Published:Updated:

``சினிமாவுல என்ட்ரியாக ஆர்னவ் ரெடி!'' - நெகிழும் அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி

சு.சூர்யா கோமதி
``சினிமாவுல என்ட்ரியாக ஆர்னவ் ரெடி!'' - நெகிழும் அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி
``சினிமாவுல என்ட்ரியாக ஆர்னவ் ரெடி!'' - நெகிழும் அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி

`செக்கச் சிவந்த வானம்' படத்தில், தியாகு கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் அருண் விஜய். அவரைப் பற்றி மனைவி ஆர்த்தி பகிரும் பர்சனல் பக்கங்கள்...

``அவருக்கு சினிமாதான் எல்லாம் என்று திருமணத்துக்கு முன்பே என்னிடம் சொல்லியிருக்கார். சினிமாவைத் தொழிலாகப் பார்த்ததில்லை. அது அவரின் ரசனை, வாழ்க்கை. அதனால்தான் ஒவ்வொரு படத்துக்குமிடையே இவ்வளவு இடைவெளி. பணத்தைப் மட்டுமே யோசிச்சிருந்தா, வருஷத்துக்குப் பல படங்கள் நடிச்சிருக்க முடியும். அதில் அவருக்கு உடன்பாடில்லை. எதையும் ரசிச்சு செய்யணும்னு சொல்வார். வில்லனாக நடித்தாலும், ஹீரோவாக நடித்தாலும் அந்த கேரக்டரில் வாழணும்னு சொல்வார். அதுக்கு தகுந்த மாதிரி உடலாலும் மனதாலும் தயாராக ஆரம்பிச்சுருவார். அதனால்தான் அவருடைய கேரக்டர்கள் பேசப்படுது.

எங்க வீட்டில் அடுத்த தலைமுறையும் ரெடி ஆகிட்டார். அட ஆமாங்க... எங்க பையன் ஆர்னவ். அவங்க அப்பா மாதிரியே சினிமா மேலே க்ரேஸ். அவன் சினிமாவுல என்ட்ரி ஆக ரெடியா இருக்கான். குழந்தை நட்சத்திரமா நடிக்கும் வாய்ப்பு வருது. ரொம்ப சின்ன வயசு என்பதால், நாங்கதான் டிலே பண்ணிட்டிருக்கோம். சினிமா காதலர்களான அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்துட்டால் நிறைய டிஸ்கஸ் பண்ணிப்பாங்க. இன்னொரு சீக்ரெட் சொல்லவா? ஜெயம் ரவியின் மகன் ஆரவும், எங்கள் மகனும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இந்த ஏழெட்டு வயசிலேயே ரெண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் சினிமா பற்றி, சினிமாவில் வரும் சீன்கள், பேக்ரவுண்ட்ஸ் பற்றி பெரியவங்க மாதிரி டிஸ்கஸ் பண்ணிப்பாங்க. கேட்க ரொம்ப க்யூட்டாக இருக்கும். சினிமாவுக்கான அடுத்த தலைமுறை ரெடி ஆகிட்டாங்கனு நினைக்கும்போது சந்தோஷமாகவும் இருக்கு. சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதுதான் எங்க வாழ்க்கை'' என மகிழ்ச்சி பொங்கப் பேசினார் ஆர்த்தி.