப்யூட்டரே வரைஞ்சிடுமானு… டிஜிட்டல் ஒரு டூல்தான்.. அது நம்ம பலம் இல்ல.

கடந்த சில வருட தமிழக, இந்திய நிகழ்வுகளில் சாமான்யனைப் பாதிக்கும் சம்பவங்கள் மீது `துல்லியத் தாக்குதல்’ நடத்தியிருப்பவை ஹாசிப் கானின் கார்ட்டூன்கள். அந்த சாமான்ய கார்ட்டூனிஸ்ட்டுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு, உங்கள் கார்ட்டூன்களில் உங்களின் டாப் ஃபேவரிட் எவை எனக் கேட்டேன். கஷ்டமான டாஸ்க் போல... யோசித்து தயங்கித் தயங்கிப் பட்டியலிட்டார். அவை இவை..!

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

1. ஆனந்த விகடன்ல கலாட்டூன் ஆரம்பிச்சப்போ வந்த முதல் கார்ட்டூன் இது.. தமிழ்ல 3டி டோன்ல வண்ண கார்ட்டூன் இதான் ஃபர்ஸ்ட்னு நினைக்குறேன். டெசோ மாநாடுங்குற பேர்ல நடந்த நாடகங்களை டெ`Show'னு அந்நியன் படத்துல `குமாரி’ பாடல்ல வர்ற மாதிரி வரைஞ்சது. மூணு நாலு ஐடியால வரைஞ்சேன் இதான் ஓகே ஆனது.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

2.`கலாட்டூன்’னு பேர் இருந்ததால முதல்ல ஜாலி டைப்லயே வரைஞ்சுட்டு இருந்தேன். இடிந்தகரைல போராட்டம் பண்ண மக்கள் மேல லத்தி சார்ஜ் நடந்தப்போ அரசாங்கத்தோட அராஜகத்தைப் பத்தி சீரியஸா வரையணும்னு தோணிச்சு. அப்போ வரைஞ்சது இது.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

3. ராகுல்காந்தி காங்கிரஸ் துணைத் தலைவரா அறிவிக்கப்பட்டப்போ வரைஞ்சது. முதல்ல பிளாஸ்டிக் மீசை வச்சிருக்குறமாதிரிதான் வரைஞ்சேன். அப்பறம் சோனியா காந்தி, மன்மோகன் சிங்லாம் வரணும்னு மீசை ஐடியாவை மட்டும் வச்சிக்கிட்டு கொஞ்சம் மாத்துனேன். மன்மோகன் சிங் பொம்மைமாதிரி தானே இருந்தாரு!

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

4. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரா பதவி ஏற்ற சில வாரத்துல நிலுவையில இருந்த பல தூக்குத் தண்டனைகளை உறுதிப்படுத்திட்டு இருந்தாரு. அதைவச்சு பிரணாப் தூக்குக் கயிறு விக்குற மாதிரி வரைஞ்சிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு ஐடியா தோணிச்சு அஹிம்சைய போதிச்ச காந்தியோட காங்கிரஸ்ல இருந்துட்டு இப்படிப் பண்றாரேனு சொல்லணும்னு முடிவு பண்ணி அப்படியே ராட்டைய சேர்த்தேன். 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

5. இலங்கைல காமன்வெல்த் மாநாடு நடந்தப்போ அதுல இந்திய பிரதமர் கலந்துகிட்டாரு. அதை வச்சு வரைஞ்சது. ரத்தமும் சதையும் கொஞ்சம் கோரமா இருக்குறது கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணும்தான் ஆனாலும் சில உண்மைகளை இப்படிச் சொல்லித்தானே ஆகணும். 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

6. காங்கிரஸ் ஆட்சில இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளத்துல போயிட்டு இருந்தப்போ வரைஞ்சது. ரூபாயை டாலருக்குள்ள புதைக்குற மாதிரி ஐடியா!

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

7. சென்னை வெள்ளத்துக்காக.. மக்கள் மாறி மாறி ஒரு ஒருத்தருக்கும் கைகொடுத்து உதவுனாங்கனு சிம்பிளா காட்டினேன்.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

8. அனிதா இறந்ததுக்கு ஒரு வாரம் தமிழ்நாடே கொந்தளிச்சிட்டு இருந்தது. ஆளாளுக்கு ஒருத்தரை குறை சொன்னாங்க. அடுத்தது என்ன. யார் இந்தப் பிரச்னைய கைல எடுக்கணும்னு சொல்லணும்னு நினைச்சேன். அம்பேத்கர், பெரியார், காமராஜர் இவங்களோட ஐடியாலஜிதான் இதுக்கான தீர்வு என்று சொல்றதுக்காக இப்படி வரைஞ்சேன். ஆனா இதுக்கும் சில விமர்சனங்கள் வந்தன. 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

9. ஒகி புயலுக்காக வரைஞ்சது. இந்த கார்ட்டூன்ல தண்ணில மூழ்குன போட் மட்டும்தான் இருக்கும். மீனவர்களே இருக்கமாட்டாங்க. அது பர்ப்பஸா தவிர்த்தது. திருவள்ளுவருக்கு மட்டும் போகஸ் வச்சி மீதி எல்லாம் வெறுமையா இருக்கும். புயல் ஏற்படுத்துன வெறுமைய வேற எப்படிச் சொல்றது?

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

10. ஜெயலலிதா இறந்த டைம்ல அவங்களை பத்தி ஒரு கார்ட்டூன் வரைஞ்சோம். இது அதுக்கு அடுத்த வாரம் வரைஞ்சது. அப்பதான் சசிகலா பவர் செண்டரா வெளில வர்றாங்க. பேச்சுவழக்குல உண்மையக் குழி தோண்டி புதைச்சுட்டாங்கனு சொல்வோம்ல அதான் ஐடியா. இதுல நல்லா கவனிச்சிங்கனா... குழிக்கு ஒரு பக்கம் சசிகலா & டீம் நிப்பாங்க. அந்தப் பக்கம் இருக்குறவங்களோட நிழல் குழில தெரியும்! 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

11. சென்னை வெள்ளம் டைம்ல ஆபீஸ் வந்துட்டு இருக்கும்போது ஒரு ஜெயலலிதா போஸ்டர் பாத்தேன். அதுல ஒருத்தர் முகம் பாதி தண்ணில மூழ்கி இருந்தது. அதை இன்ஸ்பிரேசனா வச்சி வரைஞ்சதுதான் இது. 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

12. மது விலக்குக்காகப் போராடுன சசிபெருமாளை கவர்மென்ட் கண்டுக்கலை. அவரை சாகவிட்டுடுச்சு அதுக்காக வரைஞ்சது. அந்த ஸ்கெட்சுக்கு மேல அவர் நிக்குறது. இறந்தாலும் அவர் குரல் நிக்கும்ங்குறதுக்கான குறியீடு. இந்த கார்ட்டூன் அமெரிக்கால சொசைட்டி ஆஃப் இல்லுஸ்ட்ரேட்டர் எக்ஸிபிசனுக்கு தேர்வு ஆச்சு.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

13. சங்கர்-கௌசல்யா பிரச்னைக்காக வரைஞ்சது. இந்தப் படத்துல ரெண்டு டீட்டெய்ல் இருக்கும். ஒண்ணு ஐபேட்லாம் வச்சிக்குற அளவுக்கு மாடர்னா மாறுன தலைமுறைகூட சாதில ஊறிருக்கு. இன்னொன்னு, ஆண்களுக்குலாம் அரிவாள்ல முன்பக்கமா ரத்தம் இருக்கும். ஆனா பெண்களுக்கு அரிவாள்ல பின்னாடி ரத்தமா இருக்கும். ஏன்னா அவங்க நேரடியா களத்துல இறங்கலைனாலும் பின்னாடி அவங்க வேலையும் இருக்கும்னு சொல்லத்தான்! 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

14. ஜல்லிக்கட்டு கடைசி நாள் போராட்டத்துக்காக வரைஞ்சது. அன்னைக்கு இப்படித்தானே இளைஞர்கள்லாம் கடல்ல இறங்கிட்டாங்க.. போலீஸ் அவங்களை கரைல இருக்காங்க. கரெக்டா போலீஸ் ட்ரெஸ் கலர் கரையோடவும்.. மாடுகளோட கலர் தண்ணியோடவும் மேட்ச் ஆச்சு.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

15. இது ஜனாதிபதி எலெக்சன் டைம்ல..  அப்போ ரஜினி வேற ஜனாபதியாகிடுவாருனு பேசிக்கிட்டாங்க அதுக்கும் சேர்த்து செட் ஆகிடுச்சு.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

16. இளவரசன் தற்கொலையப்போ மூணு நாலு கார்ட்டூன் வரைஞ்சேன் டெட்லைன்லாம் முடிஞ்சது ஆனா எதுவும் செட் ஆகல. இது கடைசியா வரைஞ்சது. இளவரசனைக் கொன்னது அந்த ட்ரெயின் இல்ல இந்த ட்ரெயின்தான்னு சொல்லதான் இந்த சாதி எக்ஸ்பிரஸ். எந்த அடையாளமும் வந்துடக்கூடாதுனு கவனமா வரைஞ்சேன். ஆனாலும் சில பேர் ஏன் இந்த சாதிக்காரங்க ஜாடைல வரைஞ்சீங்கனு கேட்டாங்க.

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

17. டார்கெட் வச்சி டாஸ்மாக் வருமானத்தைக் குவிச்சிக்கிட்டு இருந்தப்போ டாஸ்மாக்கால் ஒளிரும் தமிழகம் கான்சப்ட்ல வரைஞ்சது. 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

18. அண்ணன் என்ன தம்பி என்னனு ஸ்டாலினும் அழகிரியும் முறைச்சிட்டு இருந்த டைம்ல வரைஞ்சது. 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

19. பெங்களூர்ல எப்பவோ ஒரு ஸ்டில் பாத்தேன். இந்தியாவோட தோள்ல மோடி கை போட்டுருக்கறமாதிரி. சப்கான்சியஸ் மைண்ட்ல இருந்த இமேஜ் டிமானிட்டைசேஷன் டைம்ல ஞாபகத்துக்கு வந்தது. அதான் இன்ஸ்பிரேஷன்!

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif

20. சொல்றதுக்கில்ல பாத்தாலே புரியும். 

``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif


``நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க.. இந்த ஓவியம்லாம் நீங்க வரையுறீங்களா? இல்ல கம்ப்யூட்டரே வரைஞ்சிடுமானு… டிஜிட்டல் ஒரு டூல்தான்.. அது நம்ம பலம் இல்ல. நம்ம கிரியேட்டிவிட்டிதான் நம்ம பலம். நான் டிஜிட்டல் வரைஞ்சாலும் டிஜிட்டல்தன்மை இல்லாம இருக்கணும்னு நினைப்பேன்.அதுக்காக சின்னச் சின்ன டீட்டெய்லிங்ல ரொம்ப மெனக்கெடுவேன். பேப்பர்ல வரைஞ்சாதான் கிரியேட்டிவிட்டி வளரும். அடுத்த தலைமுறை ஆர்டிஸ்டுகளுக்கு நான் அதுதான் சொல்வேன். ஓவியம்ங்குறது Too personal அது நான் சார்ந்ததுனு நம்பணும். வரையணும்னு விரும்பினா 24 மணிநேரமும்வரைஞ்சிகிட்டே இருக்கணும்” என்று முடித்தார். தன் கார்ட்டூன்களால் மட்டுமே பேசிய ஒருவர் வார்த்தைகளால் பேசும்போது மிகச்சில சொற்களே என்றாலும் அத்தனை கனமானதாக வந்து விழுகிறது. 

ஹாப்பி பர்த்டே ப்ரோ!

அடுத்த கட்டுரைக்கு