Published:Updated:

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

Published:Updated:

பார்பி பொம்மை, டெடி பியர்கள் எல்லாம் இப்போ 'பப்பி பப்பி ஷேம்’ பாப்பாக்களுக்கான சொப்புச் சாமான்! கொஞ்சம் விவரம் தெரிந்ததுமே உயிருக்குயிராக ஓர் உயிரினத்தை வளர்க்கத் தொடங்கிவிடுகிறார்கள் இப்போது. அப்படி தமிழ்நாட்டுச் செல்லங்கள் யாரைத் தங்கள் செல்லமாக வைத்திருக்கிறார்கள் என்று ஒரு ரவுண்ட் விசாரித்தபோது...

 ஐஸ்வர்யா

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

''சரண்யான்னு எனக்கு ஒரு க்ளோஸ் ஃப்ரெண்ட் இருக்கா. ஃப்ரெண்ட்னு சொல்றதைவிட, என் சந்தோஷம்னு சொல்லணும். என் பிறந்த நாளுக்கு ஆச்சர்யப் பரிசா, 'லவ் பேர்ட்ஸ்’ கொடுத்தா. 'கிட்டி’, 'மிட்டி’னு மேடமே அதுக்குப் பேரும் வெச்சிட்டாங்க!''

ஸ்ரீநிதி கார்த்திக்

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

''எனக்கு நாய் வளர்க்க ரொம்பப் பிடிக்கும். 'கோல்டன் ரெட்ரிவர்’ இனத்தைச் சேர்ந்த ஒரு நாய்க்கு  டோஃபினு பேர் வெச்சு வளர்த்துட்டு வந்தேன். அப்புறம், 'க்ளியோ’னு ஒரு நாய் வளர்த்துட்டு வர்றேன். என் பொண்னு அதித்தி அவளுக்கே அவளுக்குன்னு அடம்பிடிச்சி ஒரு நாய் வாங்கி, 'பெல்லா’னு பேர்வெச்சுக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, சீராட்டி, பாராட்டி வளர்க்கிறா. அதித்தியோட சேர்த்து க்ளியோ, பெல்லா, டோஃபினு இப்போ எனக்கு நாலு பசங்க!''

கீர்த்தனா பார்த்திபன்:

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

 ''வோடஃபோன் நாய் மாதிரி என் கூடவே வருவான் வோட்கா. மூன்றரை வயசாகுது. சாக்லேட் கொடுத்தா, என்ன சொன்னாலும் செய்வான். ரொம்பப் பாசக்காரன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க காலேஜ்ல ஒரு சின்ன அணில் கண்கூட சரியா திறக்க முடியாமக் கிடந்துச்சு. பார்க்க பாவமா இருந்துச்சுன்னு வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துட்டேன். இங்க் ஃபில்லர்ல பால் கொடுத்து 'கிவி’ன்னு பேர்வெச்சு கொஞ்சிட்டு இருந்தோம். ஒருநாள் காலேஜ் முடிஞ்சி வந்து பார்த்தா, அமைதியா தூங்குற மாதிரியே செத்துப் போயிருந்தான். ஐ மிஸ் கிவி!''

சௌமியா அன்புமணி

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

''என் மூணாவது பொண்ணு சஞ்சுத்ரா வெள்ளை எலி வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினா. வீட்ல எல்லோரும் 'எலியா வளக்கிறீங்க’ன்னு முகம் சுழிச்சாங்க. ஆனா, இப்போ அது செய்யிற சேட்டையைப் பார்த்துட்டு எல்லாரும் அதோட ஃபேன்ஸ் ஆகிட்டாங்க. 'ராட் குட்டி’ன்னு என் பொண்ணு செல்லமா கூப்டதே, இப்போ அதுக்குப் பேர் ஆயிடுச்சு. கூண்டைப் பூட்டி வெச்சாலும் மூக்காலயே கதவைத் திறந்துட்டு ஓடி வந்திரும். ராட் குட்டி செம சுட்டி!''

ரஜினி:

க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!
க்ளியோ செல்லங்களின் செல்லங்கள்!

''டாம் க்ரூஸ்... இத்தாலியன் இனத்தைச் சேர்ந்த நாய். ஐஸ்க்ரீம் பைத்தியம். சாருக்கு ஃபேஸ்புக்ல அக்கவுன்ட்டே இருக்கு. ஜெர்ரி முதன்முதலா எங்க வீட்டுக்கு சாப்பாடு தேடி வந்தான். அம்மா அவனுக்குச் சாப்பாடு வைக்கவும், தினமும் 'மியாவ்’னு ஆஜர் ஆகி இங்கேயே செட்டில் ஆகிட்டான். டாமும் ஜெர்ரியும் சேர்ந்தா கிச்சன்ல எதுவுமே மிச்சம் இருக்காது. டாம், ஜெர்ரி கூட்டணியில் இப்பப் புதுசா 'மாலி’யும் இணைஞ்சு இருக்காங்க. மாலி என் மீன் குட்டி. தண்ணிக்குள்ளயே சுத்திச் சுத்தி வந்து டாமையும் ஜெர்ரியையும் சைட் அடிப்பாங்க. ஒரு முக்கியமான விஷயம்...  டாமுக்கு தீவிரமா பொண்ணு தேடிட்டு இருக்கோம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பொண்ணா இருந்தா, டாமோட ஃபேஸ்புக் ஐ.டி-க்கு பொண்ணு போட்டோ அனுப்பிவைங்க, ப்ளீஸ்...''

படங்கள் : வி.செந்தில்குமார்