Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

கருணாநிதியின் கொள்கையே.. ஜெயலலிதாவின் கொள்கையும்!

நானே கேள்வி... நானே பதில்!

கருணாநிதியின் கொள்கையே.. ஜெயலலிதாவின் கொள்கையும்!

Published:Updated:
##~##

''ராஜபக்ஷே...''

 ''சமீபத்தில் 'காக்கைச் சிறகினிலே’ என்கிற சிற்றிதழில் படித்த ஸீர்கோ பெகாஸின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...

'வான்வெளியில் கொல்லப்பட்டன
அந்தப் பறவைகள்
கொலைகாரர்களுக்கு எதிராக
நட்சத்திரங்களும் மேகங்களும்
காற்றும் கதிரவனும்
சாட்சி கூறவில்லை என்றாலும்
அடிவானம் அதுபற்றிக்
கேட்க விரும்பவில்லை என்றாலும்
மலைகளும் ஆறுகளும்
அவற்றை மறந்துபோய்விட்டாலும்
ஏதேனும் ஒரு மரம்
அந்தக் கொடுஞ்செயலைப்
பார்த்துத்தானிருக்கும்
தன் வேர்களில்
அக்கொடியோனின் பெயரை
எழுதிவைக்கத்தான் செய்யும்!’ ''

நானே கேள்வி... நானே பதில்!

- சாய்மீரா, மயிலாடுதுறை.

''திடீர் திடீரென்று பணக்காரர்களுக்கு ஏழைகள் மீது பாசம் பொங்குவது ஏன்?''

''அன்னை தெரசா ஒருமுறை கூறியது இது: 'இன்றைய காலகட்டத்தில் ஏழை களைப் பற்றிப் பேசுவது நாகரிகம் ஆகி விட்டது. துரதிர்ஷ்டவசமாக, ஏழை களுடன் பேசுவது நாகரிகம் அற்றதாக ஆகிவிட்டது!’ ''

- என்.ஜே.கந்தமாறன், சென்னை-99.

''இன்றைய அரசியல் சூழலில் 'நடக்கவே நடக்காது’ என்று எதையாவது அடித்துச் சொல்ல முடியுமா?''

''ஏன் முடியாது? 'நாடாளுமன்றத்தில் மு.க.அழகிரியைப் பேசவிடாமல் எதிர்க் கட்சிகள் ரகளை - கருணாநிதி கண்டனம்’. இதை உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?''

- எஸ்.திருப்பதி, திருத்தங்கல்.

''தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் எப்போதாவது முதல்வர் ஆவார்களா?''

''தமிழக முதல்வராக இருப்பதைவிட, காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பது எளிதான செயல் என்று நினைக்கிறீர்களா என்ன? உண்மையில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் 'அமைதிப் பூங்கா’வாக மாற்றுவதற்குச் செய்யப்பட வேண்டிய முயற்சிகளைவிட, சத்தியமூர்த்தி பவனை அமைதிப் பூங்காவாக ஆக்குவதற்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் படும் பாடு இருக்கிறதே, ஐயைய்யய்யய்யயோ!''

- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

''மன்மோகன் சிங் - ஜெயலலிதா... ஒப்பிடுக?''

''எந்தக் கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொன்னால்... மன்மோகன் சிங். பெங்களூரு கோர்ட்டில் மட்டும் தெரியாது என்று சொன்னால்... ஜெயலலிதா!''

- ஆர்.கே.சுந்தரம், சென்னை-26.

''தி.மு.க-வின் தீவிரப் புள்ளிகளே அடக்கி வாசிக்கும்போது, குஷ்பு மட்டும் சரவெடியாக வெடிக்கிறாரே எப்படி?''

''கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நிலத்தையும் வாங்கியிருக்க மாட்டாரோ என்னவோ?''

- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

''ஜெயலலிதாவின் ஆட்சியில் எதைக் கண்டு வியக்கிறீர்கள்?''

''கருணாநிதி செய்ததை எல்லாம் ஜெயலலிதா மாற்றுகிறார் என்று எல்லோரும் குறைபட்டுக்கொள்கிறார்கள். ஆனால், கருணாநிதி சொன்ன ஒரு விஷயத்தை ஜெயலலிதாவும் பின்பற்றுகிறாரே! அதான்... 'சொன்னதையும் செய்வோம். சொல்லாததை யும் செய்வோம்.’ அதை ஏன் யாரும் பாராட்டுவது இல்லை?''

- ஆர்.ஆர்.தமன், ஸ்ரீபெரும்புதூர்.

''சமீபத்தில் நெகிழவைத்த சம்பவம்?''

''நாளிதழில் படித்த செய்தி ஒன்று. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண் நர்ஸ் போல நடித்து, ஜனனி என்ற பெண்ணின் குழந்தையைத் திருடிய போது சிக்கிக் கைதானார். அவர் அளித்த வாக்குமூலம்தான் உருக்கமானது. அனுசுயா வுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவ ரோடு தொடர்ச்சியாகத் தகராறு ஆகியிருக் கிறது. ஒருகட்டத்தில் பிரச்னை தாங்காமல், தான் கர்ப்பமாகிவிட்டதாகப் பொய் சொல்லி, நடிக்கத் தொடங்கி இருக்கிறார் அனுசுயா. அதை நம்பிய குடும்பத்தினர், ஏழாவது மாதத்தில் பத்திரிகை அடித்து வளைகாப்பும் நடத்தி இருக்கிறார்கள். இதனால் பயந்துபோன அனுசுயா, என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையில், நர்ஸாக நடித்து குழந்தையைத் திருடியிருக்கிறார்.  குழந்தைஇன்மை என்பதைக் குற்றமாகக் கருதும் மனப்போக்கின் மீது வருத்தம்கொள்வதா, தாய்மை அடையாத தன்னை இந்த உறவும் உலகும் ஒதுக்கிவிடுமோ என்று மன உளைச்சலில் தவிக்கும் அனுசுயாவுக்காகப் பரிதாபப்படுவதா, இதை ஓர் இழிவாகக் கருதும் சமூக அமைப்பின் மீது கோபப்படுவதா?

- எஸ்.பவானி, பழநி.

நானே கேள்வி... நானே பதில்!